A/L 2001 MCQ – வினா 13 - விடையும் விளக்கமும்

இரு முனைகளிலும் திறந்துள்ள நீளம் 50 cm ஐ உடைய பொள் உருளைக் குழாய் ஒன்று வளியில் வைக்கப்பட்டுள்ளது. தூய தொனிகளை உண்டாக்கும் ஒலி முதல் ஒன்று குழாயின் ஒரு முனைக்கு அண்மையில் வைக்கப்பட்டுள்ளது. காலப்பட்ட ஒலியின் மீடிறன் மிகத் தாழ்ந்த பெறுமானத்திலிருந்து ஆரம்பித்துப் படிப்படியாக அதிகரிக்கப்படுகின்றது. மீடிறன் 320 Hz இலே குழாய் பரிவுறுகின்றது. வளியில் ஒலியின் கதி
  1. (1) 160 ms-1
  2. (2) 320 ms-1
  3. (3) 340 ms-1
  4. (4) 360 ms-1
  5. (5) 640 ms-1
சரியான விடை: (2)

விளக்கம்

A/L 2001 MCQ – வினா 12 - விடையும் விளக்கமும்

புகையிரதம் ஒன்று ஒரு நேர்ப்பாதை வழியே செல்கின்றது. வேறொரு புகையிரதம் அதே திசையிலும் அதே கதியிலும் முதற் புகையிரதத்திற்கு பின்னால் செல்கின்றது. முதற்புகையிரதம் மீடிறன் fo ஐ உடைய சீழ்க்கையை ஊதுகின்றது. இரண்டாம் புகையிரதத்தில் அசையாமல் இருக்கும் பயணி ஒருவருக்குக் கேட்கும் சீழ்க்கையின் தோற்ற மீடிறன் f எனின்,
  1. (1) f  > fo
  2. (2) f  < fo
  3. (3) f  = fo
  4. (4) f  = 2fo
  5. (5) f  = 1/2 fo
சரியான விடை: (3)

விளக்கம்

A/L 2001 MCQ – வினா 11 - விடையும் விளக்கமும்

சமன்பாடு vi = kajs இல் v ஆனது வேகத்தையும் a ஆனது ஆர்முடுகலையும் s இடப்பெயர்ச்சியையும் வகைகுறிக்கின்றன. k ஒரு மாறிலி. i, j ஆகியன நிறைவெண்கள். சமன்பாடு பரிமாண முறைப்படி திருத்தமாக இருப்பதற்கு i, j ஆகியவற்றின் பெறுமானங்கள் எவையாக இருத்தல் வேண்டும்?
  1. (1) 1, 1
  2. (2) 1, 2
  3. (3) 2, 1
  4. (4) 2, 2
  5. (5) 2, 3
சரியான விடை: (3)

விளக்கம்

A/L 2001 MCQ – வினா 10 - விடையும் விளக்கமும்

உருவில் காணப்படும் கதவம் (gate) எதற்குச் சமவலுவானது?
  1. (1)
  2. (2)
  3. (3)
  4. (4)
  5. (5)
சரியான விடை: (5)

விளக்கம்

A/L 2001 MCQ – வினா 09 - விடையும் விளக்கமும்

புரோத்தன் ஒன்று ஒரு அணுக்கரு (X) இற்கு எய்தப்படுகின்றது. உருவில் காணப்படும் பாதைகளில் எது புரோத்தன் செல்லும் பாதையாக இருக்கமாட்டாது?
  1. (1) P
  2. (2) Q
  3. (3) R
  4. (4) S
  5. (5) T
சரியான விடை: (4)

விளக்கம்

A/L 2001 MCQ – வினா 08 - விடையும் விளக்கமும்

புவியின் திணிவும் ஆரையும் முறையே M, R ஆகும். புவியின் மேற்பரப்பிலே திணிவு m ஐ உடைய ராக்கெட் ஒன்றின் தப்பல் வேகம்
  1. (1) 
  2. (2) 
  3. (3) 
  4. (4) 
  5. (5)

சரியான விடை: (1)

விளக்கம்

A/L 2001 MCQ – வினா 07 - விடையும் விளக்கமும்

2 V கலம் ஒன்றுக்குக் குறுக்கே தொடுக்கப்பட்டுள்ள 1 µF கொள்ளளவி ஒன்றில் சேமித்து வைக்கப்பட்டுள்ள மின்சக்தி
  1. (1) 5 x 10-7 J
  2. (2) 1 x 10-6 J
  3. (3) 2 x 10-6 J
  4. (4) 4 x 10-6 J
  5. (5) 6 x 10-6 J

சரியான விடை: (3)

