A/L 2001 MCQ – வினா 05 - விடையும் விளக்கமும்

செங்கீழ்க்கதிர்கள், கழியூதாக் கதிர்கள், X கதிர்கள், ரேடியோ அலைகள், γ கதிர்கள் என்பன தொடர்பாகச் செய்யப்பட்டுள்ள பின்வரும் கூற்றுகளைக் கருதுக.
  1. (A) அவை எல்லாம் மின்காந்த அலைகள்
  2. (B) அவையெல்லாம் சுயாதீன வெளியில் ஒரே கதியுடன் செல்கின்றன
  3. (C) ரேடியோ அலைகள் ஆகவும் நீளமான அலைநீளத்தை உடையன
  4. மேலுள்ள கூற்றுக்களில்,

  5. (1) (A) மாத்திரம் உண்மையானது
  6. (2) (A), (B) ஆகியன மாத்திரம் உண்மையானவை
  7. (3) (A), (C) ஆகியன மாத்திரம் உண்மையானவை
  8. (4) (B), (C) ஆகியன மாத்திரம் உண்மையானவை
  9. (5) (A), (B), (C) ஆகிய எல்லாம் உண்மையானவை

சரியான விடை: (5)

விளக்கம்
செங்கீழ்க்கதிர்கள், கழியூதாக் கதிர்கள், X கதிர்கள், ரேடியோ அலைகள், γ கதிர்கள் என்பன எல்லாம் மின்காந்த அலைகள்.

மின்காந்த அலைகள் சுயாதீன வெளியில் ஒரே கதியுடன் (ஒளியின் கதி, 3 x 108 m s-1) செல்கின்றன.

தரப்பட்ட அலைகளை மீடிறனை அடிப்படையாகக் கொண்டு ஏறுவரிசைப்படுத்தினால், ரேடியோ அலைகளே ஆகக் குறைந்த மீடிறனைக் கொண்டிருக்கும். எனவே, இவையே ஆகவும் நீளமான அலைநீளத்தைக் கொண்டவை.

எனவே, தரப்பட்ட மூன்று கூற்றுக்களும் உண்மையானவை.

No comments:

Post a Comment