A/L 2001 MCQ – வினா 38 - விடையும் விளக்கமும்

பக்கம் ஒன்றின் நீளம் 24 cm ஆகவும் முறிவுச்சுட்டி 1.5 ஆகவும் உள்ள கண்ணாடி சதுரமுகி ஒன்றினுள்ளே சிறிய வளிக்குமிழி ஒன்று உள்ளது. ஒரு பக்கத்திலிருந்து கண்ணாடிக் குற்றியினூடாக பார்க்கும் போது அப்பக்கத்திலிருந்து 12 cm தூரத்திலே வளிக் குமிழி இருப்பதாக தோன்றுகின்றது. எதிர்ப்பக்கத்திலிருந்து பார்க்கும் போது அப்பக்கத்திலிருந்து எவ்வளவு தூரத்தில் வளிக் குமிழி இருப்பதாகத் தோன்றும்?
  1. (1) 16 cm
  2. (2) 12 cm
  3. (3) 8 cm
  4. (4) 6 cm
  5. (5) 4 cm

சரியான விடை: (5)

விளக்கம்
கண்ணாடி சதுரமுகியின் ஒரு பக்கத்தில் (A யில்) இருந்து x தூரத்திலும் எதிர்ப்பக்கத்தில் (B யில்) இருந்து y தூரத்திலும் வளிக் குமிழ் இருக்கிறது என்க.

பக்கம் A யிலிருந்து பார்க்கும் போது, தோற்ற ஆழம் = 12 cm.

         முறிவுச்சுட்டி = உண்மை ஆழம் / தோற்ற ஆழம்

எனவே,
         1.5 = x / 12

            x = 18 cm

ஆகவே,
           y = 24 - 18

              = 6 cm

பக்கம் B யிலிருந்து பார்க்கும் போது,

         முறிவுச்சுட்டி = உண்மை ஆழம் / தோற்ற ஆழம்

         1.5 = 6 / தோற்ற ஆழம்

         தோற்ற ஆழம் = 4 cm.

எனவே, எதிர்ப்பக்கத்தில் இருந்து பார்க்கும் போது வளிக் குமிழி 4 cm இல் இருப்பதுபோல் தோன்றும்.

1 comment:

  1. அமுக்க படித்திறனின் அலகு

    ReplyDelete