A/L 2014 MCQ – வினா 08 - விடையும் விளக்கமும்

ஒவ்வொன்றும் ஏற்றம் + q  வை உடைய நான்கு துணிக்கைகள் உருவிற் காட்டப்படுகின்றவாறு ஓர் ஒழுங்கான ஐங்கோணியின் நான்கு உச்சிகளில் வைக்கப்பட்டுள்ளன. ஐங்கோணியின் மையம் O விலிருந்து ஓர் உச்சிக்கு உள்ள தூரம் a  ஆகும். ஐங்கோணியின் மையத்தில் உள்ள மின்புலச் செறிவு,

  1. (1)  OE திசையில்  ஆகும்.
  2. (2)  EO திசையில்  ஆகும்.
  3. (3)  OE திசையில்  ஆகும்.
  4. (4)  EO திசையில்  ஆகும்.
  5. (5)  பூச்சியம் ஆகும்.
சரியான விடை: (1)

மையம் O  இல் +q  ஏற்றத்தினால் உருவாகும் மின்புலச்செறிவானது    ஆக இருக்கும்.

இப்பொழுது A, B, C, D  என்னும் உச்சிகளில் உள்ள ஏற்றங்களினால் உருவாகும் மின்புலச்செறிவுகளைக் கருதுக. அவற்றின் பருமன்கள் ஒரேயளவானவை. எனினும், அவற்றின் திசைகள் வேறுபட்டவை. இம்மின்புலச் செறிவுகளை பின்வரும் வரிப்படத்தில் காட்டலாம்.

மின்புலச் செறிவு ஒரு காவிக்கணியம். எனவே, காவிக்கூட்டல் மூலம், இந்த 4 மின்புலச் செறிவுகளினதும் விளையுளைக் காணலாம்.


இம்மின்புலச் செறிவுகள் தமக்கிடையில் சம கோணங்களை ஆக்குவதாலும், அவற்றின் பருமன்கள் சமனானவை என்பதாலும், காவிக்கூட்டல் விதிக்கேற்ப ஒழுங்குபடுத்தும் போது, சீரான ஐங்கோணியின் பக்கங்கள் வழியே அமைகின்றன. எனவே, இவற்றின் விளையுளானது, மேலுள்ள படத்தில் பச்சை நிற அம்புக்குறியினால் காட்டியதுபோல், ஏதேனும் ஒரு ஏற்றத்தினால் ஏற்படுத்தப்படும் மின்புலச் செறிவிற்கு சமனான பருமனைக் கொண்டதாகவும், காட்டிய திசையிலும் இருக்கும். இத்திசை, OE  திசை ஆகும். விளையுளின் பருமன், ஆகும்.


இவ்வினாவிற்கு விரைவாக விடையளிக்கும் முறை:

உச்சி E  இல் ஏற்றம் வைக்கப்படவில்லை. எனினும், இந்த வினாவிற்கு இலகுவாக விடையளிப்பதற்காக உச்சி E  இல் +q  ஏற்றம் இருப்பதாக கருதுக.

இப்போது மையம் O  இல் ஐந்து மின்புலச் செறிவுகள் உருவாகும். கீழுள்ள வரிப்படத்தைப் பார்க்க.


இவ் ஐந்து மின்புலச் செறிவுகளும் சம பருமன் கொண்டவை. அத்துடன், தமக்கிடையில் ஒரேயளவான கோணங்களைக் கொண்டவை. இவை சீரான அமைப்பில் சமச்சீராக தாக்குகின்றன. எனவே, இவற்றின் விளையுளானது பூச்சியமாக இருக்கும்.

விளையுள் பூச்சியமாவதற்கு, A, B, C, D  இல் உள்ள ஏற்றங்களினால் உருவாகும் மின்புலச் செறிவுகளின் விளையுளானது, உச்சி E  இல் கற்பனையாக வைக்கப்பட்ட ஏற்றத்தால் உருவாகும் மின்புலச்செறிவின் பருமனையும் அதற்கு எதிர்த் திசையையும் கொண்டிருத்தல் வேண்டும்.

எனவே, A, B, C, D  இல் உள்ள ஏற்றங்களினால் உருவாகும் மின்புலச் செறிவுகளின் விளையுளானது OE  திசையில் ஆக இருக்கும்.


A/L 2014 MCQ – வினா 07 - விடையும் விளக்கமும்

A/L 2014 MCQ – Question 07

R1 = r, R2 = 2r என்னும் ஆரைகளை உடைய இரு ஏற்றிய (charged) கடத்தும் கோளங்கள் ஒரு மெல்லிய கடத்தும் கம்பியினால் தொடுக்கப்பட்டுள்ளன. தொடுத்த பின்னர் இரு கோளங்களிலும் ஏற்றங்கள் முறையே Q1, Q2 ஆகவும் இரு கோளங்களினதும் ஒத்த பரப்பு ஏற்ற அடர்த்திகள் முறையே ,  ஆகவும் இருப்பின்,
    1. (1)  
    2. (2)  
    3. (3)  
    4. (4)  
    5. (5)  
சரியான விடை: (3)


இரு ஏற்றிய கடத்தும் கோளங்கள் ஒரு மெல்லிய கம்பியினால் தொடுக்கப்பட்டிருக்கும் போது, இரு கடத்தும் கோளங்களும் ஒரு பொது அழுத்தத்தில் இருக்கும்.

ஏற்றிய கடத்தும் கோளத்தின் மேற்பரப்பில் உள்ள அழுத்தம்,  ஆகும்.


சிறிய கோளத்திற்கு, 

பெரிய கோளத்திற்கு,
ஆனால், இரு கோளங்களினதும் அழுத்தங்கள் சமன் என்பதால்,





ஏற்றப்பரப்படர்த்தி







ஆனால்,





எனவே, சரியான விடை (3) ஆகும்.

A/L 2014 MCQ – வினா 06 - விடையும் விளக்கமும்

A/L 2014 MCQ – Question 06

ஒவ்வொன்றும்
மி.இ.வி. E யையும் அகத் தடை r ஐயும் உடையதும் உருவில் காட்டப்பட்டுள்ளவாறு இணைக்கப்பட்டுள்ளவையுமான இரு கலங்கள் எவற்றைக்கொண்ட ஒரு தனிக் கலத்திற்கு சமவலுவானவை
    1. (1)  மி.இ.வி. E யையும் அகத் தடை r ஐயும் கொண்ட ஒரு தனிக் கலத்திற்கு
    2. (2)  மி.இ.வி. 2E யையும் அகத் தடை 2r ஐயும் கொண்ட ஒரு தனிக் கலத்திற்கு
    3. (3)  மி.இ.வி. 2E யையும் அகத் தடை r ஐயும் கொண்ட ஒரு தனிக் கலத்திற்கு
    4. (4)  மி.இ.வி. E யையும் அகத் தடை r/2 ஐயும் கொண்ட ஒரு தனிக் கலத்திற்கு
    5. (5)  மி.இ.வி. E யையும் அகத் தடை 2r ஐயும் கொண்ட ஒரு தனிக் கலத்திற்கு
சரியான விடை: (4)

சமவலுவான தனிக்கலம் என்பது, தரப்பட்ட அமைப்பிலுள்ள மின் மூலகங்களிற்கு பிரதியீடாக, இரு முனைகளுக்கும் இடையிலுள்ள மின்னழுத்த வேறுபாட்டையோ அல்லது தரப்பட்ட சுற்றிலிருந்து எடுக்கப்படும் மின்னோட்டத்தையோ மாற்றாமல், இணைக்கக்கூடிய மின்கலம் ஆகும்.

தரப்பட்ட அமைப்பில் இரு மின்கலங்களினதும் ஒத்த முனைகள் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன. எனவே தரப்பட்ட அமைப்பில் மின்னோட்டம் எதுவும் இருக்காது. இதனால், இரு முனைகளுக்கும் இடையில் உள்ள அழுத்த வேறுபாடானது E இற்கு சமனாக இருக்கும்.

ஆனால், இரு முனைகளுக்கும் இடையில் இவ்விரு கலங்களும் சமாந்தரமாக இணைக்கப்பட்டுள்ளதால் அவற்றின் அகத்தடைகள் சமாந்தரத்தடைகள் போல தொழிற்படும். எனவே, இரு முனைகளுக்கும் இடையில் உள்ள விளையுள் தடையானது, r/2 ஆகும்.

எனவே, தரப்பட்ட சுற்றானது மி.இ.வி. E யையும் அகத் தடை r/2 ஐயும் கொண்ட ஒரு தனிக் கலத்திற்கு சமவலுவானது.

