அலகு 4 - வெப்பப் பௌதிகவியல்

அலகு வெப்பப் பௌதிகவியல் 60 பாடவேளைகளைக் கொண்டது.
  1. வெப்பநிலை (08 பாடவேளைகள்)
    • வெப்பச் சமநிலை
    • வெப்ப இயக்கவியலின் பூச்சிய விதி
    • வெப்பமான இயல்புகள் (Thermometric properties)
    • வெப்பமானிப் பதார்த்தங்கள் (Thermometric substances)
    • நிலைத்த இரு புள்ளிகளின் அடிப்படையில் வெப்பநிலையை வரையறுத்தல் θ=XθXLXHXL(θHθL)+θL
    • செல்சியஸ் அளவுத்திட்டம் θ=XθXLXHXL×100°C
    • தனி வெப்பநிலை அளவுத்திட்டம் (வெப்ப இயக்கவியல் அளவுத்திட்டம்)
    • தனிப்பூச்சியம் 
    • நீரின் மும்மைப் புள்ளி
    • நீரின் மும்மைப் புள்ளியின் அடிப்படையில் தனிப்பூச்சிய வெப்பநிலையை வரையறுத்தல் T=XTXtr×273.16
    • செல்சியஸ் அளவுத்திட்டத்துக்கும் தனிப் பூச்சிய அளவுத்திட்டத்திற்கும் இடையிலான தொடர்பு T=θ+273.15
    • வெப்பமானிகள்
      • திரவ - கண்ணாடி வெப்பமானிகள்
        • இரச - கண்ணாடி வெப்பமானிகள்
        • அல்ககோல் - கண்ணாடி வெப்பமானிகள் 
  2. வெப்பவிரிவு (06 பாடவேளைகள்)
    • திண்மங்களின் விரிவு
      • நீள விரிவு
      • பரப்பு விரிவு
      • கனவளவு விரிவு
    • நீள, பரப்பு, கனவளவு விரிவுகளுக்கிடையிலான தொடர்பு
    • திரவ விரிவு
      • உண்மை விரிவு
      • தோற்ற விரிவு γreal=γapparent+3α
      • வெப்பநிலையுடன் அடர்த்தி மாறல்
    • நீரின் ஒழுங்கற்ற விரிவு
    • திண்ம, திரவ விரிவுகளின் பயன்பாடு
  3. வாயு விதிகள் (10 பாடவேளைகள்)
    • போயிலின் விதி
      • இறகுக் குழாயைப் பயன்படுத்தி வளிமண்டல அமுக்கத்தைத் துணிதல்
    • சாள்சின் விதி
      • மாறா அமுக்கத்தில் வாயுவின் கனவளவுக்கும் வெப்பநிலைக்கும் இடையிலான தொடர்பை நுணுகி ஆராய்தல்
    • அமுக்க விதி
      • மாறாக் கனவளவில் அமுக்கத்திற்கும் வெப்பத்திற்கும் இடையிலான தொடர்பை நுணுகி ஆராய்தல்
    • இலட்சிய வாயுச் சமன்பாடு pV=nRT
    • டோல்ரனின் பகுதி அமுக்க விதி
  4. வாயுக்கள் பற்றிய இயக்கப்பாட்டுக் கொள்கை (04 பாடவேளைகள்)
    • இயக்கப்பாட்டுக் கொள்கையின் அடிப்படைக் கருதுகோள்கள்
    • வாயுவொன்றின் மூலம் அமுக்கம் தோற்றுவிக்கப்படுவதை விளக்கல்
    • இயக்கப்பாட்டுக் கொள்கையின் சமன்பாடு (நிறுவல் அவசியமில்லை) pV=13Nmc2
    • வெவ்வேறு வெப்பநிலைகளில் மூலக்கூற்றுக்கதிப் பரம்பல் (வரைபு ரீதியாக)
    • வாயு மூலக்கூறு ஒன்றின் இடை இயக்கசக்திக்கான சமன்பாடு E=32kT
  5. வெப்பப் பரிமாற்றம் (10 பாடவேளைகள்)
    • வெப்பக் கொள்ளளவு
    • திண்மங்களிலும் திரவங்களிலும் தன்வெப்பக் கொள்ளளவு
    • வாயுக்களின் மூலர் வெப்பக் கொள்ளளவு
