A/L 2001 MCQ – வினா 29 - விடையும் விளக்கமும்

வானியல் தொலைகாட்டி ஒன்று 5 cm குவியத்தூரமுள்ள பார்வைத்துண்டை உடையது. இயல்பான செப்பஞ்செய்கையில் பார்வைத்துண்டுக்கும் பொருளிக்குமிடையே உள்ள தூரம் 85 cm ஆகும். இவ்வியல்பான செப்பஞ்செய்கையில் தொலைகாட்டியின் கோணப் பெரிதாக்கம்
  1. (1) 90
  2. (2) 85
  3. (3) 80
  4. (4) 17
  5. (5) 16
சரியான விடை: (5)

விளக்கம்
வானியல் தொலைகாட்டியின் இயல்பான செப்பஞ்செய்கை என்பது விம்பம் முடிவிலி தூரத்தில் தோன்றும் நிலை ஆகும். இந்நிலையில் தொலைகாட்டியின் பார்வைத்துண்டுக்கும் பொருளிக்கும் இடையிலான தூரமானது (தொலைகாட்டியின் நீளம்) அவற்றின் குவியத்தூரங்களின் கூட்டுத் தொகைக்கு சமமாக இருக்கும்.

          பார்வைத்துண்டின் குவியத்தூரம் = 5 cm

          பார்வைத்துண்டுக்கும் பொருளிக்கும் இடைப்பட்ட தூரம் = 85 cm

ஆகவே,
          பொருளியின் குவியத்தூரம் = 85 - 5

                                                                    = 80 cm

இயல்பான செப்பஞ்செய்கையில் வானியல் தொலைகாட்டியின் கோணப்பெரிதாக்கமானது பொருளியின் குவியத்தூரத்திற்கும் பார்வைத்துண்டின் குவியத்தூரத்திற்கும் இடையிலுள்ள விகிதம் ஆகும்.

எனவே, 
        கோணப்பெரிதாக்கம் = fo / fe

                                                      = 80 / 5

                                                      = 16

No comments:

Post a Comment