- (1) இரசம் செவ்விய வெப்பக் கடத்தியாக இருப்பதாகும்
- (2) கண்ணாடி அரிதில் வெப்பக் கடத்தியாக இருப்பதாகும்
- (3) வெப்பமாக்கும் போது கண்ணாடி விரிவதாகும்
- (4) வெப்பமாக்கும் போது கண்ணாடியின் விரிவு இராசத்தின் விரிவிலும் பார்க்க குறைவாக இருப்பதாகும்
- (5) வெப்பநிலை அதிகரிக்கும் போது இரசம் சீராக விரிவதாகும்
சரியான விடை: (4)
வெப்பநிலை அதிகரிக்கப்படும் போது, எந்த ஒரு பொருளும் விரிவடையும். எனினும் ஒவ்வொரு பொருளும் தத்தமது வெப்ப விரிவுக் குணகத்திற்கு ஏற்றால் போல வெவ்வேறு அளவுகளில் விரிவடையும்.
கண்ணாடியுள் இரச வெப்பமானியில், வெப்பநிலை அதிகரிப்புடன், கண்ணாடி மற்றும் இரசம் என்பன விரிவடையும். எனினும், கண்ணாடியின் விரிவானது இரசத்தின் விரிவிலும் பார்க்க குறைவாக இருக்கும்.
இதனால், இரச நிரல் விரைவாக ஏறுகின்றது.
செவ்விய வெப்பக் கடத்தி என்பது, வெப்பத்தை விரைவாகவும் குறைந்த சக்தி இழப்புடனும் கடத்தக் கூடிய பதார்த்தங்கள் ஆகும்.
கண்ணாடி ஒரு அரிதில் கடத்தி. அதாவது வெப்பத்தை விரைவாக கடத்தாது.
வெப்பநிலை அதிகரிக்கும் போது பொதுவாக பதார்த்தங்கள் சீராக விரிவடைவதில்லை. எனினும் இரசமானது சீரான விரிவைக் காட்டும். எனவே, சீரான அளவிடையை பயன்படுத்தி இரசத்தின் விரிவை அளப்பது இலகுவானது. வெப்பமானித் திரவமாக இரசம் அதிக அளவில் பயன்படுவதற்கு இதுவும் ஒரு காரணம்.
No comments:
Post a Comment