    • கலவை முறையில் திண்ம, திரவங்களின் தன்வெப்பக் கொள்ளளவைத் துணிதல்
    • நியூற்றனின் குளிரல் விதி
    • குளிராக்கல் முறையின் மூலம் திரவங்களின் தன்வெப்பக் கொள்ளளவை துணிதல் 
  6. நிலைமாற்றம் (08 பாடவேளைகள்)
    • சடப்பொருட்களின் நிலைகள்
      • திண்ம, திரவ, வாயு மூலக்கூறுகளின் பண்புகளுக்கு இடையிலான வேறுபாடுகள்
    • உருகல், ஆவியாதலின் செயற்பாட்டின்போது மூலக்கூறுகளின் பங்களிப்புத் தொடர்பான எளிய விளக்கம்
    • உருகல் (உருகுதல்)
      • நிலைமாற்ற வளையி
      • உருகலின் தன்மறைவெப்பம்
      • பனிக்கட்டி உருகலின் தன்மறைவெப்பத்தை துணிதல் (கலவை முறை)
    • கொதித்து ஆவியாதல்
      • நிலைமாற்ற வளையி
      • ஆவியாதலின் தன்மறைவெப்பம்
      • நீரின் கொதித்தலின் தன்மறைவெப்பத்தைத் துணிதல் (கலவை முறை)
    • உருகுநிலைப் புள்ளி, கொதிநிலைப் புள்ளி என்பவற்றில் அமுக்கத்தின் பாதிப்பு
  7. ஆவியும் ஈரப்பதனியலும் (08 பாடவேளைகள்)
    • ஆவியாதல்
    • ஆவியாதலையும், கொதித்து ஆவியாதலையும் ஒப்பிடல்
    • ஆவியமுக்கமும், நிரம்பலாவி அமுக்கமும்
    • வெப்பநிலையுடன் ஆவியமுக்கம் வேறுபடல் (வரைபு ரீதியாக)
    • கனவளவுடன் நிரம்பலாவியமுக்கம் (வரைபு ரீதியாக)
    • நிரம்பலாவி அமுக்கமும் கொதிநிலையும்
    • பனிபடுநிலை
    • தனி ஈரப்பதன்
    • சாரீரப்பதன் / தொடர்பு ஈரப்பதன் 
      • துலக்கமான கலோரிமானியைப் பாவித்து சாரீரப்பதனை துணிதல்
  8. வெப்பவியக்கவியல் (04 பாடவேளைகள்)
    • வெப்பம், சக்தியின் நிலைமாற்றலின் ஒரு சந்தர்ப்பமாக விளக்கல்
    • அகச் சக்தி (உள்ளீட்டுச் சக்தி)
    • வெப்பவியக்கவியலின் முதலாம் விதி ΔQ=ΔU+ΔW
    • வெப்பவியக்கவியலின் முதலாம் விதி பயன்படுத்தப்படும் விசேட சந்தர்ப்பங்கள்
      • மாறா அமுக்க செயற்பாடு
      • மாறாக்கனவளவு செயற்பாடு
      • சமவெப்பு செயற்பாடு
      • சேறலிலா செயற்பாடு (Adiabatic)
      • சக்கரச் செயற்பாடுகள்
      • இலட்சிய வாயுவிற்கான அமுக்க - கனவளவு வளையி
  9. வெப்ப இடமாற்றுகை (06 பாடவேளைகள்)
    • கடத்தல்
      • வெப்பக்கடத்தாறு
      • வெப்பக்கடத்தல் வீதத்திற்கான சமன்பாடு
      • காவலிடப்பட்டதும் காவலிடப்படாததுமான சீரான கோலின் வழியே வெப்பநிலை மாறல் 
      • வெப்பக்கடத்தாறைத் துணிதல்
        • சேளின்முறை - Searl's Method (உலோகமொன்றிற்கு)
    • மேற்காவுகை (பண்பறி ரீதியாக)
    • கதிர்ப்பு (பண்பறி ரீதியாக)
ஏனைய அலகுகளின் பாடத்திட்டத்தை பார்க்க இங்கே அழுத்துங்கள்

அலகு 3 - அலைவுகளும் அலைகளும்

அலகு அலைவுகளும் அலைகளும் 100 பாடவேளைகளைக் கொண்டது.
