Showing posts with label சடத்தின் பொறியியல் இயல்புகள். Show all posts
Showing posts with label சடத்தின் பொறியியல் இயல்புகள். Show all posts

A/L 2001 MCQ – வினா 31 - விடையும் விளக்கமும்

உருக்குச் சவர அலகு ஒன்று நீரின் மேற்பரப்பில் தங்குமாறு செய்யப்படலாம். இது தொடர்பாகப் பின்வரும் கூறுகளைக் கருதுக.
  1. (A) உருக்குச் சவர அலகு மீது மேலுதைப்புத் தாக்காமையால், உருக்குச் சவர அலகு நீரின் மேற்பரப்பில் தங்கியிருத்தல் ஆக்கிமிடீசின் கோட்பாட்டுக்கு முரணானதாகும்.
  2. (B) நீரின் பரப்பிழுவை காரணமாகத் தாக்கும் விசைகளின் மூலம் உருக்குச் சவர அலகு நீரின் மேற்பரப்பில் வைத்திருக்கப்படுகின்றது.
  3. (C) சவர்க்காரம் நீரின் பரப்பிழுவையைக் குறைக்கின்றமையால், சவர்க்காரத்தை நீருடன் கலப்பதன் மூலம் உருக்குச் சவர அலகை அமிழச் செய்யலாம்.
  4. மேலேயுள்ள கூற்றுக்களில்,

  1. (1) (A) மாத்திரம் உண்மையானது
  2. (2) (B) மாத்திரம் உண்மையானது
  3. (3) (C) மாத்திரம் உண்மையானது
  4. (4) (A), (B) ஆகியன மாத்திரம் உண்மையானவை
  5. (5) (B), (C) ஆகியன மாத்திரம் உண்மையானவை
சரியான விடை: (5)

விளக்கம்

A/L 2001 MCQ – வினா 30 - விடையும் விளக்கமும்

பாவுகையிளிருந்து (சீலிங்கிலிருந்து) நிலைக்குத்தாகத் தொங்க விடப்பட்டுள்ள மீழ்த்தன்மைச் சீர்க் கம்பி ஒன்றின் கீழ் நுனியிலிருந்து திணிவு ஒன்று தொங்கவிடப்பட்டுள்ளது. கம்பியின் விகித சம எல்லை விஞ்சப்படவில்லையெனக் கொண்டு பின்வரும் கூற்றுக்களைக் கருதுக.
  1. (A) கம்பியின் நீளம் இருமடங்காக்கப்படும் எனின், கம்பியின் விகாரம் இருமடங்காகும்.
  2. (B) கம்பியின் குறுக்கு வெட்டுப் பரப்பளவு இருமடங்காக்கப்படுமெனின், கம்பியின் விகாரம் இருமடங்காகும்.
  3. (C) தொங்கவிடப்பட்ட திணிவு இருமடங்காக்கப்படுமெனின், கம்பியின் விகாரம் இருமடங்காகும்.

  4. மேலுள்ள கூற்றுக்களில்,

  5. (1) (A) மாத்திரம் உண்மையானது
  6. (2) (B) மாத்திரம் உண்மையானது
  7. (3) (C) மாத்திரம் உண்மையானது
  8. (4) (A), (C) என்பன மாத்திரம் உண்மையானவை
  9. (5) (B), (C) என்பன மாத்திரம் உண்மையானவை
சரியான விடை: (3)

விளக்கம்

A/L 2001 MCQ – வினா 16 - விடையும் விளக்கமும்

பாய்மம் ஒன்றில் இயங்கும் கோளம் ஒன்றின் மீது தாக்கும் பிசுக்கு விசை
  1. (A) கோளத்தின் வேகத்திற்கு நேரடி விகிதசமம்.
  2. (B) கோளத்தின் திணிவுக்கு நேரடி விகிதசமம்.
  3. (C) கோளத்தின் ஆரைக்கு நேர்மாறு விகிதசமம்.
  4. மேலேயுள்ள கூற்றுக்களில்

  5. (1) (A) மாத்திரம் உண்மையானது
  6. (2) (B) மாத்திரம் உண்மையானது
  7. (3) (A), (B) ஆகியன மாத்திரம் உண்மையானவை
  8. (4) (B), (C) ஆகியன மாத்திரம் உண்மையானவை
  9. (5) (A), (B), (C) ஆகிய எல்லாம் உண்மையானவை
சரியான விடை: (1)

விளக்கம்