A/L 2014 MCQ – வினா 05 - விடையும் விளக்கமும்

A/L 2014 MCQ – Question 05

பின்வரும் கூற்றுக்களில் எது கூட்டு நுணுக்குக்காட்டி பற்றி உண்மையானதன்று.
    1. (1)  அது இரு குவிவு வில்லைகளைக் கொண்டது.
    2. (2)  பொருளியினால் உண்டாக்கப்படும் பொருளின் விம்பம் மெய் விம்பமாகும்.
    3. (3)  வில்லைகளின் வேறாக்கம் பொருளியின் அல்லது பார்வைத்துண்டின் குவியத்தூரத்திலும் பார்க்க மிகவும் கூடியதாகும்.
    4. (4)  நுணுக்குக்காட்டியினால் உண்டாக்கப்படும் இறுதி விம்பம் மாய விம்பமாகும்.
    5. (5)  பரிசோதிக்கப்பட வேண்டிய பொருள் பொருளியின் குவியத் தூரத்தினுள்ளே வைக்கப்படுதல் வேண்டும்.
சரியான விடை: (5)
கூட்டுநுணுக்குக்காட்டியின் இயல்பான செப்பஞ்செய்கைக்குரிய கதிர்வரிப் படம்.
கூட்டுநுணுக்குக் காட்டியானது, பொதுவாக சாதாரண மனிதக் கண்ணுக்கு தென்படாத மிகச் சிறிய பொருட்களைப் பார்ப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது. இது பொருளி, பார்வைத்துண்டு என்னும் இரண்டு இரு குவிவு வில்லைகளைக் கொண்டது. பொருளி வில்லை பார்வைத்துண்டிலும் பார்க்க சிறியதாக இருக்கும். அத்துடன், பொருளியின் குவியத்தூரமானது, பார்வைத்துண்டின் குவியத்தூரத்திலும் சிறியதாக இருக்கும். இரண்டு வில்லைகளினதும் வேறாக்கமானது, இவ்விரண்டு வில்லைகளினதும் குவியத்தூரங்களினதும் கூட்டுத்தொகையிலும் பார்க்க பெரிதாக இருக்கும்.

கூட்டுநுணுக்குக்காட்டியின் பொருளியின் முன்னாள் வைக்கப்படும் பொருளுக்கு, பொருளி தலைகீழான உருப்பெருத்த மெய் விம்பத்தை உருவாக்கும். பொருளியினால் உருவாக்கப்படும் மெய் விம்பமானது, பார்வைத்துண்டின் குவியத்தூரத்தினுள் இருக்குமாறு கருவி அமைக்கப்படும். பார்வைத்துண்டானது, உருப்பெருத்த இறுதி விம்பத்தை, (மாய விம்பத்தை) தோற்றுவிக்கும்.

இறுதிவிம்பமானது, தெளிவுப்பார்வை இழிவுத்தூரத்தில் உருவாக்கப்படும்போது அதிகூடிய உருப்பெருக்கம் உடைய இறுதிவிம்பம் பெறப்படும். இது கூட்டுநுணுக்குக்காட்டியின் இயல்பான செப்பஞ்செய்கை எனப்படும்.

வினாவில் தரப்பட்ட கூற்றுக்களில், "பரிசோதிக்கப்பட வேண்டிய பொருள் பொருளியின் குவியத் தூரத்தினுள்ளே வைக்கப்படுதல் வேண்டும்." என்பது தவறானது. பரிசோதிக்கப்பட வேண்டிய பொருள் பொருளியின் குவியத் தூரத்திற்கு வெளியே வைக்கப்படுதல் வேண்டும். அப்போதுதான் பொருளியினால், உருப்பெருத்த மெய் விம்பத்தை உருவாக்க முடியும்.

A/L 2014 MCQ – வினா 04 - விடையும் விளக்கமும்

A/L 2014 MCQ – Question 04

ஒரு கித்தாரை இசைக்கும் போது அது
    1. (1)  தந்திகளில் நெட்டாங்கு விருத்தி அலைகளையும் வளியில் நெட்டாங்கு விருத்தி அலைகளையும் உண்டாக்கும்.
    2. (2)  தந்திகளில் குறுக்கு விருத்தி அலைகளையும் வளியில் நெட்டாங்கு விருத்தி அலைகளையும் உண்டாக்கும்.
    3. (3)  தந்திகளில் நெட்டாங்கு நின்ற அலைகளையும் வளியில் குறுக்கு விருத்தி அலைகளையும் உண்டாக்கும்.
    4. (4)  தந்திகளில் குறுக்கு நின்ற அலைகளையும் வளியில் நெட்டாங்கு விருத்தி அலைகளையும் உண்டாக்கும்.
    5. (5)  தந்திகளில் குறுக்கு நின்ற அலைகளையும் வளியில் குறுக்கு நின்ற அலைகளையும் உண்டாக்கும்.
சரியான விடை: (4)

