- (1) குவியத்தூரம் 100 cm ஐ உடைய ஒருக்கும் வில்லை
- (2) குவியத்தூரம் 100 cm ஐ உடைய விரி வில்லை
- (3) குவியத்தூரம் 50 cm ஐ உடைய ஒருக்கும் வில்லை
- (4) குவியத்தூரம் 50 cm ஐ உடைய விரி வில்லை
- (5) குவியத்தூரம் 25 cm ஐ உடைய ஒருக்கும் வில்லை
சரியான விடை: (3)
(தேவைப்பட்டால், அருகில் இருப்பதுபோல் ஒரு கதிர்ப்படத்தை வரையவும்.)
25 cm இல் உள்ள பொருளின் விம்பம் 50 cm இல் தோன்றல் வேண்டும். பொருளின் பக்கத்திலேயே விம்பம் வருவதால், மாய விம்பம்... இரண்டு மடங்கு தூரத்தில்... எனவே, பொருள் f /2 தூரத்தில் வைக்கப்பட்டிருத்தல் வேண்டும். ஆகவே, f = 50 cm.
பொருளுக்கு பின்னால் மாய விம்பம் தோன்றுவதால், இது ஒரு ஒருக்கு வில்லை. (கதிர்ப்படத்தைக் கொண்டும் இது ஒரு ஒருக்கு வில்லை என கூறலாம்.)
எனவே, அவர் அணிய வேண்டியது 50 cm குவியத்தூரம் உடைய ஒருக்கு வில்லை.
முறை 2
"நீள்பார்வைக் குறைபாடுள்ள ஒருவரின் அண்மைப்புள்ளி 50 cm" என்பதன் அர்த்தம், குறித்த நபர், அவரின் கண்ணிலிருந்து 50 cm இல் அல்லது அதற்கு அப்பால் உள்ள பொருட்களை தெளிவாக பார்க்க முடியும். ஆனால், 50 cm இலும் குறைந்த தூரத்தில் உள்ள பொருட்களை வெறும் கண்ணால் தெளிவாக பார்க்க முடியாது. அவற்றைப் பார்ப்பதற்கு அவர், மூக்குக் கண்ணாடி அணிதல் வேண்டும்.
அதாவது, 25 cm இல் உள்ள பொருள், 50 cm இல் இருப்பதுபோல் தோன்றினால், அவரால் அப்பொருளை தெளிவாக பார்க்க முடியும். எனவே, அவர் அணிய வேண்டிய மூக்குக் கண்ணாடியின்,
பொருள் தூரம் (U) = 25 cm
விம்பத்தூரம் (V) = 50 cm
வில்லைச் சூத்திரத்தைப் பயன்படுத்துக.
f = +50 cm
குவியத்தூரம் நேர்ப் பெறுமானம் என்பதால், அவர் அணியவேண்டியது, 50 cm குவியத்தூரம் உடைய ஒருக்கு வில்லை (குவிவு வில்லை) ஆகும்.
பொருள் தூரம் (U) = 25 cm
விம்பத்தூரம் (V) = 50 cm
வில்லைச் சூத்திரத்தைப் பயன்படுத்துக.
f = +50 cm
குவியத்தூரம் நேர்ப் பெறுமானம் என்பதால், அவர் அணியவேண்டியது, 50 cm குவியத்தூரம் உடைய ஒருக்கு வில்லை (குவிவு வில்லை) ஆகும்.
No comments:
Post a Comment