Showing posts with label அலைவுகளும் அலைகளும். Show all posts
Showing posts with label அலைவுகளும் அலைகளும். Show all posts

A/L 2001 MCQ – வினா 41 - விடையும் விளக்கமும்

இசைக்கவை ஒன்றின் மீடிறன் 256 Hz ஆகும். இது சுரமானிக் கம்பி ஒன்றுடன் ஒலிக்கச் செய்யப்பட்ட போது செக்கனுக்கு 3 அடிப்புகள் கேட்டன. கம்பியின் இழுவை குறைக்கப்பட்ட போது மீண்டும் செக்கனுக்கு 3 அடிப்புகள் கேட்டன. இழுவையைக் குறித்த பின்னர் சுரமானிக் கம்பியின் மீடிறன்
  1. (1) 250 Hz
  2. (2) 253 Hz
  3. (3) 256 Hz
  4. (4) 259 Hz
  5. (5) 262 Hz

சரியான விடை: (2)

விளக்கம்

A/L 2001 MCQ – வினா 17 - விடையும் விளக்கமும்

ஒரு நிற ஒளிக்கதிர் ஒன்று அரியம் ஒன்றினூடாகச் சென்ற பின்னர் இழிவு விலகலுறுகின்றது. அரியத்தின் முகம் ஒன்றினால் உண்டாக்கப்படும் விலகற் கோணம் 20° எனின், கதிரின் இழிவு விலகற் கோணம்
  1. (1) 10°
  2. (2) 20°
  3. (3) 30°
  4. (4) 40°
  5. (5) 60°
சரியான விடை: (4)

விளக்கம்

A/L 2001 MCQ – வினா 15 - விடையும் விளக்கமும்

குவியத்தூரம் 25 cm ஐ உடைய குவிவு வில்லை ஒன்று குவியத்தூரம் 10 cm ஐ உடைய குழிவு வில்லை ஒன்றுடன் தொடுகையில் வைக்கப்பட்டுள்ளது. இவ் வில்லைச் சேர்மானத்தின் வலு தையொத்தரில்
  1. (1) 4
  2. (2) 6
  3. (3) 10
  4. (4) 14
  5. (5) 15

சரியான விடை: (2)

விளக்கம்

A/L 2001 MCQ – வினா 14 - விடையும் விளக்கமும்

27oC இலே வாயு ஒன்றில் ஒலியின் வேகம் V ஆகும். இவ்வாயுவில் ஒலியின் வேகம் 2V ஆக இருக்கும் வெப்பநிலை
  1. (1) 54oC
  2. (2) 108oC
  3. (3) 600oC
  4. (4) 927oC
  5. (5) 1200oC
சரியான விடை: (4)

விளக்கம்

A/L 2001 MCQ – வினா 13 - விடையும் விளக்கமும்

இரு முனைகளிலும் திறந்துள்ள நீளம் 50 cm ஐ உடைய பொள் உருளைக் குழாய் ஒன்று வளியில் வைக்கப்பட்டுள்ளது. தூய தொனிகளை உண்டாக்கும் ஒலி முதல் ஒன்று குழாயின் ஒரு முனைக்கு அண்மையில் வைக்கப்பட்டுள்ளது. காலப்பட்ட ஒலியின் மீடிறன் மிகத் தாழ்ந்த பெறுமானத்திலிருந்து ஆரம்பித்துப் படிப்படியாக அதிகரிக்கப்படுகின்றது. மீடிறன் 320 Hz இலே குழாய் பரிவுறுகின்றது. வளியில் ஒலியின் கதி
  1. (1) 160 ms-1
  2. (2) 320 ms-1
  3. (3) 340 ms-1
  4. (4) 360 ms-1
  5. (5) 640 ms-1
சரியான விடை: (2)

விளக்கம்

A/L 2001 MCQ – வினா 12 - விடையும் விளக்கமும்

புகையிரதம் ஒன்று ஒரு நேர்ப்பாதை வழியே செல்கின்றது. வேறொரு புகையிரதம் அதே திசையிலும் அதே கதியிலும் முதற் புகையிரதத்திற்கு பின்னால் செல்கின்றது. முதற்புகையிரதம் மீடிறன் fo ஐ உடைய சீழ்க்கையை ஊதுகின்றது. இரண்டாம் புகையிரதத்தில் அசையாமல் இருக்கும் பயணி ஒருவருக்குக் கேட்கும் சீழ்க்கையின் தோற்ற மீடிறன் f எனின்,
  1. (1) f  > fo
  2. (2) f  < fo
  3. (3) f  = fo
  4. (4) f  = 2fo
  5. (5) f  = 1/2 fo
சரியான விடை: (3)

விளக்கம்

A/L 2001 MCQ – வினா 02 - விடையும் விளக்கமும்

செறிவு 10-12 W m-2 ஐ உடைய ஒலியானது 0 தெசிபல் செறிவு மட்டத்தை உடையதென வரையறுக்கப்படுகின்றது. செறிவு 10-8 W m-2 ஐ உடைய ஒலியின் செறிவு மட்டம்
  1. (1) -40 dB
  2. (2) 20 dB
  3. (3) 40 dB
  4. (4) 60 dB
  5. (5) 80 dB
  6.  
சரியான விடை: (3)


விளக்கம்