விளக்கம்

A/L 2001 MCQ – வினா 06 - விடையும் விளக்கமும்

வெப்பநிலை அதிகரிக்கும் போது கண்ணாடியுள் இரச வெப்பமானியில் இரச நிரல் ஏறுகின்றது. இதற்கு மிகப் பொருத்தமான காரணம்
  1. (1) இரசம் செவ்விய வெப்பக் கடத்தியாக இருப்பதாகும்
  2. (2) கண்ணாடி அரிதில் வெப்பக் கடத்தியாக இருப்பதாகும்
  3. (3) வெப்பமாக்கும் போது கண்ணாடி விரிவதாகும்
  4. (4) வெப்பமாக்கும் போது கண்ணாடியின் விரிவு இராசத்தின் விரிவிலும் பார்க்க குறைவாக இருப்பதாகும்
  5. (5) வெப்பநிலை அதிகரிக்கும் போது இரசம் சீராக விரிவதாகும்

சரியான விடை: (4)

விளக்கம்

A/L 2001 MCQ – வினா 05 - விடையும் விளக்கமும்

செங்கீழ்க்கதிர்கள், கழியூதாக் கதிர்கள், X கதிர்கள், ரேடியோ அலைகள், γ கதிர்கள் என்பன தொடர்பாகச் செய்யப்பட்டுள்ள பின்வரும் கூற்றுகளைக் கருதுக.
  1. (A) அவை எல்லாம் மின்காந்த அலைகள்
  2. (B) அவையெல்லாம் சுயாதீன வெளியில் ஒரே கதியுடன் செல்கின்றன
  3. (C) ரேடியோ அலைகள் ஆகவும் நீளமான அலைநீளத்தை உடையன
  4. மேலுள்ள கூற்றுக்களில்,

  5. (1) (A) மாத்திரம் உண்மையானது
  6. (2) (A), (B) ஆகியன மாத்திரம் உண்மையானவை
  7. (3) (A), (C) ஆகியன மாத்திரம் உண்மையானவை
  8. (4) (B), (C) ஆகியன மாத்திரம் உண்மையானவை
  9. (5) (A), (B), (C) ஆகிய எல்லாம் உண்மையானவை

சரியான விடை: (5)

விளக்கம்

A/L 2001 MCQ – வினா 04 - விடையும் விளக்கமும்

உருவிற் காணப்படுகின்றவாறு ஆரை 2R ஐ உடைய சீர் வட்டத்தகடு ஒன்றிலிருந்து ஆரை R ஐ உடைய வட்டத்துவாரம் ஒன்று வெட்டப்பட்டுள்ளது. துவாரத்தைக் கொண்ட தகட்டின் ஈர்ப்பு மையம் பெரும்பாலும் இருப்பதாக ஊகிக்கத்தக்க புள்ளி,

  1. (1) A
  2. (2) B
  3. (3) C
  4. (4) D
  5. (5) E

சரியான விடை: (4)

விளக்கம்

A/L 2001 MCQ – வினா 03 - விடையும் விளக்கமும்

A, B என்னும் இரு துணிக்கைகள் சம உந்தங்களைக் கொண்டிருக்கின்ற போதிலும் துணிக்கை B யின் வேகம் துணிக்கை A யின் வேகத்தின் நான்கு மடங்காகும்.
என்னும் விகிதம்

  1. (1) 
  2. (2) 
  3. (3) 1
  4. (4) 2
  5. (5) 4

சரியான விடை: (1)

விளக்கம்

A/L 2001 MCQ – வினா 02 - விடையும் விளக்கமும்

செறிவு 10-12 W m-2 ஐ உடைய ஒலியானது 0 தெசிபல் செறிவு மட்டத்தை உடையதென வரையறுக்கப்படுகின்றது. செறிவு 10-8 W m-2 ஐ உடைய ஒலியின் செறிவு மட்டம்
  1. (1) -40 dB
  2. (2) 20 dB
  3. (3) 40 dB
  4. (4) 60 dB
  5. (5) 80 dB
  6.  
சரியான விடை: (3)


விளக்கம்

A/L 2001 MCQ – வினா 01 - விடையும் விளக்கமும்

eV (இலத்திரன்-வோல்ற்று) என்பது
  1. (1) வலுவின் அலகு
  2. (2) சக்தியின் அலகு
  3. (3) மின்னேற்றத்தின் அலகு
  4. (4) வோல்ற்றளவின் அலகு
  5. (5) அழுத்த வித்தியாசத்தின் அலகு
  6.  
சரியான விடை: (2)

