A/L 2001 MCQ – வினா 39 - விடையும் விளக்கமும்

ராக்கெட் ஒன்றினுள்ளே நிலைக்குத்தாக இருக்கும் குறுக்கு வெட்டுப் பரப்பளவு 3.0 m2 ஐ உடைய தாங்கியில் 1.8 x 104 kg திரவ ஒட்சிசன் உள்ளது. ரொக்கெட் புறப்படும் கணத்தில் அதன் ஆர்முடுகல் புவி தொடர்பாக நிலைக்குத்தாக மேல்நோக்கி 2.0 ms-1 ஆகும். அக் கணத்தில் தாங்கியின் அடி மீதுள்ள அமுக்கம்
  1. (1) 1.2 x 103 N m-2
  2. (2) 7.2 x 103 N m-2
  3. (3) 1.2 x 104 N m-2
  4. (4) 6.0 x 104 N m-2
  5. (5) 7.2 x 104 N m-2

சரியான விடை: (5)

விளக்கம்
ரொக்கெட் புறப்படும் கணத்தில் உள்ள மேலுதைப்பு விசை F என்க.

மேல் நோக்கி F = ma பிரயோகிக்க.

         F - mg = ma

                  F = ma + mg

                     = (1.8 x 104 x 2) + (1.8 x 104 x 10)

                     = 21.6 x 104 N

தாங்கியின் அடி மீதுள்ள,

          அமுக்கம் = விசை / பரப்பு

                               = 21.6 x 104 / 3

                               = 7.2 x 104 N m-2

No comments:

Post a Comment