- உருக்குச் சவர அலகு ஒன்று நீரின் மேற்பரப்பில் தங்குமாறு செய்யப்படலாம். இது தொடர்பாகப் பின்வரும் கூறுகளைக் கருதுக.
- (A) உருக்குச் சவர அலகு மீது மேலுதைப்புத் தாக்காமையால், உருக்குச் சவர அலகு நீரின் மேற்பரப்பில் தங்கியிருத்தல் ஆக்கிமிடீசின் கோட்பாட்டுக்கு முரணானதாகும்.
- (B) நீரின் பரப்பிழுவை காரணமாகத் தாக்கும் விசைகளின் மூலம் உருக்குச் சவர அலகு நீரின் மேற்பரப்பில் வைத்திருக்கப்படுகின்றது.
- (C) சவர்க்காரம் நீரின் பரப்பிழுவையைக் குறைக்கின்றமையால், சவர்க்காரத்தை நீருடன் கலப்பதன் மூலம் உருக்குச் சவர அலகை அமிழச் செய்யலாம்.
- மேலேயுள்ள கூற்றுக்களில்,
- (1) (A) மாத்திரம் உண்மையானது
- (2) (B) மாத்திரம் உண்மையானது
- (3) (C) மாத்திரம் உண்மையானது
- (4) (A), (B) ஆகியன மாத்திரம் உண்மையானவை
- (5) (B), (C) ஆகியன மாத்திரம் உண்மையானவை
- Answer with explanation
- குழாய்
- (1) வளி P யிலிருந்து Q விற்கு பாயுமெனின், hx > hy
- (2) வளி P யிலிருந்து Q விற்கு பாயுமெனின், hx = hy
- (3) வளி P யிலிருந்து Q விற்கு பாயுமெனின், hx < hy
- (4) வளி Q யிலிருந்து P விற்கு பாயுமெனின், hx = hy
- (5) வளி Q யிலிருந்து P விற்கு பாயுமெனின், hx < hy
- Answer with explanation
- உருவில்
- (1) பொருளின் நிறை மாத்திரம் ஆகும்
- (2) பொருளின் நிறையும் மேற்பரப்புக்குச் செவ்வனாகத் தாக்கும் மறுதாக்க விசையும் மாத்திரம் ஆகும்
- (3) பொருளின் நிறையும் மைய நாட்ட விசையும் மாத்திரம் ஆகும்
- (4) மேற்பரப்புக்குச் செவ்வனாக தாக்கும் மறுதாக்க விசையும் மையநாட்ட விசையும் மாத்திரம் ஆகும்
- (5) மையநாட்ட விசை மாத்திரம் ஆகும்
- Answer with explanation
- உருவில் காணப்படுகின்றவாறு இறுக்கமாகக் கட்டப்பட்டுள்ள கயிறு ஒன்றில் ஒரு நிறை W தொங்கவிடப்பட்டுள்ளது.
கயிற்றின் இழுவை - (1) அண்ணளவாக W
- (2) அண்ணளவாக
- (3) இலும் குறைவு
- (4) இற்கும் W விற்குமிடைப்பட்டது
- (5) W விலும் மிகக் கூடியது
- Answer with explanation
- திணிவு 20 kg ஐ உடைய குழந்தை ஒன்று புறக்கணிக்கத்தக்க திணிவை உடைய ஊஞ்சல் ஒன்றில் அமர்ந்திருக்கின்றது. ஒவ்வொன்றும் 3 m நீளமுள்ள இரு கயிறுகளின் மூலம் ஊஞ்சல் அதன் சுழலைப் புள்ளிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஓர் ஊஞ்சலாடலின் போது குழந்தையின் உயர் கதி 3 ms-1 எனக் காணப்பட்டுள்ளது. ஒவ்வொரு கயிற்றிலும் உயர் இழுவை
- (1) 130 N
- (2) 160 N
- (3) 200 N
- (4) 260 N
- (5) 300 N
- Answer with explanation
- கலோரிமானி ஒன்றிலே குறித்த நீர்த் திணிவு ஒன்று உள்ளது. 90 W வெப்பமாக்கி ஒன்று நீரில் அமிழ்த்தப்படும் போது நீரின் வெப்பநிலை அதிகரித்து 35°C இல் உறுதிப் பெறுமானம் ஒன்றிற்கு வருகின்றது. 180 W வெப்பமாக்கி பயன்படுத்தப்பட்டால், உறுதி வெப்பநிலை 45°C ஆகும். அறை வெப்பநிலை எவ்வளவாக இருத்தல் வேண்டும்?
- (1) 10°C
- (2) 15°C
- (3) 20°C
- (4) 25°C
- (5) 30°C
- Answer with explanation
- குழிவு ஆடியொன்றின் தலைமை அச்சு மீது குழிவு ஆடியிலிருந்து 31 cm தூரத்திலே பொருள் ஒன்றை வைக்கும் போது பொருளைக் காட்டிலும் சிறிதளவில் சிறிய விம்பம் ஒன்று உண்டாகின்றது. ஆடியிலிருந்து பொருள் 29 cm தூரத்தில் வைக்கப்படும் போது பொருளைக் காட்டிலும் சிறிதளவில் பெரிய விம்பம் ஒன்று உண்டாகின்றது. ஆடியின் குவியத்தூரம் அண்ணளவாக
- (1) 7.5 cm
- (2) 15 cm
- (3) 28 cm
- (4) 30 cm
- (5) 32 cm
- Answer with explanation
- பக்கம் ஒன்றின் நீளம் 24 cm ஆகவும் முறிவுச்சுட்டி 1.5 ஆகவும் உள்ள கண்ணாடி சதுரமுகி ஒன்றினுள்ளே சிறிய வளிக்குமிழி ஒன்று உள்ளது. ஒரு பக்கத்திலிருந்து கண்ணாடிக் குற்றியினூடாக பார்க்கும் போது அப்பக்கத்திலிருந்து 12 cm தூரத்திலே வளிக் குமிழி இருப்பதாக தோன்றுகின்றது. எதிர்ப்பக்கத்திலிருந்து பார்க்கும் போது அப்பக்கத்திலிருந்து எவ்வளவு தூரத்தில் வளிக் குமிழி இருப்பதாகத் தோன்றும்?
- (1) 16 cm
- (2) 12 cm
- (3) 8 cm
- (4) 6 cm
- (5) 4 cm
- Answer with explanation
- ராக்கெட் ஒன்றினுள்ளே நிலைக்குத்தாக இருக்கும் குறுக்கு வெட்டுப் பரப்பளவு 3.0 m2 ஐ உடைய தாங்கியில் 1.8 x 104 kg திரவ ஒட்சிசன் உள்ளது. ரொக்கெட் புறப்படும் கணத்தில் அதன் ஆர்முடுகல் புவி தொடர்பாக நிலைக்குத்தாக மேல்நோக்கி 2.0 ms-1 ஆகும். அக் கணத்தில் தாங்கியின் அடி மீதுள்ள அமுக்கம்
- (1) 1.2 x 103 N m-2
- (2) 7.2 x 103 N m-2
- (3) 1.2 x 104 N m-2
- (4) 6.0 x 104 N m-2
- (5) 7.2 x 104 N m-2
- Answer with explanation
- திணிவு
- (1) 0
- (2) m1g
- (3) (M + m1)g
- (4) (M + 2m1)g
- (5) (M + m1 + m2)g
- Answer with explanation
A/L 2001 Physics MCQs: 1 - 10 | 11 - 20 | 21 - 30 | 31 - 40 | 41 - 50 | 51 - 60
No comments:
Post a Comment