A/L 2001 MCQ – வினா 19 - விடையும் விளக்கமும்

நீரின் வெப்பநிலை 20°C இலிருந்து 30°C இற்கு உயர்த்தி 1 kg/நிமிடம் என்னும் வீதத்தில் வெந்நீரை வழங்குவதற்கு மின் வெப்பமாக்கி ஒன்று பயன்படுத்தப்படுகின்றது. வெப்பமாக்கும் மூலகத்தின் இழிவு வலு (நீரின் தன் வெப்பக் கொள்ளளவு = 4200 J kg-1 °C-1)
  1. (1) 7 W
  2. (2) 70 W
  3. (3) 700 W
  4. (4) 4200 W
  5. (5) 8400 W
சரியான விடை: (3)

விளக்கம்
ஒரு செக்கனில் வழங்க வேண்டிய நீரின் திணிவு = 1/60 kg

ஒரு செக்கனில் வழங்க வேண்டிய வெப்பம்,

          H = m s ΔΘ

              = 1/60  x  4200  x  (30 - 20)

              = 700 J

ஆகவே தேவைப்படும் இழிவு வலு 700 W ஆகும்.

குறிப்பு: வெப்ப இழப்புக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment