A/L 2001 MCQ – வினா 41 - விடையும் விளக்கமும்

இசைக்கவை ஒன்றின் மீடிறன் 256 Hz ஆகும். இது சுரமானிக் கம்பி ஒன்றுடன் ஒலிக்கச் செய்யப்பட்ட போது செக்கனுக்கு 3 அடிப்புகள் கேட்டன. கம்பியின் இழுவை குறைக்கப்பட்ட போது மீண்டும் செக்கனுக்கு 3 அடிப்புகள் கேட்டன. இழுவையைக் குறித்த பின்னர் சுரமானிக் கம்பியின் மீடிறன்
  1. (1) 250 Hz
  2. (2) 253 Hz
  3. (3) 256 Hz
  4. (4) 259 Hz
  5. (5) 262 Hz

சரியான விடை: (2)

விளக்கம்
ஆரம்பத்தில் 256 Hz இசைக்கவையை சுரமானிக் கம்பியுடன் இசைக்கச் செய்தபோது 3 அடிப்புகள் கேட்டன. எனவே, ஆரம்பத்தில் (இழுவை குறைக்க முன்னர்) சுரமானிக் கம்பியின் மீடிறன் 259 Hz ஆக அல்லது 253 Hz ஆக இருந்திருக்கும்.

சுரமானிக் கம்பியின் இழுவையைக் குறைத்தால், அதன் மீடிறன் குறையும். எனவே, ஆரம்ப மீடிறன் 253 Hz ஆக இருந்திருக்க முடியாது. ஏனெனில், மீடிறன் மேலும் குறைந்தால், அடிப்பு மீடிறன் 3 இலும் பார்க்க அதிகரித்திருக்க வேண்டும்.

ஆனால், தரவின் படி, அடிப்பு மீடிறன் மீண்டும் 3 என்பதால், சுரமானிக் கம்பியின் ஆரம்ப மீடிறன் 259 Hz ஆக இருந்திருத்தல் வேண்டும். இந்நிலையில் இழுவையைக் குறைப்பதால், மீடிறன் குறைந்து மீண்டும் 3 அடிப்பு கேட்கும் சாத்தியம் உண்டு. இழுவையக் குறைத்த பின்னர், சுரமானிக் கம்பியின் மீடிறன் 253 Hz ஆக இருக்கும்.

No comments:

Post a Comment