A/L 2001 பௌதிகவியல் MCQ - 51 - 60

  1. சம இடைவெளியுள்ள கடத்தும் n எண்ணிக்கையான சமாந்தரத் தகடுகளைக் கொள்ளளவி ஒன்று கொண்டுள்ளது. உருவில் காணப்படுகின்றவாறு ஒன்றுவிட்டொரு தகடுகளை ஒருமிக்கத் தொடுப்பதன் மூலம் கொள்ளளவியின் நேர்த்தகடு அமைக்கப்பட்டிருக்கும் அதேவேளை எஞ்சியிருக்கும் மற்றைய தகடுகளின் மூலம் கொள்ளளவியின் மறைத்தகடு அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தகட்டினதும் பரப்பளவு A ஆகவும் இரு அடுத்துள்ள தகடுகளுக்கிடையே உள்ள இடைவெளி d ஆகவும் இருப்பின், அவ்வொழுங்கமைப்பின் கொள்ளளவம்
    1. (1)
    2. (2)
    3. (3)
    4. (4)
    5. (5)
    6. Answer with explanation
  2. காட்டப்பட்டுள்ளவாறு S1, S2, S3, S4
    என்பன +q, -q என்னும் இரு சம, எதிர் மின்னேற்றங்களின் அயலில் வரையப்பட்ட நான்கு கவுச மேற்பரப்புகளாகும். S1, S2, S3, S4 ஆகிய மேற்பரப்புகளினூடாக உள்ள தேறிய மின் பாயம் முறையே ϕ1, ϕ2, ϕ3, ϕ4 ஆகியவற்றால் வகைக் குறிக்கப்படுகின்றது. பின்வருவனவற்றில் எது திருத்தமானது?
    1. (1) ϕ1 = 0, ϕ2 = 0, ϕ3 = 0, ϕ4 = 0
    2. (2) ϕ1 = 0, ϕ2 > 0, ϕ3 < 0, ϕ4 = 0
    3. (3) ϕ1 > 0, ϕ2 > 0, ϕ3 < 0, ϕ4 > 0
    4. (4) ϕ1 > 0, ϕ2 > 0, ϕ3 < 0, ϕ4 = 0
    5. (5) ϕ1 < 0, ϕ2 > 0, ϕ3 < 0, ϕ4 > 0
    6. Answer with explanation
  3. இலட்சிய வாயு ஒன்று P-V வரிப்படத்தில் காணப்படுகின்றவாறு ஒரு சக்கர செயன்முறையினூடாகக் கொண்டு செல்லப்படுகின்றது.
    Ub > Ua எனின், பின்வரும் கூற்றுக்களைக் கருதுக.
    1. (A) முழுச் செயன்முறைக்கும் வாயுவினால் செய்யப்படும் தேறிய வேலை நேர்ப் பெறுமானத்தை எடுக்கின்றது.
    2. (B) பாத ab வழியே வாயுவைக் கொண்டு செல்லும் போது வெப்பம் உறிஞ்சப்படும் அதேவேளை பாதை ba வழியே வாயுவைக் கொண்டு செல்லும் போது வெப்பம் விடுவிக்கப்படுகின்றது.
    3. (C) செயன்முறையின் தொடக்கத்தில் வாயுவின் வெப்பநிலையும் செயன்முறையின் இறுதியில் வாயுவின் வெப்பநிலையும் சமம்.
    4. மேலேயுள்ள கூற்றுக்களில்
       
    5. (1) (A) மாத்திரம் உண்மையானது
    6. (2) (A), (B) ஆகியன மாத்திரம் உண்மையானவை
    7. (3) (A), (C) ஆகியன மாத்திரம் உண்மையானவை
    8. (4) (B), (C) ஆகியன மாத்திரம் உண்மையானவை
    9. (5) (A), (B), (C) ஆகிய எல்லாம் உண்மையானவை
    10. Answer with explanation
  4. அலைநீளம் λ வை உடைய ஒரு நிற ஒளி ஒன்று குறித்த உலோகம் ஒன்றின் மீது விழும் போது அவ் உலோகத்திலிருந்து இலத்திரன்கள் காலப்படுகின்றன. h என்பது பிளாங் மாறிலியும் c என்பது ஒளியின் வேகமும் ஆகும். பின்வரும் கூற்றுக்களைக் கருதுக.
    1. (A) உலோகத்திலிருந்து காலப்படும் இலத்திரன்களின் இயக்கப்பாட்டுச் சக்தி hc/λ இலும் குறைவானது.
    2. (B) உலோகத்திலிருந்து காலப்படும் இலத்திரன்களின் இயக்கப்பாட்டுச் சக்தி உலோகம் செய்யப்பட்டுள்ள திரவியத்தின் மீது தங்கியிருப்பதில்லை.
    3. (C) இலத்திரன்கள் காலப்படும் வீதம் அலைநீளம் λ மீது தங்கியிருக்கின்றது.
    4. மேலே உள்ள கூற்றுக்களில்,
       
