உருவில்
காணப்படுகின்றவாறு கூம்பின் வடிவத்தைக் கொண்ட ஒப்பமான பாத்திரம் ஒன்றின் உட்பரப்பின் மீது பொருள் ஒன்று கிடை வட்டப் பாதை ஒன்றின் வழியே இயங்குகின்றது. நிலையான நோக்குனர் ஒருவர் நோக்குகின்றவாறு பொருளின் மீது தாக்கும் விசை / விசைகள்
- (1) பொருளின் நிறை மாத்திரம் ஆகும்
- (2) பொருளின் நிறையும் மேற்பரப்புக்குச் செவ்வனாகத் தாக்கும் மறுதாக்க விசையும் மாத்திரம் ஆகும்
- (3) பொருளின் நிறையும் மைய நாட்ட விசையும் மாத்திரம் ஆகும்
- (4) மேற்பரப்புக்குச் செவ்வனாக தாக்கும் மறுதாக்க விசையும் மையநாட்ட விசையும் மாத்திரம் ஆகும்
- (5) மையநாட்ட விசை மாத்திரம் ஆகும்
சரியான விடை: (2)
விளக்கம்
புவியில் உள்ள எந்த ஒரு பொருளுக்கும் அதன் நிறை கீழ் நோக்கி தாக்கும். தரப்பட்ட அமைப்பில் கூறப்பட்ட பொருள் இயங்கும் போது பாத்திரத்தின் உட்சுவருடன் தொடுகையில் இருப்பதால், மேற்பரப்புக்குச் செவ்வனாக தாக்கும் மறுதாக்க விசையும் இருக்கும். பாத்திரத்தின் உட்சுவர் மேற்பரப்பு ஒப்பமானது என்பதால், இங்கே உராய்வு இருக்காது.
நோக்குனருக்கு பொருளின் நிறையும் மேற்பரப்புக்குச் செவ்வனாகத் தாக்கும் மறுதாக்க விசையும் மாத்திரமே தெரியும்.
மறுதாக்க விசையின் கிடையான பிரித்த கூறே மையநாட்ட விசையாக தொழிற்படும். இவ்விசையை நோக்குனர் நோக்கமாட்டார்.