ஒரு கித்தாரை இசைக்கும் போது, அதன் தந்திகள் அருட்டப்படும். இதனால், தந்திகளில் குறுக்கலைகள் உருவாகும். அலைகளின் மேற்பொருந்துகை மூலம், தந்திகளில் நின்ற அலைகள் உருவாகும். நின்ற அலைகளில் சக்தி ஊடுகடத்தப்படுவதில்லை.

தந்திகளில் நின்ற குறுக்கலைகள் காரணமாக, வளியில் நெருக்கல், ஐதாக்கல் ஏற்படுத்தப்படும். இதனால், வளியில் நெட்டாங்கு விருத்தி அலைகள் உருவாகும். வளியில் உருவாகும் நெட்டாங்கு விருத்தி அலைகள் காரணமாகவே எமக்கு கித்தாரின் இசையைக் கேட்கக்கூடியதாக இருக்கின்றது.

எனவே, ஒரு கித்தாரை இசைக்கும் போது, அது தந்திகளில் குறுக்கு நின்ற அலைகளையும் வளியில் நெட்டாங்கு விருத்தி அலைகளையும் உண்டாக்கும்.

A/L 2014 MCQ – வினா 03 - விடையும் விளக்கமும்

A/L 2014 MCQ – Question 03

பின்வருவனவற்றில் எது நெட்டாங்கு அலையின் வடிவத்தில் செலுத்தப்படுகின்றது?
    1. (1)  லேசர் ஒளி
    2. (2)  X - கதிர்கள்
    3. (3)  கழியொலி  அலைகள்
    4. (4)  நுணுக்கலைகள் (Microwaves)
    5. (5)  வானொலி அலைகள்
சரியான விடை: (3)

அலைகளை குறுக்கலைகள், நெட்டாங்கு அலைகள் என இரண்டாகப் பிரிக்கலாம். அலை செல்லும் திசைக்கு செங்குத்தாக ஊடக துணிக்கைகள் அதிர்வதன் மூலம் கடத்தப்படும் அலைகள் குறுக்கலைகள் ஆகும். அலை செல்லும் திசையில் ஊடக துணிக்கைகளின் நெருக்கல், ஐதாக்கல் மூலம் செலுத்தப்படும் அலைகள் நெட்டாங்கு அலைகள் ஆகும்.

மின்காந்த அலைகள், குறுக்கலைகள் ஆகும். லேசர் ஒளி, X - கதிர்கள், நுணுக்கலைகள் (Microwaves), வானொலி அலைகள் என்பன வெவ்வேறு மீடிறன்களைக் கொண்டிருந்தாலும், இவை நான்கும் மின்காந்த அலைகளாகும். எனவே, இவை நான்கும் குறுக்கலைகள் ஆகும்.

கழியொலி அலைகள் என்பவை, கேள்தகு வீச்சிலும் பார்க்க உயர்ந்த மீடிறனைக் கொண்ட ஒலி அலைகள் ஆகும். ஒலி அலைகள், நெட்டாங்கு அலைகள். எனவே, கழியொலி அலைகள் நெட்டாங்கு அலைகள் ஆகும்.

A/L 2014 MCQ – வினா 02 - விடையும் விளக்கமும்

A/L 2014 MCQ – Question 02

பின்வரும் கணியங்களில் எது / எவை பரிமாணமில்லாதது / பரிமாணமில்லாதவை?
    1. (A)  தொடர்பு வேகம்
    2. (B)  தொடர்பு அடர்த்தி
    3. (C)  தொடர்பு ஈரப்பதன்

    1. (1)  A மாத்திரம்
    2. (2)  A,B ஆகியன மாத்திரம்
    3. (3)  B,C ஆகியன மாத்திரம்
    4. (4)  A,C ஆகியன மாத்திரம்
    5. (5)  A, B, C ஆகிய எல்லாம்
சரியான விடை: (3)

விகிதங்கள், பின்னங்கள் மற்றும் சதவீதங்கள் பரிமாணம் அற்றவை. அத்துடன் பரிமாணம் அற்ற கணியங்கள் எண்ணிக் கணியங்களாக இருக்கும்.

