A/L 2001 MCQ – வினா 17 - விடையும் விளக்கமும்

ஒரு நிற ஒளிக்கதிர் ஒன்று அரியம் ஒன்றினூடாகச் சென்ற பின்னர் இழிவு விலகலுறுகின்றது. அரியத்தின் முகம் ஒன்றினால் உண்டாக்கப்படும் விலகற் கோணம் 20° எனின், கதிரின் இழிவு விலகற் கோணம்
  1. (1) 10°
  2. (2) 20°
  3. (3) 30°
  4. (4) 40°
  5. (5) 60°
சரியான விடை: (4)

விளக்கம்
ஒரு நிற ஒளிக்கதிர் ஒன்று அரியம் ஒன்றினூடாக சென்ற பின்னர் இழிவு விலகலுருவதை அருகிலுள்ள உரு காட்டுகின்றது.

இழிவு விலகல் அடையும் போது, அரியத்தின் முகங்களினால் ஏற்படுத்தப்படும் விலகல் கோணங்கள் சமமாக இருக்கும்.

உருவில்,

d = அரிய முகமொன்றினால் உருவாகும் விலகல் கோணம்
D = இழிவு விலகல் கோணம்

முக்கோணம் ABC ஐ கருதுக.

          D = d + d

குறிப்பு: முக்கோணி ஒன்றின் புறக்கோணம், அதன் அகத்து-எதிர் கோணங்களின் கூட்டுத்தொகைக்கு சமமாகும்.

அரிய முகம் ஒன்றினால் உருவாகும் விலகல் கோணம் d = 20° என தரப்பட்டுள்ளது.

ஆகவே, இழிவு விலகல் கோணம் D = 40° ஆகும்.

No comments:

Post a Comment