A/L 2001 MCQ – வினா 20 - விடையும் விளக்கமும்

அடைத்த அறை ஒன்றினுள்ளே தொடர்பு ஈரப்பதனை
  1. (A) அறையினுள்ளே நீராவியைக் கூட்டுவதன் மூலம்
  2. (B) அறையினுள்ளே வெப்பநிலையைக் குறைப்பதன் மூலம்
  3. (C) அறையின் கனவளவைக் குறைப்பதன் மூலம்
    கூட்டலாம்.
  4. மேலேயுள்ள கூற்றுக்களில்

  5. (1) (A) மாத்திரம் உண்மையானது
  6. (2) (B) மாத்திரம் உண்மையானது
  7. (3) (A), (B) ஆகியன மாத்திரம் உண்மையானவை
  8. (4) (B), (C) ஆகியன மாத்திரம் உண்மையானவை
  9. (5) (A), (B), (C) ஆகிய எல்லாம் உண்மையானவை
சரியான விடை: (5)

விளக்கம்
தொடர்பு ஈரப்பதன் (சாரீரப்பதன்) என்பது, குறித்த வெப்பநிலையில், குறித்த கனவளவில் இருக்கும் நீராவியின் திணிவிற்கும், அக்கனவளவில் இருக்கக் கூடிய நீராவியின் திணிவிற்கும் இடையிலுள்ள விகிதம் ஆகும்.

அறையினுள் நீராவியைக் கூட்டுவதன் மூலம், அறையினுள் இருக்கும் நீராவியின் திணிவு அதிகரிக்கின்றது. எனவே, சாரீரப்பதன் அதிகரிக்கும்.

அறையின் வெப்பநிலையை குறைப்பதன் மூலம், அறையினுள்ளே இருக்கக் கூடிய நீராவியின் திணிவு குறைகிறது. எனவே, சாரீரப்பதன் அதிகரிக்கும்.

அறையின் கனவளவைக் குறைப்பதன் மூலம், அறையினுள் இருக்கக் கூடிய நீராவியின் திணிவு குறைவதால், சாரீரப்பதன் அதிகரிக்கும்.

எனவே, (A), (B), (C) ஆகிய எல்லாம் உண்மையானவை.

No comments:

Post a Comment