A/L 2001 MCQ – வினா 22 - விடையும் விளக்கமும்

திணிவு m யையுடைய பொருள் ஒன்று இழை ஒன்றினாலே தொங்கவிடப்பட்டு, உருவில் காணப்படுகின்றவாறு ஒரு கிடை விசை F இன் மூலம் நாப்பத்தில் (சமநிலையில்) வைக்கப்பட்டுள்ளது. F இன் பருமன்
  1. (1) mg tanθ
  2. (2) mg sinθ
  3. (3) mg
  4. (4) mg cosθ
  5. (5)
சரியான விடை: (1)

விளக்கம்
இழையிலுள்ள இழுவை T என்க. எமது வசதிக்காக இவ் இழுவை விசையை, நிலைக்குத்தாகவும் கிடையாகவும் பிரித்துக் கொள்வோம்.

பொருள் சமநிலையில் இருப்பதனால்,

          கிடைத் தளத்தில் உள்ள எதிர் விசைகள் சமனானவை.
          அதாவது,
                             T sinθ = F       ---------------(1)

          நிலைக்குத்துத் தளத்தில் உள்ள எதிர் விசைகள் சமனானவை.
          அதாவது,
                             T cosθ = mg   ---------------(2)

(1)/(2) இலிருந்து,
                                tanθ = F / mg

ஆகவே,
                                     F = mg tanθ

No comments:

Post a Comment