- (1) 7.5 cm
- (2) 15 cm
- (3) 28 cm
- (4) 30 cm
- (5) 32 cm
சரியான விடை: (2)
குழிவு ஆடியொன்றின் முதலச்சு வழியே, வளைவு மையத்தில் வைக்கப்படும் பொருளுக்கு, வளைவு மையத்தில் பொருளளவான, தலைகீழான, மெய் விம்பம் உருவாகும்.
பொருள் வளைவு மையத்திற்கு அப்பால் வைக்கப்படும்போது பொருளைவிட சிறிய, தலைகீழான மெய் விம்பம், குவியத்திற்கும் வளைவு மையத்திற்கும் இடையே பெறப்படும்.
பொருள் குவியத்திற்கும் வளைவு மையத்திற்கும் இடையே வைக்கப்படும் போது பொருளைவிட பெரிய, தலைகீழான, மெய் விம்பம், வளைவு மையத்திற்கு அப்பால் பெறப்படும்.
பொருள் 31 cm இல் வைக்கப்படும் போது, பொருளைவிட சிறிய விம்பமும் பொருள் 29 cm இல் வைக்கப்படும் போது, பொருளைவிட பெரிய விம்பமும் பெறப்படுகின்றது. எனவே, தரப்பட்ட குழிவு ஆடியின் வளைவு மையம், 29 cm இற்கும் 31 cm இற்கும் இடையில் இருத்தல் வேண்டும்.
குழிவாடியின் வளைவினாரை (வளைவு மையத்திற்கான தூரம்) ஆனது, குவியத்தூரத்தின் இரு மடங்கு ஆகும். எனவே, குவியத்தூரம் 14.5 cm இற்கும் 15.5 cm இற்கும் இடையில் இருக்கும்.
எனவே, குவியத்தூரம் = 15 cm என்பதே பொருத்தமான விடையாகும்.

No comments:
Post a Comment