A/L 2001 பௌதிகவியல் MCQ - 11 - 20

  1. சமன்பாடு vi = kajs இல் v ஆனது வேகத்தையும் a ஆனது ஆர்முடுகலையும் s இடப்பெயர்ச்சியையும் வகைகுறிக்கின்றன. k ஒரு மாறிலி. i, j ஆகியன நிறைவெண்கள். சமன்பாடு பரிமாண முறைப்படி திருத்தமாக இருப்பதற்கு i, j ஆகியவற்றின் பெறுமானங்கள் எவையாக இருத்தல் வேண்டும்?
    1. (1) 1, 1
    2. (2) 1, 2
    3. (3) 2, 1
    4. (4) 2, 2
    5. (5) 2, 3
    6. Answer with explanation
  2. புகையிரதம் ஒன்று ஒரு நேர்ப்பாதை வழியே செல்கின்றது. வேறொரு புகையிரதம் அதே திசையிலும் அதே கதியிலும் முதற் புகையிரதத்திற்கு பின்னால் செல்கின்றது. முதற்புகையிரதம் மீடிறன் fo ஐ உடைய சீழ்க்கையை ஊதுகின்றது. இரண்டாம் புகையிரதத்தில் அசையாமல் இருக்கும் பயணி ஒருவருக்குக் கேட்கும் சீழ்க்கையின் தோற்ற மீடிறன் f எனின்,
    1. (1) f  > fo
    2. (2) f  < fo
    3. (3) f  = fo
    4. (4) f  = 2fo
    5. (5) f  = 1/2 fo
    6. Answer with explanation
  3. இரு முனைகளிலும் திறந்துள்ள நீளம் 50 cm ஐ உடைய பொள் உருளைக் குழாய் ஒன்று வளியில் வைக்கப்பட்டுள்ளது. தூய தொனிகளை உண்டாக்கும் ஒலி முதல் ஒன்று குழாயின் ஒரு முனைக்கு அண்மையில் வைக்கப்பட்டுள்ளது. காலப்பட்ட ஒலியின் மீடிறன் மிகத் தாழ்ந்த பெறுமானத்திலிருந்து ஆரம்பித்துப் படிப்படியாக அதிகரிக்கப்படுகின்றது. மீடிறன் 320 Hz இலே குழாய் பரிவுறுகின்றது. வளியில் ஒலியின் கதி
    1. (1) 160 ms-1
    2. (2) 320 ms-1
    3. (3) 340 ms-1
    4. (4) 360 ms-1
    5. (5) 640 ms-1
    6. Answer with explanation
  4. 27°C இலே வாயு ஒன்றில் ஒலியின் வேகம் V ஆகும். இவ்வாயுவில் ஒலியின் வேகம் 2V ஆக இருக்கும் வெப்பநிலை
    1. (1) 54°C
    2. (2) 108°C
    3. (3) 600°C
    4. (4) 927°C
    5. (5) 1200°C
    6. Answer with explanation
  5. குவியத்தூரம் 25 cm ஐ உடைய குவிவு வில்லை ஒன்று குவியத்தூரம் 10 cm ஐ உடைய குழிவு வில்லை ஒன்றுடன் தொடுகையில் வைக்கப்பட்டுள்ளது. இவ் வில்லைச் சேர்மானத்தின் வலு தையொத்தரில்
    1. (1) 4
    2. (2) 6
    3. (3) 10
    4. (4) 14
    5. (5) 15
    6. Answer with explanation
  6. பாய்மம் ஒன்றில் இயங்கும் கோளம் ஒன்றின் மீது தாக்கும் பிசுக்கு விசை
    1. (A) கோளத்தின் வேகத்திற்கு நேரடி விகிதசமம்.
    2. (B) கோளத்தின் திணிவுக்கு நேரடி விகிதசமம்.
    3. (C) கோளத்தின் ஆரைக்கு நேர்மாறு விகிதசமம்.
    4. மேலேயுள்ள கூற்றுக்களில்

    5. (1) (A) மாத்திரம் உண்மையானது
    6. (2) (B) மாத்திரம் உண்மையானது
    7. (3) (A), (B) ஆகியன மாத்திரம் உண்மையானவை
    8. (4) (B), (C) ஆகியன மாத்திரம் உண்மையானவை
    9. (5) (A), (B), (C) ஆகிய எல்லாம் உண்மையானவை
    10. Answer with explanation
  7. ஒரு நிற ஒளிக்கதிர் ஒன்று அரியம் ஒன்றினூடாகச் சென்ற பின்னர் இழிவு விலகலுறுகின்றது. அரியத்தின் முகம் ஒன்றினால் உண்டாக்கப்படும் விலகற் கோணம் 20° எனின், கதிரின் இழிவு விலகற் கோணம்
    1. (1) 10°
    2. (2) 20°
    3. (3) 30°
    4. (4) 40°
    5. (5) 60°
    6. Answer with explanation
  8. நீள்பார்வைக் குறைபாடுள்ள ஒருவரின் அண்மைப்புள்ளி 50 cm ஆகும். 25 cm தூரத்திலுள்ள பொருள் ஒன்றை எளிதாக நோக்குவதற்கு அவருக்குத் தேவைப்படும் மூக்குக்கண்ணாடியின் வில்லை
    1. (1) குவியத்தூரம் 100 cm ஐ உடைய ஒருக்கும் வில்லை
    2. (2) குவியத்தூரம் 100 cm ஐ உடைய விரி வில்லை
    3. (3) குவியத்தூரம் 50 cm ஐ உடைய ஒருக்கும் வில்லை
    4. (4) குவியத்தூரம் 50 cm ஐ உடைய விரி வில்லை
    5. (5) குவியத்தூரம் 25 cm ஐ உடைய ஒருக்கும் வில்லை
    6. Answer with explanation
  9. நீரின் வெப்பநிலை 20°C இலிருந்து 30°C இற்கு உயர்த்தி 1 kg/நிமிடம் என்னும் வீதத்தில் வெந்நீரை வழங்குவதற்கு மின் வெப்பமாக்கி ஒன்று பயன்படுத்தப்படுகின்றது. வெப்பமாக்கும் மூலகத்தின் இழிவு வலு (நீரின் தன் வெப்பக் கொள்ளளவு = 4200 J kg-1 °C-1)
    1. (1) 7 W
    2. (2) 70 W
    3. (3) 700 W
    4. (4) 4200 W
    5. (5) 8400 W
    6. Answer with explanation
  10. அடைத்த அறை ஒன்றினுள்ளே தொடர்பு ஈரப்பதனை
    1. (A) அறையினுள்ளே நீராவியைக் கூட்டுவதன் மூலம்
    2. (B) அறையினுள்ளே வெப்பநிலையைக் குறைப்பதன் மூலம்
    3. (C) அறையின் கனவளவைக் குறைப்பதன் மூலம்
      கூட்டலாம்.
    4. மேலேயுள்ள கூற்றுக்களில்

    5. (1) (A) மாத்திரம் உண்மையானது
    6. (2) (B) மாத்திரம் உண்மையானது
    7. (3) (A), (B) ஆகியன மாத்திரம் உண்மையானவை
    8. (4) (B), (C) ஆகியன மாத்திரம் உண்மையானவை
    9. (5) (A), (B), (C) ஆகிய எல்லாம் உண்மையானவை
    10. Answer with explanation

A/L 2001 Physics MCQs: 1 - 10 | 11 - 20 | 21 - 30 | 31 - 40 | 41 - 50 | 51 - 60

No comments:

Post a Comment