A/L 2001 MCQ – வினா 27 - விடையும் விளக்கமும்

கதிர்த் தொழிற்பாட்டு   கரு இரு β- காலல்களையும் அதனைத் தொடர்ந்து ஓர் α காலலையும் காலுகின்றது. அதன் பின்னர் உண்டாகும் கரு
  1. (1) 86 புரோத்தன்களையும் 140 நியூத்திரன்களையும் கொண்டிருக்கும்
  2. (2) 88 புரோத்தன்களையும் 140 நியூத்திரன்களையும் கொண்டிருக்கும்
  3. (3) 90 புரோத்தன்களையும் 140 நியூத்திரன்களையும் கொண்டிருக்கும்
  4. (4) 90 புரோத்தன்களையும் 142 நியூத்திரன்களையும் கொண்டிருக்கும்
  5. (5) 96 புரோத்தன்களையும் 142 நியூத்திரன்களையும் கொண்டிருக்கும்
சரியான விடை: (3)

விளக்கம்
கதிர்த்தொழிற்பாட்டின் பின்னர் உருவாகும் கருவை X என்க. கதிர்த் தொழிற்பாட்டிற்கு உரிய சமன்பாட்டை எழுதுக.

          + + 2

அணுவெண்களை சமன் செய்தால்,
         90 = p + 2 + (2 x -1)

ஆகவே,
           p = 90  ------------(1)

திணிவெண்களை சமன் செய்தால்,
       234 = p + n + 4 + 0

     p + n = 230   --------(2)

(1), (2) இலிருந்து,
            n = 140

ஆகவே, கதிர்த்தொழிற்பாட்டின் பின்னர் உருவாகும் கரு, 90 புரோத்தன்களையும் 140 நியூத்திரன்களையும் கொண்டிருக்கும்.

No comments:

Post a Comment