Showing posts with label பொறியியல். Show all posts
Showing posts with label பொறியியல். Show all posts

A/L 2001 MCQ – வினா 40 - விடையும் விளக்கமும்

திணிவு M ஐ உடைய சீர் வளையொன்று அதன் நடுப் புள்ளியிலிருந்து விற்றராசு ஒன்றினால் தொங்கவிடப்பட்டுள்ளது. வளையின் இரு முனைகளிலும் m1, m2 (m2 > m1) என்னும் இரு திணிவுகள் வைக்கப்பட்டுள்ளன. உருவிற் காணப்படுகின்றவாறு முனை B யில் வைக்கப்பட்டுள்ள ஆப்பு ஒன்றைக் கொண்டு வளை கிடையாகப் பேணப்படுகின்றது. விற்றராசின் வாசிப்பு
  1. (1) 0
  2. (2) m1g
  3. (3) (M + m1)g
  4. (4) (M + 2m1)g
  5. (5) (M + m1 + m2)g

சரியான விடை: (4)

விளக்கம்

A/L 2001 MCQ – வினா 39 - விடையும் விளக்கமும்

ராக்கெட் ஒன்றினுள்ளே நிலைக்குத்தாக இருக்கும் குறுக்கு வெட்டுப் பரப்பளவு 3.0 m2 ஐ உடைய தாங்கியில் 1.8 x 104 kg திரவ ஒட்சிசன் உள்ளது. ரொக்கெட் புறப்படும் கணத்தில் அதன் ஆர்முடுகல் புவி தொடர்பாக நிலைக்குத்தாக மேல்நோக்கி 2.0 ms-1 ஆகும். அக் கணத்தில் தாங்கியின் அடி மீதுள்ள அமுக்கம்
  1. (1) 1.2 x 103 N m-2
  2. (2) 7.2 x 103 N m-2
  3. (3) 1.2 x 104 N m-2
  4. (4) 6.0 x 104 N m-2
  5. (5) 7.2 x 104 N m-2

சரியான விடை: (5)

விளக்கம்

A/L 2001 MCQ – வினா 35 - விடையும் விளக்கமும்

திணிவு 20 kg ஐ உடைய குழந்தை ஒன்று புறக்கணிக்கத்தக்க திணிவை உடைய ஊஞ்சல் ஒன்றில் அமர்ந்திருக்கின்றது. ஒவ்வொன்றும் 3 m நீளமுள்ள இரு கயிறுகளின் மூலம் ஊஞ்சல் அதன் சுழலைப் புள்ளிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஓர் ஊஞ்சலாடலின் போது குழந்தையின் உயர் கதி 3 ms-1 எனக் காணப்பட்டுள்ளது. ஒவ்வொரு கயிற்றிலும் உயர் இழுவை
  1. (1) 130 N
  2. (2) 160 N
  3. (3) 200 N
  4. (4) 260 N
  5. (5) 300 N

சரியான விடை: (1)

விளக்கம்

A/L 2001 MCQ – வினா 34 - விடையும் விளக்கமும்

உருவில் காணப்படுகின்றவாறு இறுக்கமாகக் கட்டப்பட்டுள்ள கயிறு ஒன்றில் ஒரு நிறை W தொங்கவிடப்பட்டுள்ளது.


கயிற்றின் இழுவை
  1. (1) அண்ணளவாக W
  2. (2) அண்ணளவாக
  3. (3) இலும் குறைவு
  4. (4) இற்கும்  W விற்குமிடைப்பட்டது
  5. (5) W விலும் மிகக் கூடியது

சரியான விடை: (5)

விளக்கம்

A/L 2001 MCQ – வினா 33 - விடையும் விளக்கமும்

உருவில் காணப்படுகின்றவாறு கூம்பின் வடிவத்தைக் கொண்ட ஒப்பமான பாத்திரம் ஒன்றின் உட்பரப்பின் மீது பொருள் ஒன்று கிடை வட்டப் பாதை ஒன்றின் வழியே இயங்குகின்றது. நிலையான நோக்குனர் ஒருவர் நோக்குகின்றவாறு பொருளின் மீது தாக்கும் விசை / விசைகள்
  1. (1) பொருளின் நிறை மாத்திரம் ஆகும்
  2. (2) பொருளின் நிறையும் மேற்பரப்புக்குச் செவ்வனாகத் தாக்கும் மறுதாக்க விசையும் மாத்திரம் ஆகும்
  3. (3) பொருளின் நிறையும் மைய நாட்ட விசையும் மாத்திரம் ஆகும்
  4. (4) மேற்பரப்புக்குச் செவ்வனாக தாக்கும் மறுதாக்க விசையும் மையநாட்ட விசையும் மாத்திரம் ஆகும்
  5. (5) மையநாட்ட விசை மாத்திரம் ஆகும்

சரியான விடை: (2)

விளக்கம்
புவியில் உள்ள எந்த ஒரு பொருளுக்கும் அதன் நிறை கீழ் நோக்கி தாக்கும். தரப்பட்ட அமைப்பில் கூறப்பட்ட பொருள் இயங்கும் போது பாத்திரத்தின் உட்சுவருடன் தொடுகையில் இருப்பதால், மேற்பரப்புக்குச் செவ்வனாக தாக்கும் மறுதாக்க விசையும் இருக்கும். பாத்திரத்தின் உட்சுவர் மேற்பரப்பு ஒப்பமானது என்பதால், இங்கே உராய்வு இருக்காது.

நோக்குனருக்கு பொருளின் நிறையும் மேற்பரப்புக்குச் செவ்வனாகத் தாக்கும் மறுதாக்க விசையும் மாத்திரமே தெரியும்.

மறுதாக்க விசையின் கிடையான பிரித்த கூறே மையநாட்ட விசையாக தொழிற்படும். இவ்விசையை நோக்குனர் நோக்கமாட்டார்.

A/L 2001 MCQ – வினா 32 - விடையும் விளக்கமும்

குழாய் PQ வினூடாக மாறா வீதத்தில் வளி பாய்கின்றது. வளி வெளியே செல்வதற்கு ஏற்படுத்தப்பட்டுள்ள X, Y என்னும் இரு மெல்லிய நிலைக்குத்துக் குழாய்களுக்கு மேலே இரு பிங்பொங் பந்துகள் நாப்பத்தில் (சமநிலையில்) மிதக்கின்றன. நாப்பத் தானத்தில் குழாயிலிருந்து இரு பந்துகளினதும் உயரங்கள் முறையே hx, hy ஆகும். பின்வரும் கூற்றுக்களில் எது உண்மையானது?
  1. (1) வளி P யிலிருந்து Q விற்கு பாயுமெனின், hx > hy
  2. (2) வளி P யிலிருந்து Q விற்கு பாயுமெனின், hx = hy
  3. (3) வளி P யிலிருந்து Q விற்கு பாயுமெனின், hx < hy
  4. (4) வளி Q யிலிருந்து P விற்கு பாயுமெனின், hx = hy
  5. (5) வளி Q யிலிருந்து P விற்கு பாயுமெனின், hx < hy
சரியான விடை: (1)

விளக்கம்

A/L 2001 MCQ – வினா 24 - விடையும் விளக்கமும்

இரு திணிவுகள் இலேசான இழை ஒன்றினாலே தொடுக்கப்பட்டு, ஒப்பமான கிடை மேசை ஒன்றின் மீது வைக்கப்பட்டு, உருவில் காணப்படுகின்றவாறு இழுக்கப்படுகின்றன.

