A/L 2001 MCQ – வினா 04 - விடையும் விளக்கமும்

உருவிற் காணப்படுகின்றவாறு ஆரை 2R ஐ உடைய சீர் வட்டத்தகடு ஒன்றிலிருந்து ஆரை R ஐ உடைய வட்டத்துவாரம் ஒன்று வெட்டப்பட்டுள்ளது. துவாரத்தைக் கொண்ட தகட்டின் ஈர்ப்பு மையம் பெரும்பாலும் இருப்பதாக ஊகிக்கத்தக்க புள்ளி,

  1. (1) A
  2. (2) B
  3. (3) C
  4. (4) D
  5. (5) E

சரியான விடை: (4)

விளக்கம்
சீரான வட்டத் தகடு ஒன்றின் ஈர்ப்பு மையமானது, அதன் மையத்தில் இருக்கும். R ஆரையுடைய வட்டத்துவாரம் ஏற்படுத்தப்படுவதற்கு முன்னர், வட்டத் தகட்டின் ஈர்ப்பு மையம், அதன் மையமான E இல் இருந்திருக்கும்.

வெட்டி அகற்றப்பட்ட சிறிய வட்டத் தகட்டின் ஈர்ப்பு மையம், அவ் வட்டத்தின் மையத்தில் இருந்திருக்கும். எனவே, எஞ்சிய பகுதியின் ஈர்ப்பு மையமானது பெரிய மற்றும் சிறிய வட்டங்களின் மையங்களை இணைக்கும் கோட்டின் வழியே இருத்தல் வேண்டும். இக்கருத்தின் படி A, D மற்றும் E புள்ளிளில் புதிய ஈர்ப்பு மையம் இருப்பதாக ஊகிக்கலாம். ஆனால், B, C ஆகியன மிகவும் பொருத்தமற்றவை.

இரண்டு வட்டங்களினதும் மையங்களூடாக செல்லும் கிடைக்கோட்டிற்கு மேலும் கீழும் திணிவு சமமாக பரம்பி இருப்பதைக் கொண்டும் மேலுள்ள முடிவை ஊகிக்கலாம்.

இப்போது, A, D மற்றும் E ஆகிய புள்ளிகலூடாக நிலைக்குத்தான கற்பனைக் கோடு இருப்பதாக நினைத்து, இக்கோடுகளுக்கு இரு புறமும் திணிவுப் பரம்பலை அவதானிக்க. D யினூடான நிலைக்குத்துக் கோட்டின் இரு புறமும் திணிவு அண்ணளவாக சமமாக பரவி இருப்பதை ஊகிக்கலாம்.

(பெரிய வட்டத்தின் மையத்தின் வலது பக்கமாக சிறிய வட்டம் வெட்டி அகற்றப்படுவதால், எஞ்சிய பகுதியின் ஈர்ப்பு மையமானது, பெரிய வட்டத்தின் மையத்தின் இடது பக்கத்தில், பெரிய வட்டத்தின் மையத்திற்கு அருகில் இருத்தல் வேண்டும். அத்துடன், அது, மையங்களினூடான - கிடைக் - கோட்டில் இருத்தல் வேண்டும்.)

எனவே, சிறிய வட்டம் வெட்டி அகற்றப்பட்ட பின்னர், எஞ்சிய பகுதியின் ஈர்ப்பு மையமானது பெரும்பாலும் D இல் இருக்கலாம்.

No comments:

Post a Comment