தொடர்பு வேகம் என்பது, ஒரு பொருள் சார்பாக இன்னொரு பொருளின் வேகம் ஆகும். சாதரணமாக சொல்லப்படும் வேகங்கள், பூமி சார்பானவை. வேகம் ஒரு காவிக்கணியம். வேகத்திற்கு L T-1 என்னும் பரிமாணம் உண்டு.

தொடர்பு அடர்த்தி என்பது, ஒரு திரவத்தின் அடர்த்திக்கும், இன்னொரு திரவத்தின் அடர்த்திக்கும் இடையிலுள்ள விகிதம் ஆகும். பொதுவாக, ஒரு குறித்த திரவத்தின் அடர்த்திக்கும் தூய நீரின் அடர்த்திக்கும் இடையிலான விகிதம், அத்திரவத்தின் சாரடர்த்தி / தொடர்பு அடர்த்தி ஆகும். தொடர்பு அடர்த்திக்கு அலகு, பரிமாணம் இல்லை.

சாரீரப்பதன் அல்லது தொடர்பு ஈரப்பதன் என்பது குறித்த வெப்பநிலையில், குறித்த கனவளவு வளியில் இருக்கும் நீராவியின் திணிவிற்கும், அதே வெப்பநிலையில் அதே குறித்த கனவளவு வளியில் நீரின் நிரம்பலாவி அமுக்கத்திற்கும் இடையிலான விகிதம் ஆகும். தொடர்பு ஈரப்பதனிற்கு அலகு, பரிமாணம் இல்லை.

தரப்பட்ட கணியங்களில், தொடர்பு அடர்த்தி, தொடர்பு ஈரப்பதன் என்பவற்றிற்கு மட்டுமே பரிமாணங்கள் இல்லை.

A/L 2014 MCQ – வினா 01 - விடையும் விளக்கமும்

A/L 2014 MCQ – Question 01

அலகுகளைப் பொறுத்தவரை பின்வரும் கணியங்களில் எது ஏனையவற்றில் இருந்து வேறுபடுகின்றது?
    1. (1)  சுழற்சி இயக்கப்பாட்டுச் சக்தி
    2. (2)  பொறிமுறை அழுத்தச் சக்தி
    3. (3)  அகச் சக்தி
    4. (4)  வேலை
    5. (5)  வலு
சரியான விடை: (5)

சுழற்சி இயக்கப்பாட்டுச் சக்தி என்பது சுழலும் ஒரு பொருளில், அதன் சுழற்சி காரணமாக உருவாகும் சக்தி ஆகும். இது அப்பொருளின் சடத்துவத் திருப்பத்திலும் ( ) அதன் கோணவேகத்திலும் () தங்கியிருக்கும்.


பூச்சிய அழுத்தம் உடைய ஒரு புள்ளியில் இருந்து, பூச்சிய அழுத்தம் இல்லாத இன்னொரு புள்ளிக்கு ஒரு பொருளைக் கொண்டுசெல்லும் போது செய்யப்படும் வேலையானது, அப்பொருளில் பொறிமுறை அழுத்தச் சக்தியாக சேமிக்கப்படும். உதாரணமாக புவி மேற்பரப்பிலிருந்து h உயரத்தில் உள்ள m திணிவுடைய பொருளில் உள்ள, பொறிமுறை அழுத்தச் சக்தியானது mgh ஆல் தரப்படும்.

ஒரு பொருளில் உள்ள மூலக்கூறுகளில் காணப்படும் அகப்பிணைப்புக்கள் மற்றும் மூலக்கூற்றிடைப் பிணைப்புக்கள் காரணமாக அப்பொருளில் சேமிக்கப்பட்டிருக்கும் சக்தி, அகச் சக்தி ஆகும்.

சுழற்சி இயக்கப்பாட்டுச் சக்தி, பொறிமுறை அழுத்தச் சக்தி, அகச் சக்தி என்பன சக்தியின் வெவ்வேறு வடிவங்கள். சக்தியின் அலகு J (ஜூல்) ஆகும்.

வேலை என்பது, ஒரு பொருளை ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு அசைப்பதற்கு தேவைப்படும் சக்தி ஆகும். உதாரணமாக ஒரு பொருளில் F விசை தாக்கி, அப்பொருளானது S தூரம் நகருமாயின், அவ்விசையினால் அப்பொருளின் மீது செய்யப்பட்ட வேலையானது F × S ஆல் தரப்படும். வேலையின் அலகு N m அல்லது J (ஜூல்) ஆகும்.

வலு என்பது வேலை செய்யும் வீதம் ஆகும். அதாவது அலகு நேரத்தில் செய்யப்பட்ட வேலையானது வலு எனப்படும். வலுவின் அலகு J s-1 ஆகும்.

எனவே, வினாவில் தரப்பட்ட கணியங்களில், அலகுகளைப் பொறுத்தவரை வேறுபடுவது வலு ஆகும்.

A/L 2014 பௌதிகவியல் MCQ - வினாக்கள் 1 - 10

  1. அலகுகளைப் பொறுத்தவரை பின்வரும் கணியங்களில் எது ஏனையவற்றில் இருந்து வேறுபடுகின்றது?
    1. (1)  சுழற்சி இயக்கப்பாட்டுச் சக்தி
    2. (2)  பொறிமுறை அழுத்தச் சக்தி
    3. (3)  அகச் சக்தி
    4. (4)  வேலை
    5. (5)  வலு
    6. விடையும் விளக்கமும்
  2. பின்வரும் கணியங்களில் எது / எவை பரிமாணமில்லாதது / பரிமாணமில்லாதவை?
    1. (A)  தொடர்பு வேகம்
    2. (B)  தொடர்பு அடர்த்தி
    3. (C)  தொடர்பு ஈரப்பதன்

