A/L 2001 MCQ – வினா 23 - விடையும் விளக்கமும்

A and B என்னும் இரு சம திணிவுகள் இலேசான, நீட்டமுடியாத இழை ஒன்றினாலே தொடுக்கப்பட்டு உருவில் காணப்படுகின்றவாறு ஒப்பமான, இலேசான கப்பி ஒன்றின் மேலாக அவ்விழை அனுப்பப்பட்டுள்ளது. திணிவு B கீழ்நோக்கி இழுத்து நிலையாக வைக்கப்பட்டு விடுவிக்கப்படுகின்றது. பின்னர் நிகழும் B யின் இயக்கம் பற்றிப் பின்வரும் கூற்றுக்களில் எது திருத்தமானது?
  1. (1) B தொடக்கத் தானத்திற்கு திரும்பச் செல்லும்.
  2. (2) B மேலும் கீழும் அலைந்து ஓய்விற்கு வரும்.
  3. (3) B நிலையாக இருக்கும்.
  4. (4) B கீழ் நோக்கிச் செல்லத் தொடங்கும்.
  5. (5) B மேல் நோக்கிச் செல்லத் தொடங்கும்.
சரியான விடை: (3)

விளக்கம்
A, B என்பன சம திணிவுகளைக் கொண்டன. எனவே, இவற்றில் தாக்கும் நிறை சமனானது.

இலேசான, நீட்டமுடியாத இழை பயன்படுத்தப்படுவதால், இழையின் திணிவு புறக்கணிக்கப்படுவதுடன் அவ்விழையிலுள்ள இழுவைகள் ஒரேயளவானவை.

எனவே, இந்த தொகுதியில் தாக்கும் விளையுள் விசை பூச்சியம் ஆகும். இதனால், தொகுதியின் ஆர்முடுகலும் பூச்சியம் ஆகும்.

B நிலையாக வைத்து விடப்படுவதாலும் ஆர்முடுகல் பூச்சியம் என்பதாலும், B இயங்காமல் தொடர்ந்தும் ஓய்விலிருக்கும். A யும் ஓய்விலிருக்கும்.

எனவே, விடை (3) சரியானது.

No comments:

Post a Comment