  1. அலைவு (15 பாடவேளைகள்)
    • எளிய இசை இயக்கம் (S.H.M)
    • எளிய இசை இயக்கம் தொடர்பான பௌதிகக் கணியங்கள்
      • வீச்சம்
      • மீடிறன்
      • ஆவர்த்தன காலம்
      • சக்தி
    • எளிய இசை இயக்கத்தின் வரைவிலக்கணம் 
    • எளிய இசை இயக்கத்துக்குரிய நடத்தைச் சமன்பாடு a=ω2x
    • வட்ட இயக்கத்தின் எறியமாக எளிமை இசை இயக்கத்தை விளக்கல்
      • அதிர்வின் அவத்தை
      • அவத்தை வித்தியாசம்
      • இடப்பெயர்ச்சிக்கான சமன்பாடு (அலைவு t = 0 இல், x = 0 இல் ஆரம்பிக்கும்போது மட்டும்) y=a sin(ωt)
    • எளிய இசை இயக்கத்திற்கு ஒத்த இடப்பெயர்ச்சி - நேர வரைபு
    • எளிய ஊசலின் சிறிய அலைவு
      • அலைவுகாலம் T=2πlg
    • எளிய ஊசலை உபயோகித்து புவியீர்ப்பு ஆர்முடுகளைத் துணிதல்
    • இலேசான சுரி வில்லில் தொங்கவிடப்பட்ட திணிவின் அலைவுகள்
      • அலைவுக்காலம் T=2πmk
    • இலேசான சுரி வில் ஒன்றில் வில் மாறிலியைத் துணிதல் 
    • சுயாதீன அதிர்வு
    • தணித்த அதிர்வு
    • வலிந்த அதிர்வு
    • பரிவு
    • பாற்றனின் ஊசலின் மூலம் வாய்ப்புப் பார்த்தல்
  2. விருத்தியலைகள் (08 பாடவேளைகள்)
    • பொறிமுறை அலைகள்
      • சிலிங்கி / கதோட்டுக்கதிர் அலைவுகாட்டியை உபயோகித்து அலை இயக்கத்தை வாய்ப்புப் பார்த்தல்
      • குறுக்கலைகள்
      • நெட்டாங்கு அலைகள்
    • அலைகளை வரைபில் காட்டுதல்
    • ஒரே அவத்தையிலும் வெவ்வேறு அவத்தைகளிலும் காணப்படும் புள்ளிகள்
    • அலையுடன் தொடர்புடைய பௌதிகக் கணியங்கள்
      • அலையின் கதி - v
      • அலை நீளம் - λ
      • மீடிறன் - ƒ
      • வீச்சம் - A
    • மீடிறன், அலைநீளம், கதி என்பவற்றிற்கிடையிலான தொடர்பு v=fλ
  3. அலைகளின் இயல்புகள் (15 பாடவேளைகள்)
    • சிலிங்கி / குற்றலைதாங்கியின் மூலம் அலைகளின் இயல்புகளை வாய்ப்புப் பார்த்தல்
    • தெறிப்பு
      • விறைத்த தெறிப்பு
      • மென் தெறிப்பு
    • முறிவு
    • வெவ்வேறு ஊடகங்களில் அலைநீளம், அலை வேகம்
    • கோணல் (பண்பு ரீதியாக)
    • முனைவாக்கம் (பண்பு ரீதியாக)
    • அலை மீப்பொருத்தலின் தத்துவம் (வரைபு ரீதியாக)
      • தலையீடு
      • நிலையான அலைகள்
      • அடிப்புகள்
        •  அடிப்பு மீடிறனும் அதனை பயன்படுத்தலும்  (நிறுவல் அவசியமில்லை) fb=|f1f2|
    • நிலையான அலையினையும் விருத்தி அலையினையும் ஒப்பிடுதல்
  4. இழைகளிலும், கோல்களிலும் அலைகள் (12 பாடவேளைகள்)
    • ஈர்க்கப்பட்ட இழையில் நிலையான அலைகள்
      • குறுக்கலைகளின் கதி v=Tm
      • ஈர்க்கப்பட்ட இழையில் அதிர்வு வகைகள் 
        • அடிப்படைச்சுரம் f=12lTm
        • மேற்றொனி, இசைச்சுரம்
      •  சுரமானி
        • இழையின் இழுவையை மாற்றுவதன் மூலம் இசைக்கவையின் மீடிறணைத் துணிதல்
        • அதிர்வு நீளத்திற்கும் மீடிறனிற்கும் இடையிலான தொடர்பை வாய்ப்புப் பார்த்தல் 
    • கோலில் நெட்டாங்கு அலைகள்
