A/L 2014 MCQ – Question 04
- (1) தந்திகளில் நெட்டாங்கு விருத்தி அலைகளையும் வளியில் நெட்டாங்கு விருத்தி அலைகளையும் உண்டாக்கும்.
- (2) தந்திகளில் குறுக்கு விருத்தி அலைகளையும் வளியில் நெட்டாங்கு விருத்தி அலைகளையும் உண்டாக்கும்.
- (3) தந்திகளில் நெட்டாங்கு நின்ற அலைகளையும் வளியில் குறுக்கு விருத்தி அலைகளையும் உண்டாக்கும்.
- (4) தந்திகளில் குறுக்கு நின்ற அலைகளையும் வளியில் நெட்டாங்கு விருத்தி அலைகளையும் உண்டாக்கும்.
- (5) தந்திகளில் குறுக்கு நின்ற அலைகளையும் வளியில் குறுக்கு நின்ற அலைகளையும் உண்டாக்கும்.
ஒரு கித்தாரை இசைக்கும் போது, அதன் தந்திகள் அருட்டப்படும். இதனால், தந்திகளில் குறுக்கலைகள் உருவாகும். அலைகளின் மேற்பொருந்துகை மூலம், தந்திகளில் நின்ற அலைகள் உருவாகும். நின்ற அலைகளில் சக்தி ஊடுகடத்தப்படுவதில்லை.
தந்திகளில் நின்ற குறுக்கலைகள் காரணமாக, வளியில் நெருக்கல், ஐதாக்கல் ஏற்படுத்தப்படும். இதனால், வளியில் நெட்டாங்கு விருத்தி அலைகள் உருவாகும். வளியில் உருவாகும் நெட்டாங்கு விருத்தி அலைகள் காரணமாகவே எமக்கு கித்தாரின் இசையைக் கேட்கக்கூடியதாக இருக்கின்றது.
எனவே, ஒரு கித்தாரை இசைக்கும் போது, அது தந்திகளில் குறுக்கு நின்ற அலைகளையும் வளியில் நெட்டாங்கு விருத்தி அலைகளையும் உண்டாக்கும்.
No comments:
Post a Comment