A/L 2014 MCQ – Question 06
ஒவ்வொன்றும்
மி.இ.வி. E யையும் அகத் தடை r ஐயும் உடையதும் உருவில் காட்டப்பட்டுள்ளவாறு இணைக்கப்பட்டுள்ளவையுமான இரு கலங்கள் எவற்றைக்கொண்ட ஒரு தனிக் கலத்திற்கு சமவலுவானவை
சமவலுவான தனிக்கலம் என்பது, தரப்பட்ட அமைப்பிலுள்ள மின் மூலகங்களிற்கு பிரதியீடாக, இரு முனைகளுக்கும் இடையிலுள்ள மின்னழுத்த வேறுபாட்டையோ அல்லது தரப்பட்ட சுற்றிலிருந்து எடுக்கப்படும் மின்னோட்டத்தையோ மாற்றாமல், இணைக்கக்கூடிய மின்கலம் ஆகும்.
தரப்பட்ட அமைப்பில் இரு மின்கலங்களினதும் ஒத்த முனைகள் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன. எனவே தரப்பட்ட அமைப்பில் மின்னோட்டம் எதுவும் இருக்காது. இதனால், இரு முனைகளுக்கும் இடையில் உள்ள அழுத்த வேறுபாடானது E இற்கு சமனாக இருக்கும்.
ஆனால், இரு முனைகளுக்கும் இடையில் இவ்விரு கலங்களும் சமாந்தரமாக இணைக்கப்பட்டுள்ளதால் அவற்றின் அகத்தடைகள் சமாந்தரத்தடைகள் போல தொழிற்படும். எனவே, இரு முனைகளுக்கும் இடையில் உள்ள விளையுள் தடையானது, r/2 ஆகும்.
எனவே, தரப்பட்ட சுற்றானது மி.இ.வி. E யையும் அகத் தடை r/2 ஐயும் கொண்ட ஒரு தனிக் கலத்திற்கு சமவலுவானது.
- (1) மி.இ.வி. E யையும் அகத் தடை r ஐயும் கொண்ட ஒரு தனிக் கலத்திற்கு
- (2) மி.இ.வி. 2E யையும் அகத் தடை 2r ஐயும் கொண்ட ஒரு தனிக் கலத்திற்கு
- (3) மி.இ.வி. 2E யையும் அகத் தடை r ஐயும் கொண்ட ஒரு தனிக் கலத்திற்கு
- (4) மி.இ.வி. E யையும் அகத் தடை r/2 ஐயும் கொண்ட ஒரு தனிக் கலத்திற்கு
- (5) மி.இ.வி. E யையும் அகத் தடை 2r ஐயும் கொண்ட ஒரு தனிக் கலத்திற்கு
சமவலுவான தனிக்கலம் என்பது, தரப்பட்ட அமைப்பிலுள்ள மின் மூலகங்களிற்கு பிரதியீடாக, இரு முனைகளுக்கும் இடையிலுள்ள மின்னழுத்த வேறுபாட்டையோ அல்லது தரப்பட்ட சுற்றிலிருந்து எடுக்கப்படும் மின்னோட்டத்தையோ மாற்றாமல், இணைக்கக்கூடிய மின்கலம் ஆகும்.
தரப்பட்ட அமைப்பில் இரு மின்கலங்களினதும் ஒத்த முனைகள் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன. எனவே தரப்பட்ட அமைப்பில் மின்னோட்டம் எதுவும் இருக்காது. இதனால், இரு முனைகளுக்கும் இடையில் உள்ள அழுத்த வேறுபாடானது E இற்கு சமனாக இருக்கும்.
ஆனால், இரு முனைகளுக்கும் இடையில் இவ்விரு கலங்களும் சமாந்தரமாக இணைக்கப்பட்டுள்ளதால் அவற்றின் அகத்தடைகள் சமாந்தரத்தடைகள் போல தொழிற்படும். எனவே, இரு முனைகளுக்கும் இடையில் உள்ள விளையுள் தடையானது, r/2 ஆகும்.
எனவே, தரப்பட்ட சுற்றானது மி.இ.வி. E யையும் அகத் தடை r/2 ஐயும் கொண்ட ஒரு தனிக் கலத்திற்கு சமவலுவானது.
No comments:
Post a Comment