A/L 2001 MCQ – வினா 34 - விடையும் விளக்கமும்

உருவில் காணப்படுகின்றவாறு இறுக்கமாகக் கட்டப்பட்டுள்ள கயிறு ஒன்றில் ஒரு நிறை W தொங்கவிடப்பட்டுள்ளது.


கயிற்றின் இழுவை
  1. (1) அண்ணளவாக W
  2. (2) அண்ணளவாக
  3. (3) இலும் குறைவு
  4. (4) இற்கும்  W விற்குமிடைப்பட்டது
  5. (5) W விலும் மிகக் கூடியது

சரியான விடை: (5)

விளக்கம்
நிறையானது இறுக்கமான கயிற்றின் நடுப் பகுதியில் கட்டப்பட்டுள்ளதால், கயிற்றில் உள்ள இழுவைகள் (T) சமனானவையாகவும், கயிறு நிலக்குத்துடன் ஆக்கும் கோணங்கள் சமனானவையாகவும் (θ) இருக்கும்.

நிலைக்குத்துத் தளத்தில் உள்ள விசைகளை சமன்படுத்தினால்...

          2 x T cosθ = W
                         T =

θ ஆனது, 60° இலும் கூடியதாகவும் 90° க்கு கிட்டியதாகவும் இருக்கின்றது.

cos60° = 0.5 ஆகும். cos90° = 0 ஆகும்.

θ ஆனது  60° இலும் கூடியதாகவும் 90° க்கு கிட்டியதாகவும் இருப்பதனால், cosθ ஆனது பூச்சியத்திற்கு கிட்டிய பெறுமானமாக (0.5 இலும் குறைந்ததாக) இருக்கும்.

எனவே, மேலுள்ள சமன்பாட்டின்படி, T ஆனது W இலும் பார்க்க மிகக் கூடிய பெறுமானமாக இருக்கும்.

No comments:

Post a Comment