விளக்கம்

A/L 2001 பௌதிகவியல் MCQ - 51 - 60

  1. சம இடைவெளியுள்ள கடத்தும் n எண்ணிக்கையான சமாந்தரத் தகடுகளைக் கொள்ளளவி ஒன்று கொண்டுள்ளது. உருவில் காணப்படுகின்றவாறு ஒன்றுவிட்டொரு தகடுகளை ஒருமிக்கத் தொடுப்பதன் மூலம் கொள்ளளவியின் நேர்த்தகடு அமைக்கப்பட்டிருக்கும் அதேவேளை எஞ்சியிருக்கும் மற்றைய தகடுகளின் மூலம் கொள்ளளவியின் மறைத்தகடு அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தகட்டினதும் பரப்பளவு A ஆகவும் இரு அடுத்துள்ள தகடுகளுக்கிடையே உள்ள இடைவெளி d ஆகவும் இருப்பின், அவ்வொழுங்கமைப்பின் கொள்ளளவம்
    1. (1)
    2. (2)
    3. (3)
    4. (4)
    5. (5)
    6. Answer with explanation
  2. காட்டப்பட்டுள்ளவாறு S1, S2, S3, S4
    என்பன +q, -q என்னும் இரு சம, எதிர் மின்னேற்றங்களின் அயலில் வரையப்பட்ட நான்கு கவுச மேற்பரப்புகளாகும். S1, S2, S3, S4 ஆகிய மேற்பரப்புகளினூடாக உள்ள தேறிய மின் பாயம் முறையே ϕ1, ϕ2, ϕ3, ϕ4 ஆகியவற்றால் வகைக் குறிக்கப்படுகின்றது. பின்வருவனவற்றில் எது திருத்தமானது?
    1. (1) ϕ1 = 0, ϕ2 = 0, ϕ3 = 0, ϕ4 = 0
    2. (2) ϕ1 = 0, ϕ2 > 0, ϕ3 < 0, ϕ4 = 0
    3. (3) ϕ1 > 0, ϕ2 > 0, ϕ3 < 0, ϕ4 > 0
    4. (4) ϕ1 > 0, ϕ2 > 0, ϕ3 < 0, ϕ4 = 0
    5. (5) ϕ1 < 0, ϕ2 > 0, ϕ3 < 0, ϕ4 > 0
    6. Answer with explanation
  3. இலட்சிய வாயு ஒன்று P-V வரிப்படத்தில் காணப்படுகின்றவாறு ஒரு சக்கர செயன்முறையினூடாகக் கொண்டு செல்லப்படுகின்றது.
    Ub > Ua எனின், பின்வரும் கூற்றுக்களைக் கருதுக.
    1. (A) முழுச் செயன்முறைக்கும் வாயுவினால் செய்யப்படும் தேறிய வேலை நேர்ப் பெறுமானத்தை எடுக்கின்றது.
    2. (B) பாத ab வழியே வாயுவைக் கொண்டு செல்லும் போது வெப்பம் உறிஞ்சப்படும் அதேவேளை பாதை ba வழியே வாயுவைக் கொண்டு செல்லும் போது வெப்பம் விடுவிக்கப்படுகின்றது.
    3. (C) செயன்முறையின் தொடக்கத்தில் வாயுவின் வெப்பநிலையும் செயன்முறையின் இறுதியில் வாயுவின் வெப்பநிலையும் சமம்.
    4. மேலேயுள்ள கூற்றுக்களில்
       
    5. (1) (A) மாத்திரம் உண்மையானது
    6. (2) (A), (B) ஆகியன மாத்திரம் உண்மையானவை
    7. (3) (A), (C) ஆகியன மாத்திரம் உண்மையானவை
    8. (4) (B), (C) ஆகியன மாத்திரம் உண்மையானவை
    9. (5) (A), (B), (C) ஆகிய எல்லாம் உண்மையானவை
    10. Answer with explanation
  4. அலைநீளம் λ வை உடைய ஒரு நிற ஒளி ஒன்று குறித்த உலோகம் ஒன்றின் மீது விழும் போது அவ் உலோகத்திலிருந்து இலத்திரன்கள் காலப்படுகின்றன. h என்பது பிளாங் மாறிலியும் c என்பது ஒளியின் வேகமும் ஆகும். பின்வரும் கூற்றுக்களைக் கருதுக.
    1. (A) உலோகத்திலிருந்து காலப்படும் இலத்திரன்களின் இயக்கப்பாட்டுச் சக்தி hc/λ இலும் குறைவானது.
    2. (B) உலோகத்திலிருந்து காலப்படும் இலத்திரன்களின் இயக்கப்பாட்டுச் சக்தி உலோகம் செய்யப்பட்டுள்ள திரவியத்தின் மீது தங்கியிருப்பதில்லை.
    3. (C) இலத்திரன்கள் காலப்படும் வீதம் அலைநீளம் λ மீது தங்கியிருக்கின்றது.
    4. மேலே உள்ள கூற்றுக்களில்,
       
