Showing posts with label ஒளியியல். Show all posts
Showing posts with label ஒளியியல். Show all posts

A/L 2001 MCQ – வினா 38 - விடையும் விளக்கமும்

பக்கம் ஒன்றின் நீளம் 24 cm ஆகவும் முறிவுச்சுட்டி 1.5 ஆகவும் உள்ள கண்ணாடி சதுரமுகி ஒன்றினுள்ளே சிறிய வளிக்குமிழி ஒன்று உள்ளது. ஒரு பக்கத்திலிருந்து கண்ணாடிக் குற்றியினூடாக பார்க்கும் போது அப்பக்கத்திலிருந்து 12 cm தூரத்திலே வளிக் குமிழி இருப்பதாக தோன்றுகின்றது. எதிர்ப்பக்கத்திலிருந்து பார்க்கும் போது அப்பக்கத்திலிருந்து எவ்வளவு தூரத்தில் வளிக் குமிழி இருப்பதாகத் தோன்றும்?
  1. (1) 16 cm
  2. (2) 12 cm
  3. (3) 8 cm
  4. (4) 6 cm
  5. (5) 4 cm

சரியான விடை: (5)

விளக்கம்

A/L 2001 MCQ – வினா 37 - விடையும் விளக்கமும்

குழிவு ஆடியொன்றின் தலைமை அச்சு மீது குழிவு ஆடியிலிருந்து 31 cm தூரத்திலே பொருள் ஒன்றை வைக்கும் போது பொருளைக் காட்டிலும் சிறிதளவில் சிறிய விம்பம் ஒன்று உண்டாகின்றது. ஆடியிலிருந்து பொருள் 29 cm தூரத்தில் வைக்கப்படும் போது பொருளைக் காட்டிலும் சிறிதளவில் பெரிய விம்பம் ஒன்று உண்டாகின்றது. ஆடியின் குவியத்தூரம் அண்ணளவாக
  1. (1) 7.5 cm
  2. (2) 15 cm
  3. (3) 28 cm
  4. (4) 30 cm
  5. (5) 32 cm

சரியான விடை: (2)

விளக்கம்

A/L 2001 MCQ – வினா 29 - விடையும் விளக்கமும்

வானியல் தொலைகாட்டி ஒன்று 5 cm குவியத்தூரமுள்ள பார்வைத்துண்டை உடையது. இயல்பான செப்பஞ்செய்கையில் பார்வைத்துண்டுக்கும் பொருளிக்குமிடையே உள்ள தூரம் 85 cm ஆகும். இவ்வியல்பான செப்பஞ்செய்கையில் தொலைகாட்டியின் கோணப் பெரிதாக்கம்
  1. (1) 90
  2. (2) 85
  3. (3) 80
  4. (4) 17
  5. (5) 16
சரியான விடை: (5)

விளக்கம்

A/L 2001 MCQ – வினா 18 - விடையும் விளக்கமும்

நீள்பார்வைக் குறைபாடுள்ள ஒருவரின் அண்மைப்புள்ளி 50 cm ஆகும். 25 cm தூரத்திலுள்ள பொருள் ஒன்றை எளிதாக நோக்குவதற்கு அவருக்குத் தேவைப்படும் மூக்குக்கண்ணாடியின் வில்லை
  1. (1) குவியத்தூரம் 100 cm ஐ உடைய ஒருக்கும் வில்லை
  2. (2) குவியத்தூரம் 100 cm ஐ உடைய விரி வில்லை
  3. (3) குவியத்தூரம் 50 cm ஐ உடைய ஒருக்கும் வில்லை
  4. (4) குவியத்தூரம் 50 cm ஐ உடைய விரி வில்லை
  5. (5) குவியத்தூரம் 25 cm ஐ உடைய ஒருக்கும் வில்லை
சரியான விடை: (3)

விளக்கம்

A/L 2001 MCQ – வினா 17 - விடையும் விளக்கமும்

ஒரு நிற ஒளிக்கதிர் ஒன்று அரியம் ஒன்றினூடாகச் சென்ற பின்னர் இழிவு விலகலுறுகின்றது. அரியத்தின் முகம் ஒன்றினால் உண்டாக்கப்படும் விலகற் கோணம் 20° எனின், கதிரின் இழிவு விலகற் கோணம்
  1. (1) 10°
  2. (2) 20°
  3. (3) 30°
  4. (4) 40°
  5. (5) 60°
சரியான விடை: (4)

விளக்கம்

A/L 2001 MCQ – வினா 15 - விடையும் விளக்கமும்

குவியத்தூரம் 25 cm ஐ உடைய குவிவு வில்லை ஒன்று குவியத்தூரம் 10 cm ஐ உடைய குழிவு வில்லை ஒன்றுடன் தொடுகையில் வைக்கப்பட்டுள்ளது. இவ் வில்லைச் சேர்மானத்தின் வலு தையொத்தரில்
  1. (1) 4
  2. (2) 6
  3. (3) 10
  4. (4) 14
  5. (5) 15

சரியான விடை: (2)

விளக்கம்