A/L 2014 MCQ – Question 02
- (A) தொடர்பு வேகம்
- (B) தொடர்பு அடர்த்தி
- (C) தொடர்பு ஈரப்பதன்
- (1) A மாத்திரம்
- (2) A,B ஆகியன மாத்திரம்
- (3) B,C ஆகியன மாத்திரம்
- (4) A,C ஆகியன மாத்திரம்
- (5) A, B, C ஆகிய எல்லாம்
விகிதங்கள், பின்னங்கள் மற்றும் சதவீதங்கள் பரிமாணம் அற்றவை. அத்துடன் பரிமாணம் அற்ற கணியங்கள் எண்ணிக் கணியங்களாக இருக்கும்.
தொடர்பு வேகம் என்பது, ஒரு பொருள் சார்பாக இன்னொரு பொருளின் வேகம் ஆகும். சாதரணமாக சொல்லப்படும் வேகங்கள், பூமி சார்பானவை. வேகம் ஒரு காவிக்கணியம். வேகத்திற்கு L T-1 என்னும் பரிமாணம் உண்டு.
தொடர்பு அடர்த்தி என்பது, ஒரு திரவத்தின் அடர்த்திக்கும், இன்னொரு திரவத்தின் அடர்த்திக்கும் இடையிலுள்ள விகிதம் ஆகும். பொதுவாக, ஒரு குறித்த திரவத்தின் அடர்த்திக்கும் தூய நீரின் அடர்த்திக்கும் இடையிலான விகிதம், அத்திரவத்தின் சாரடர்த்தி / தொடர்பு அடர்த்தி ஆகும். தொடர்பு அடர்த்திக்கு அலகு, பரிமாணம் இல்லை.
சாரீரப்பதன் அல்லது தொடர்பு ஈரப்பதன் என்பது குறித்த வெப்பநிலையில், குறித்த கனவளவு வளியில் இருக்கும் நீராவியின் திணிவிற்கும், அதே வெப்பநிலையில் அதே குறித்த கனவளவு வளியில் நீரின் நிரம்பலாவி அமுக்கத்திற்கும் இடையிலான விகிதம் ஆகும். தொடர்பு ஈரப்பதனிற்கு அலகு, பரிமாணம் இல்லை.
தரப்பட்ட கணியங்களில், தொடர்பு அடர்த்தி, தொடர்பு ஈரப்பதன் என்பவற்றிற்கு மட்டுமே பரிமாணங்கள் இல்லை.
No comments:
Post a Comment