    5. (1) (A) மாத்திரம் உண்மையானது
    6. (2) (A), (B) ஆகியன மாத்திரம் உண்மையானவை
    7. (3) (A), (C) ஆகியன மாத்திரம் உண்மையானவை
    8. (4) (B), (C) ஆகியன மாத்திரம் உண்மையானவை
    9. (5) (A), (B), (C) ஆகிய எல்லாம் உண்மையானவை
    10. Answer with explanation
  5. நுனி ஒன்றில் விறைப்பாக நிலைப்படுத்தப்பட்ட நிலைக்குத்தான மீள் தன்மை இழை ஒன்றின் கீழ் நுனியிலே திணிவு ஒன்று இணைக்கப்பட்டுள்ளது. இப்போது ஒரு விசை F ஐப் பிரயோகிப்பதன் மூலம் திணிவு ஒரு மாறா வேகத்துடன் கீழ் நோக்கி அசைக்கப்படுகின்றது. நேரம் t உடன் F இன் மாறலை மிகச் சிறந்த முறையில் வகைகுறிப்பது
    1. (1)
    2. (2)
    3. (3)
    4. (4)
    5. (5)
    6. Answer with explanation
  6. பொருள் ஒன்றின் இடப்பெயர்ச்சி (y) ஆனது நேரம் (t) உடன் மாறும் விதத்தை வரைபு காட்டுகின்றது.
    பின்வரும் வரைபுகளில் எது பொருளின் இயக்கப்பாட்டுச் சக்தி (K) ஆனது நேரம் (t) உடன் மாறும் விதத்தை மிகச் சிறந்த முறையில் வகைக் குறிக்கின்றது?
    1. (1)
    2. (2)
    3. (3)
    4. (4)
    5. (5)
    6. Answer with explanation
  7. குறித்த பொருள் ஒன்றின் இடப்பெயர்ச்சி (s) - நேர (t) வளையி உருவில் காணப்படுகின்றது.
    நேரொத்த வேக (v) - நேர (t) வளையியை மிகச் சிறந்த முறையில் வகைக் குறிப்பது
    1. (1)
    2. (2)
    3. (3)
    4. (4)
    5. (5)
    6. Answer with explanation
  8. வரிப்படத்தில்
    காணப்படுகின்றவாறு A, B என்னும் இரு நீண்ட சமாந்தரக் கம்பிகள் ஒரே திசையிலே சர்வசம மின்னோட்டங்களைக் கொண்டு செல்கின்றன. பின்வரும் வரிப்படங்களில் எது கம்பிகளுக்குச் செங்குத்தான தளம் ஒன்றில் உள்ள காந்தப் புலத்தை மிகச் சிறந்த முறையில் வகைக் குறிக்கின்றது?
    1. (1)
    2. (2)
    3. (3)
    4. (4)
    5. (5)
    6. Answer with explanation
  9. உருவில்
    காணப்படுகின்றவாறு U-குழாய் ஒன்றில் திரவம் ஒன்று உள்ளது. குழாய் கிடையாக வலப்பக்கமாக ஒரு மாறா ஆர்முடுகல் a யுடன் இயங்கச் செய்யப்படும் போது குழாயின் இரு புயங்களிலும் உள்ள திரவ நிரல்களின் உயரங்களுக்கிடையே உள்ள வித்தியாசம்
    1. (1)
    2. (2)
    3. (3)
    4. (4)
    5. (5)
    6. Answer with explanation
  10. ஒரு
    நீண்ட கம்பி ABC ஆனது 60° கோணத்தை ஆக்குமாறு வளைக்கப்பட்டு, உருவில் காணப்படுகின்றவாறு சீர்க் காந்தப் புலம் ஒன்றுக்கு செங்குத்தான தளம் ஒன்றில் வைக்கப்பட்டுள்ளது. அதே திரவியத்தினால் செய்யப்பட்ட சம குறுக்கு வெட்டுப் பரப்பளவைக் கொண்ட வேறொரு நீண்ட நேரக் கம்பி PQ ஆனது முக்கோணி RBS எப்போதும் சமபக்க முக்கோணியாக இருக்குமாறு கம்பி ABC மீது ஒரு மாறா வேகத்துடன் இழுக்கப்படுகின்றது. முக்கோணி RBS இலே தூண்டப்படும் மின்னோட்டம் (I) ஆனது நேரம் (t) உடன் மாறுவதை மிகச் சிறந்த முறையில் வகைக்குறிக்கும் வரைபு யாது?
    1. (1)
    2. (2)
    3. (3)
    4. (4)
    5. (5)
    6. Answer with explanation

A/L 2001 Physics MCQs: 1 - 10 | 11 - 20 | 21 - 30 | 31 - 40 | 41 - 50 | 51 - 60

No comments:

Post a Comment