- (A) கம்பியின் நீளம் இருமடங்காக்கப்படும் எனின், கம்பியின் விகாரம் இருமடங்காகும்.
- (B) கம்பியின் குறுக்கு வெட்டுப் பரப்பளவு இருமடங்காக்கப்படுமெனின், கம்பியின் விகாரம் இருமடங்காகும்.
- (C) தொங்கவிடப்பட்ட திணிவு இருமடங்காக்கப்படுமெனின், கம்பியின் விகாரம் இருமடங்காகும்.
- (1) (A) மாத்திரம் உண்மையானது
- (2) (B) மாத்திரம் உண்மையானது
- (3) (C) மாத்திரம் உண்மையானது
- (4) (A), (C) என்பன மாத்திரம் உண்மையானவை
- (5) (B), (C) என்பன மாத்திரம் உண்மையானவை
மேலுள்ள கூற்றுக்களில்,
சரியான விடை: (3)
விகிதசம எல்லை விஞ்சப்படாதவாறு ஒரு கம்பியில் திணிவொன்று தொங்கவிடப்படும் போது, கம்பியில் ஏற்படும் நீட்சி e எனின்,
e =
இங்கு,
e = கம்பியில் ஏற்படும் நீட்சி
F = கம்பியில் தாக்கும் விசை (பொருளின் நிறை)
l = கம்பியின் ஆரம்ப நீளம்
A = கம்பியின் குறுக்குவெட்டுப் பரப்பு
Y = கம்பி ஆக்கப்பட்ட திரவியத்தின் ஜங்கின்மட்டு
மேலுள்ள சமன்பாட்டின்படி, கம்பியின் நீளம் (l) இரு மடங்காக்கப்படின், நீட்சி (e) இருமடங்காகும்.
கம்பியில் ஏற்படும் விகாரம் = நீட்சி / ஆரம்ப நீளம்
= e / l
நீட்சி, ஆரம்ப நீளம் இரண்டும் இரு மடங்காவதால் விகாரத்தில் மாற்றம் ஏற்படாது. எனவே கூற்று (A) தவறானது.
மேலுள்ள சமன்பாட்டின்படி, கம்பியின் குறுக்குவெட்டு பரப்பு இரு மடங்காக்கப்படின், நீட்சி பாதியாகும். எனவே, நீட்சி/ஆரம்ப நீளம் எனும் விகிதம், அதாவது விகாரம் பாதியாகும். ஆகவே கூற்று (B) தவறானது.
தொங்கவிடப்படும் திணிவு இரு மடங்காக்கப்படின், அதன் நிறை இரு மடங்காகும். அதாவது, கம்பியில் தாக்கும் விசை இரு மடங்காகும். எனவே, மேலுள்ள சமன்பாட்டின்படி நீட்சி இரு மடங்காகும். நீட்சி/ஆரம்ப நீளம் எனும் விகிதம் அதாவது, விகாரம் இரு மடங்காகும். எனவே, கூற்று (C) உண்மையானது.
விடை (3) பொருத்தமானது.
No comments:
Post a Comment