இரு திணிவுகளையும் தொடுக்கும் இழையில் உள்ள இழுவை யாது?
  1. (1) 4 N
  2. (2) 8 N
  3. (3) 12 N
  4. (4) 20 N
  5. (5) 30 N
சரியான விடை: (2)

விளக்கம்

A/L 2001 MCQ – வினா 23 - விடையும் விளக்கமும்

A and B என்னும் இரு சம திணிவுகள் இலேசான, நீட்டமுடியாத இழை ஒன்றினாலே தொடுக்கப்பட்டு உருவில் காணப்படுகின்றவாறு ஒப்பமான, இலேசான கப்பி ஒன்றின் மேலாக அவ்விழை அனுப்பப்பட்டுள்ளது. திணிவு B கீழ்நோக்கி இழுத்து நிலையாக வைக்கப்பட்டு விடுவிக்கப்படுகின்றது. பின்னர் நிகழும் B யின் இயக்கம் பற்றிப் பின்வரும் கூற்றுக்களில் எது திருத்தமானது?
  1. (1) B தொடக்கத் தானத்திற்கு திரும்பச் செல்லும்.
  2. (2) B மேலும் கீழும் அலைந்து ஓய்விற்கு வரும்.
  3. (3) B நிலையாக இருக்கும்.
  4. (4) B கீழ் நோக்கிச் செல்லத் தொடங்கும்.
  5. (5) B மேல் நோக்கிச் செல்லத் தொடங்கும்.
சரியான விடை: (3)

விளக்கம்

A/L 2001 MCQ – வினா 22 - விடையும் விளக்கமும்

திணிவு m யையுடைய பொருள் ஒன்று இழை ஒன்றினாலே தொங்கவிடப்பட்டு, உருவில் காணப்படுகின்றவாறு ஒரு கிடை விசை F இன் மூலம் நாப்பத்தில் (சமநிலையில்) வைக்கப்பட்டுள்ளது. F இன் பருமன்
  1. (1) mg tanθ
  2. (2) mg sinθ
  3. (3) mg
  4. (4) mg cosθ
  5. (5)
சரியான விடை: (1)

விளக்கம்

A/L 2001 MCQ – வினா 05 - விடையும் விளக்கமும்

செங்கீழ்க்கதிர்கள், கழியூதாக் கதிர்கள், X கதிர்கள், ரேடியோ அலைகள், γ கதிர்கள் என்பன தொடர்பாகச் செய்யப்பட்டுள்ள பின்வரும் கூற்றுகளைக் கருதுக.
  1. (A) அவை எல்லாம் மின்காந்த அலைகள்
  2. (B) அவையெல்லாம் சுயாதீன வெளியில் ஒரே கதியுடன் செல்கின்றன
  3. (C) ரேடியோ அலைகள் ஆகவும் நீளமான அலைநீளத்தை உடையன
  4. மேலுள்ள கூற்றுக்களில்,

  5. (1) (A) மாத்திரம் உண்மையானது
  6. (2) (A), (B) ஆகியன மாத்திரம் உண்மையானவை
  7. (3) (A), (C) ஆகியன மாத்திரம் உண்மையானவை
  8. (4) (B), (C) ஆகியன மாத்திரம் உண்மையானவை
  9. (5) (A), (B), (C) ஆகிய எல்லாம் உண்மையானவை

சரியான விடை: (5)

விளக்கம்

A/L 2001 MCQ – வினா 04 - விடையும் விளக்கமும்

உருவிற் காணப்படுகின்றவாறு ஆரை 2R ஐ உடைய சீர் வட்டத்தகடு ஒன்றிலிருந்து ஆரை R ஐ உடைய வட்டத்துவாரம் ஒன்று வெட்டப்பட்டுள்ளது. துவாரத்தைக் கொண்ட தகட்டின் ஈர்ப்பு மையம் பெரும்பாலும் இருப்பதாக ஊகிக்கத்தக்க புள்ளி,

  1. (1) A
  2. (2) B
  3. (3) C
  4. (4) D
  5. (5) E

சரியான விடை: (4)

விளக்கம்

A/L 2001 MCQ – வினா 03 - விடையும் விளக்கமும்

A, B என்னும் இரு துணிக்கைகள் சம உந்தங்களைக் கொண்டிருக்கின்ற போதிலும் துணிக்கை B யின் வேகம் துணிக்கை A யின் வேகத்தின் நான்கு மடங்காகும்.
என்னும் விகிதம்

  1. (1) 
  2. (2) 
  3. (3) 1
  4. (4) 2
  5. (5) 4

சரியான விடை: (1)

விளக்கம்