- (1) வலுவின் அலகு
- (2) சக்தியின் அலகு
- (3) மின்னேற்றத்தின் அலகு
- (4) வோல்ற்றளவின் அலகு
- (5) அழுத்த வித்தியாசத்தின் அலகு
விளக்கம்
இலத்திரன்-வோல்ற்று என்பது சக்தியின் அலகாகும். இது ஜூல் (J) இற்கு சமானமானது.
இங்கு இலத்திரன் (e) ஆனது ஏற்றத்தின் பருமனையும், வோல்ற்று (V) ஆனது அழுத்த வேறுபாட்டையும் குறிக்கின்றது.
F = Eq எனும் சமன்பாட்டை கருதுக.
E மின்புலச்செறிவு உள்ள இடத்தில் உள்ள q எனும் ஏற்றத்தில் தாக்கும் விசையை மேலுள்ள சமன்பாடு தருகின்றது.
இரண்டு புள்ளிகளுக்கு இடையிலுள்ள
ஆகும்.
இதிலிருந்து, E = V / d ஆகும்.
எனவே, F = (V/d) x q ஆகும்.
இதிலிருந்து, F x d = V x q
F x d ஆனது ஏற்றத்தை ஒரு புள்ளியில் இருந்து இன்னொரு புள்ளிக்கு நகர்த்த செய்யப்பட்ட வேலையைத் தரும். எனவே, V x q ஆனது செய்யப்பட்ட வேலையின் அலகைக் கொண்டிருக்கும். அதாவது சக்தியின் அலகை கொண்டிருக்கும்.
வலு என்பது அலகு நேரத்தில் செய்யப்பட்ட வேலை ஆகும். இதன் அலகு J s-1 ஆகும்.
மின்னேற்றத்தின் அலகு கூலோம் ஆகும்.
வோல்ற்றளவு மற்றும் அழுத்த வித்தியாசம் என்பவற்றின் அலகு வோல்ற்று (V) ஆகும்.
No comments:
Post a Comment