A/L 2001 MCQ – வினா 09 - விடையும் விளக்கமும்

புரோத்தன் ஒன்று ஒரு அணுக்கரு (X) இற்கு எய்தப்படுகின்றது. உருவில் காணப்படும் பாதைகளில் எது புரோத்தன் செல்லும் பாதையாக இருக்கமாட்டாது?
  1. (1) P
  2. (2) Q
  3. (3) R
  4. (4) S
  5. (5) T
சரியான விடை: (4)

விளக்கம்

புரோத்தன் ஒரு நேரேற்றத் துணிக்கை. அணுக்கருவும் ஒரு நேரேற்றத் துணிக்கை. ஒத்த ஏற்றங்கள் ஒன்றை ஒன்று தள்ளும். எனவே, புரோத்தனின் பாதையானது அணுக்கருவிலிருந்து விலத்திச் செல்லும்.

வினாவில் தரப்பட்ட உருவில், P, Q, R, T ஆகிய பாதைகள் அணுக்கருவில் இருந்து விலத்திச் செல்கின்றன. ஆனால், பாதை S ஆனது அணுக்கருவை நோக்கி வளைகின்றது. இது பொருத்தமற்றது.

எனவே, புரோத்தனின் பாதையாக S இருக்கமாட்டாது.

No comments:

Post a Comment