A/L 2001 MCQ – வினா 16 - விடையும் விளக்கமும்

பாய்மம் ஒன்றில் இயங்கும் கோளம் ஒன்றின் மீது தாக்கும் பிசுக்கு விசை
  1. (A) கோளத்தின் வேகத்திற்கு நேரடி விகிதசமம்.
  2. (B) கோளத்தின் திணிவுக்கு நேரடி விகிதசமம்.
  3. (C) கோளத்தின் ஆரைக்கு நேர்மாறு விகிதசமம்.
  4. மேலேயுள்ள கூற்றுக்களில்

  5. (1) (A) மாத்திரம் உண்மையானது
  6. (2) (B) மாத்திரம் உண்மையானது
  7. (3) (A), (B) ஆகியன மாத்திரம் உண்மையானவை
  8. (4) (B), (C) ஆகியன மாத்திரம் உண்மையானவை
  9. (5) (A), (B), (C) ஆகிய எல்லாம் உண்மையானவை
சரியான விடை: (1)

விளக்கம்
பாய்மம் ஒன்றில் இயங்கும் கோளம் ஒன்றின் மீது தாக்கும் பிசுக்கு விசை

          F = 6 π r η v 

இங்கு,
          π = 22/7 , ஒரு மாறிலி
          r  = கோளத்தின் ஆரை
          η = பாயியின் பிசுக்குமைக் குணகம்
          v = கோளத்தின் வேகம்

வெப்பநிலை போன்ற ஏனைய பௌதீக கணியங்கள் மாறாதபோது, குறித்த பாயியின் பிசுக்குமைக் குணகம் η ஆனது மாறாது.

பாய்மம் ஒன்றில் இயங்கும் கோளம் ஒன்றின் மீது தாக்கும் பிசுக்கு விசையானது கோளத்தின் ஆரை, வேகம் என்பவற்றிற்கு நேர் விகித சமமாக இருக்கும். கோளத்தின் திணிவில் தங்கியிருப்பதில்லை.

எனவே, (A) மட்டும் சரியானது.

No comments:

Post a Comment