    5. (1) (A) மாத்திரம் உண்மையானது
    6. (2) (A), (B) ஆகியன மாத்திரம் உண்மையானவை
    7. (3) (A), (C) ஆகியன மாத்திரம் உண்மையானவை
    8. (4) (B), (C) ஆகியன மாத்திரம் உண்மையானவை
    9. (5) (A), (B), (C) ஆகிய எல்லாம் உண்மையானவை
    10. Answer with explanation
  5. நுனி ஒன்றில் விறைப்பாக நிலைப்படுத்தப்பட்ட நிலைக்குத்தான மீள் தன்மை இழை ஒன்றின் கீழ் நுனியிலே திணிவு ஒன்று இணைக்கப்பட்டுள்ளது. இப்போது ஒரு விசை F ஐப் பிரயோகிப்பதன் மூலம் திணிவு ஒரு மாறா வேகத்துடன் கீழ் நோக்கி அசைக்கப்படுகின்றது. நேரம் t உடன் F இன் மாறலை மிகச் சிறந்த முறையில் வகைகுறிப்பது
    1. (1)
    2. (2)
    3. (3)
    4. (4)
    5. (5)
    6. Answer with explanation
  6. பொருள் ஒன்றின் இடப்பெயர்ச்சி (y) ஆனது நேரம் (t) உடன் மாறும் விதத்தை வரைபு காட்டுகின்றது.
    பின்வரும் வரைபுகளில் எது பொருளின் இயக்கப்பாட்டுச் சக்தி (K) ஆனது நேரம் (t) உடன் மாறும் விதத்தை மிகச் சிறந்த முறையில் வகைக் குறிக்கின்றது?
    1. (1)
    2. (2)
    3. (3)
    4. (4)
    5. (5)
    6. Answer with explanation
  7. குறித்த பொருள் ஒன்றின் இடப்பெயர்ச்சி (s) - நேர (t) வளையி உருவில் காணப்படுகின்றது.
    நேரொத்த வேக (v) - நேர (t) வளையியை மிகச் சிறந்த முறையில் வகைக் குறிப்பது
    1. (1)
    2. (2)
    3. (3)
    4. (4)
    5. (5)
    6. Answer with explanation
  8. வரிப்படத்தில்
    காணப்படுகின்றவாறு A, B என்னும் இரு நீண்ட சமாந்தரக் கம்பிகள் ஒரே திசையிலே சர்வசம மின்னோட்டங்களைக் கொண்டு செல்கின்றன. பின்வரும் வரிப்படங்களில் எது கம்பிகளுக்குச் செங்குத்தான தளம் ஒன்றில் உள்ள காந்தப் புலத்தை மிகச் சிறந்த முறையில் வகைக் குறிக்கின்றது?
    1. (1)
    2. (2)
    3. (3)
    4. (4)
    5. (5)
    6. Answer with explanation
  9. உருவில்
    காணப்படுகின்றவாறு U-குழாய் ஒன்றில் திரவம் ஒன்று உள்ளது. குழாய் கிடையாக வலப்பக்கமாக ஒரு மாறா ஆர்முடுகல் a யுடன் இயங்கச் செய்யப்படும் போது குழாயின் இரு புயங்களிலும் உள்ள திரவ நிரல்களின் உயரங்களுக்கிடையே உள்ள வித்தியாசம்
    1. (1)
    2. (2)
    3. (3)
    4. (4)
    5. (5)
    6. Answer with explanation
  10. ஒரு
    நீண்ட கம்பி ABC ஆனது 60° கோணத்தை ஆக்குமாறு வளைக்கப்பட்டு, உருவில் காணப்படுகின்றவாறு சீர்க் காந்தப் புலம் ஒன்றுக்கு செங்குத்தான தளம் ஒன்றில் வைக்கப்பட்டுள்ளது. அதே திரவியத்தினால் செய்யப்பட்ட சம குறுக்கு வெட்டுப் பரப்பளவைக் கொண்ட வேறொரு நீண்ட நேரக் கம்பி PQ ஆனது முக்கோணி RBS எப்போதும் சமபக்க முக்கோணியாக இருக்குமாறு கம்பி ABC மீது ஒரு மாறா வேகத்துடன் இழுக்கப்படுகின்றது. முக்கோணி RBS இலே தூண்டப்படும் மின்னோட்டம் (I) ஆனது நேரம் (t) உடன் மாறுவதை மிகச் சிறந்த முறையில் வகைக்குறிக்கும் வரைபு யாது?
    1. (1)
    2. (2)
    3. (3)
    4. (4)
    5. (5)
    6. Answer with explanation

A/L 2001 Physics MCQs: 1 - 10 | 11 - 20 | 21 - 30 | 31 - 40 | 41 - 50 | 51 - 60