A/L 2001 MCQ – வினா 26 - விடையும் விளக்கமும்

திசைகாட்டி ஒன்று வரிப்படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு கம்பி ஒன்றின் மீது வைக்கப்பட்டுள்ளது.
கம்பியினூடாக பெரிய மின்னோட்டம் ஒன்று அனுப்பப்படும் போது திசை காட்டும் ஊசியின் திசையைப் பின்வரும் வரிப்படங்களில் எது மிகச் சிறந்த முறையில் வகைகுறிக்கின்றது? புவியின் காந்தப் புலம் காரணமாக உண்டாகும் விளைவுகளைப் புறக்கணிக்க.
  1. (1)
  2. (2)
  3. (3)
  4. (4)
  5. (5)
சரியான விடை: (4)

விளக்கம்
கம்பியில் வலது பக்கமாக பெரிய மின்னோட்டம் ஓடுவதாக காட்டப்பட்டுள்ளது (விடைகளைப் பார்க்கவும்). கம்பியினூடாக மின்னோட்டம் ஓடும்போது, கம்பியைச் சூழ வட்டப்பாதையில் காந்தப்புலம் உருவாகும். காந்தப்புலத்தின் திசையை அறிய வலக்கை உள்ளங்கை விதியை பிரயோகிக்க.

வலது கையின் பெருவிரல் மின்னோட்டத்தின் திசையில் இருக்க, கம்பியை வலது கையால் பற்றிப் பிடிக்கும்போது, ஏனைய விரல்கள் உருவாகும் காந்தப் புலத்தின் திசையைக் காட்டும்.

எனவே, இங்கே தரப்பட்ட கம்பியின் மேலே, அதாவது திசைகாட்டி இருக்கும் இடத்தில், மேலிருந்து கீழான திசையில் காந்தப்புலம் இருக்கும்.


திசைகாட்டியிலுள்ள காந்தம், காந்தப்புலத்தின் திசையில் S N இருக்கக் கூடியவாறு திரும்பும்.

அதாவது, திசைகாட்டியின் காந்தம், விடை (4) இல் காட்டப்பட்டுள்ளது போல் திரும்பும்.

குறிப்பு: இங்கே, புவிக் காந்தப் புலம் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment