A/L 2001 MCQ – வினா 08 - விடையும் விளக்கமும்

புவியின் திணிவும் ஆரையும் முறையே M, R ஆகும். புவியின் மேற்பரப்பிலே திணிவு m ஐ உடைய ராக்கெட் ஒன்றின் தப்பல் வேகம்
  1. (1) 
  2. (2) 
  3. (3) 
  4. (4) 
  5. (5)

சரியான விடை: (1)

விளக்கம்
ஒரு பொருளை புவியின் மேற்பரப்பிலிருந்து புவியின் ஈர்ப்புப் புலத்திற்கு அப்பால் கொண்டு செல்வதற்கு, புவி மேற்பரப்பில் அப்பொருளுக்கு இருக்க வேண்டிய ஆகக் குறைந்த வேகமானது தப்பல் வேகம் எனப்படும்.

புவி மேற்பரப்பில் ஈர்ப்பு அழுத்தம் மறைப் பெறுமானத்தை உடையது. புவியின் ஈர்ப்புப் புலத்திற்கு அப்பால் (முடிவிலி தூரத்தில்) ஈர்ப்பு அழுத்தம் பூச்சியம் ஆகும். எனவே, ஈர்ப்பு விசையானது எப்போதும் பூமியை நோக்கியதாகவே இருக்கும். ஒரு பொருளை புவி மேற்பரப்பில் இருந்து, முடிவிலி தூரத்திற்கு கொண்டு செல்வதாயின், ஈர்ப்பு விசைக்கு எதிராக வேலை செய்யப்படல் வேண்டும். இவ்வாறு கொண்டு செல்லப்படும் போது பொருளின் அழுத்த சக்தி அதிகரிக்கும்.

பொருளின் இயக்கசக்தி இழப்பே, அழுத்தசக்தி அதிகரிப்பாக மாற்றமடைகின்றது. பொருளை ஈர்ப்பு புலத்திற்கு அப்பால் மட்டுமட்டாக கொண்டு செல்வதாயின், முடிவிலியில் அதன் வேகம் பூச்சியம் ஆகும். இந்நிலையில், புவி மேற்பரப்பில் அப்பொருள் கொண்டிருந்த வேகமானது தப்பல் வேகம் ஆகும்.

இழந்த இயக்கப்பாட்டு சக்தி = பெற்ற அழுத்த சக்தி

இழந்த இயக்கப்பாட்டு சக்தி = (இறுதி அழுத்தம் - ஆரம்ப அழுத்தம்) x திணிவு

          mv2 = (0 - (-)) x m

                        = x m

                   v2 =

                     v =

No comments:

Post a Comment