A/L 2001 MCQ – வினா 24 - விடையும் விளக்கமும்

இரு திணிவுகள் இலேசான இழை ஒன்றினாலே தொடுக்கப்பட்டு, ஒப்பமான கிடை மேசை ஒன்றின் மீது வைக்கப்பட்டு, உருவில் காணப்படுகின்றவாறு இழுக்கப்படுகின்றன.

இரு திணிவுகளையும் தொடுக்கும் இழையில் உள்ள இழுவை யாது?
  1. (1) 4 N
  2. (2) 8 N
  3. (3) 12 N
  4. (4) 20 N
  5. (5) 30 N
சரியான விடை: (2)

விளக்கம்

6 kg திணிவிற்கு F = ma (வலப்பக்கமாக) பிரயோகிக்க.

          20 - T = 6 a     --------------(1)

6 kg திணிவிற்கு F = ma (வலப்பக்கமாக) பிரயோகிக்க.

                 T = 4 a     --------------(2)

(1) + (2) இலிருந்து,
               20 = 10 a

ஆகவே,
                 a = 2 ms-2

(2) இலிருந்து,
                T = 4 x 2

                T = 8 N

எனவே, இழையிலுள்ள இழுவை 8 N ஆகும்.

No comments:

Post a Comment