    1. (1)  A மாத்திரம்
    2. (2)  A,B ஆகியன மாத்திரம்
    3. (3)  B,C ஆகியன மாத்திரம்
    4. (4)  A,C ஆகியன மாத்திரம்
    5. (5)  A, B, C ஆகிய எல்லாம்
    6. விடையும் விளக்கமும்
  3. பின்வருவனவற்றில் எது நெட்டாங்கு அலையின் வடிவத்தில் செலுத்தப்படுகின்றது?
    1. (1)  லேசர் ஒளி
    2. (2)  X - கதிர்கள்
    3. (3)  கழியொலி  அலைகள்
    4. (4)  நுணுக்கலைகள் (Microwaves)
    5. (5)  வானொலி அலைகள்
    6. விடையும் விளக்கமும்
  4. ஒரு கித்தாரை இசைக்கும் போது அது
    1. (1)  தந்திகளில் நெட்டாங்கு விருத்தி அலைகளையும் வளியில் நெட்டாங்கு விருத்தி அலைகளையும் உண்டாக்கும்.
    2. (2)  தந்திகளில் குறுக்கு விருத்தி அலைகளையும் வளியில் நெட்டாங்கு விருத்தி அலைகளையும் உண்டாக்கும்.
    3. (3)  தந்திகளில் நெட்டாங்கு நின்ற அலைகளையும் வளியில் குறுக்கு விருத்தி அலைகளையும் உண்டாக்கும்.
    4. (4)  தந்திகளில் குறுக்கு நின்ற அலைகளையும் வளியில் நெட்டாங்கு விருத்தி அலைகளையும் உண்டாக்கும்.
    5. (5)  தந்திகளில் குறுக்கு நின்ற அலைகளையும் வளியில் குறுக்கு நின்ற அலைகளையும் உண்டாக்கும்.
    6. விடையும் விளக்கமும்
  5. பின்வரும் கூற்றுக்களில் எது கூட்டு நுணுக்குக்காட்டி பற்றி உண்மையானதன்று.
    1. (1)  அது இரு குவிவு வில்லைகளைக் கொண்டது.
    2. (2)  பொருளியினால் உண்டாக்கப்படும் பொருளின் விம்பம் மெய் விம்பமாகும்.
    3. (3)  வில்லைகளின் வேறாக்கம் பொருளியின் அல்லது பார்வைத்துண்டின் குவியத்தூரத்திலும் பார்க்க மிகவும் கூடியதாகும்.
    4. (4)  நுணுக்குக்காட்டியினால் உண்டாக்கப்படும் இறுதி விம்பம் மாய விம்பமாகும்.
    5. (5)  பரிசோதிக்கப்பட வேண்டிய பொருள் பொருளியின் குவியத் தூரத்தினுள்ளே வைக்கப்படுதல் வேண்டும்.
    6. விடையும் விளக்கமும்
  6. ஒவ்வொன்றும்
    மி.இ.வி. E யையும் அகத் தடை r ஐயும் உடையதும் உருவில் காட்டப்பட்டுள்ளவாறு இணைக்கப்பட்டுள்ளவையுமான இரு கலங்கள் எவற்றைக்கொண்ட ஒரு தனிக் கலத்திற்கு சமவலுவானவை
    1. (1)  மி.இ.வி. E யையும் அகத் தடை r ஐயும் கொண்ட ஒரு தனிக் கலத்திற்கு
    2. (2)  மி.இ.வி. 2E யையும் அகத் தடை 2r ஐயும் கொண்ட ஒரு தனிக் கலத்திற்கு
    3. (3)  மி.இ.வி. 2E யையும் அகத் தடை r ஐயும் கொண்ட ஒரு தனிக் கலத்திற்கு
    4. (4)  மி.இ.வி. E யையும் அகத் தடை r/2 ஐயும் கொண்ட ஒரு தனிக் கலத்திற்கு
    5. (5)  மி.இ.வி. E யையும் அகத் தடை 2r ஐயும் கொண்ட ஒரு தனிக் கலத்திற்கு
    6. விடையும் விளக்கமும்
  7. R1 = r, R2 = 2r என்னும் ஆரைகளை உடைய இரு ஏற்றிய (charged) கடத்தும் கோளங்கள் ஒரு மெல்லிய கடத்தும் கம்பியினால் தொடுக்கப்பட்டுள்ளன. தொடுத்த பின்னர் இரு கோளங்களிலும் ஏற்றங்கள் முறையே Q1, Q2 ஆகவும் இரு கோளங்களினதும் ஒத்த பரப்பு ஏற்ற அடர்த்திகள் முறையே ,  ஆகவும் இருப்பின்,
    1. (1)  
    2. (2)  
    3. (3)  
    4. (4)  
    5. (5)  
    6. விடையும் விளக்கமும்
  8. ஒவ்வொன்றும்
    ஏற்றம் + q வை உடைய நான்கு துணிக்கைகள் உருவிற் காட்டப்படுகின்றவாறு ஓர் ஒழுங்கான ஐங்கோணியின் நான்கு உச்சிகளில் வைக்கப்பட்டுள்ளன. ஐங்கோணியின் மையம் O விலிருந்து ஓர் உச்சிக்கு உள்ள தூரம் a ஆகும். ஐங்கோணியின் மையத்தில் உள்ள மின்புலச் செறிவு,
    1. (1)  OE திசையில்  ஆகும்.
    2. (2)  EO திசையில்  ஆகும்.
    3. (3)  OE திசையில்  ஆகும்.
    4. (4)  EO திசையில்  ஆகும்.
    5. (5)  பூச்சியம் ஆகும்.
    6. விடையும் விளக்கமும்
  9. திணிவு ஐயும் ஆரை ஐயும் உடைய ஒரு மெல்லிய வளையம் அதன் மையத்தினூடாக அதன் தளத்திற்குச் செங்குத்தாகச் செல்லும் ஓர் அச்சுப் பற்றி ஒரு மாறாக் கோணவேகம்  உடன் ஒரு கிடைத் தளத்தில் சுழல்கின்றது. இப்போது ஒவ்வொன்றும் திணிவு m ஐ உடைய இரு சிறிய திணிவுகள் வளையத்தின் ஒரு விட்டத்தின் எதிர் முனைகளில் மெதுவாக இணைக்கப்பட்டால், தொகுதியின் புதிய கோண வேகம்,
    1. (1)  
    2. (2)  
    3. (3)  
    4. (4)  
    5. (5)  

  10. திணிவு ஐ உடைய ஒரு துணிக்கை தரையிலிருந்து உயரம்  இல் உள்ள ஓர் இடத்திலிருந்து சுயாதீனமாகப் போடப்படுகின்றது. தரையிலிருந்து அளக்கப்பட்டவாறு உள்ள உயரம் h உடன் துணிக்கையின் இயக்கப்பாட்டுச் சக்தி இன் மாறலை மிகச் சிறந்த விதத்தில் வகைக்குறிப்பது,
    1. (1)  
    2. (2)  
    3. (3)  
    4. (4)  
    5. (5)