      • நெட்டாங்கு அலைகளின் கதி v=Eρ
      • அடிப்படையில் அதிரல்
        • நுனியொன்றைப் பிடித்து அதிரச் செய்தல்
        • மத்தியில் பிடித்து அதிரச் செய்தல்
    • புவியதிர்வு அலைகள் (நடுக்க அலைகள்), ரிச்டர் அளவீடு, சுனாமி (பண்பு ரீதியாக)
  5. வளியில் அலைகள் (10 பாடவேளைகள்)
    • வளியில் ஒலி அலையின் கதி v=γPρ v=γRTM
    •  வளியில் ஒலி அலைகளின் கதி தங்கியுள்ள காரணிகள்
    • வளி நிரல்களில் அதிர்வுகளின் வகைகள்
      • மூடிய குழாய்
      • திறந்த குழாய்
    • மூடிய குழாயைப் பயன்படுத்தல் மூலம் வளியில் ஒலியின் வேகத்தைத் துணிதல்
      • ஓர் இசைக்கவையின் மூலம்
      • இசைக்கவைத் தொகுதி மூலம் (வரைபு மூலம்)
  6. டொப்ரின் விளைவு (05 பாடவேளைகள்)
    • தோற்ற மீடினிற்கான சமன்பாட்டைக் கூறுதல்
      • நோக்குநர் மாத்திரம் இயங்கும்போது
      • ஒலி முதல் மாத்திரம் இயங்கும்போது
      • நோக்குநரும் ஒலி முதலும் ஒரே நேர்கோட்டில் இயங்கும்போது
      • டொப்ளர் விளைவு தொடர்பான தோற்றப்பாடுகளை விளக்கலும் பிரயோகித்தாலும்
      • ஒலி விசை அதிர்வொலி (Sonic boom) (பண்பறி ரீதியாக; சமன்பாடுகள் அவசியமன்று)
  7. ஒலியின் இயல்புகள் (05 பாடவேளைகள்)
    • ஒலியின் சிறப்பியல்புகள்
      • சுருதி
      • உரப்பு
      • பண்பு
    • ஒலிச்செறிவும் ஒலிச்செறிவு மட்டமும் (டெசிபெல்)
    • மனிதக் காதுக்கான ஒலிச்செறிவு - அதிர்வெண் வரைபு
      • கேள்தகு எல்லை
        • கேள்தகு நுழைவாய் (Threshold of hearing)
        • நோ நுழைவாய் (Threshold of pain)
    • கழியொலியும் மீயொலியும் (பண்பு ரீதியாக)
  8. மின்காந்த அலைகள் (05 பாடவேளைகள்)
    • மின்காந்தத் திருசியம்
    • மின்காந்த அலைகளின் இயல்புகள்
    • மின்காந்த அலைகளின் உபயோகங்கள்
    • லேசர் கற்றைகள் (Laser beams)
      • கோட்பாடு 
      • இயல்புகள்
      • உபயோகங்கள்
  9. கேத்திர கணித ஒளியியல் (15 பாடவேளைகள்)
    • முறிவு
      • முறிவு விதிகள்
      • முறிவுச் சுட்டி
        • தனி முறிவுச் சுட்டி 
        • தொடர்பு முறிவுச் சுட்டி 
      • முறிவுச் சுட்டிகளுக்கிடையிலான தொடர்பு
      • உண்மை ஆழத்திற்கும் தோற்ற ஆழத்திற்கும் இடையிலான தொடர்பு 
      • தோற்ற இடப்பெயர்ச்சி d=t(11n)
      • நகரும் நுணுக்குக்காட்டியைப் பயன்படுத்தி கண்ணாடியின் முறிவுச்சுட்டியைத் துணிதல்
      • அவதிக்கோணம்
      • அவதிக்கோணத்திற்கும் தொடர்பு முறிவுச்சுட்டிக்கும் இடையிலான தொடர்பு n=1sinc
      • முழு அகத் தெறிப்பு
    • அரியத்தில் ஒளிமுறிவு
      • அரியத்தினூடான விலகலை பரிசோதனை மூலம் துணிதல்
        • விலகல்
        • d - i  வரைபு 
        • இழிவு விலகல்
        • அரியக்கோணம், முறிவுச்சுட்டி, இழிவு விலகல் கோணம் என்பவற்றிற்கு இடையிலான தொடர்பு n=sin[(A+D)2]sin(A2)
      • அவதிக்கோண முறையில் அரியம் ஆக்கப்பட்ட பதார்த்தத்தின் முறிவுச்சுட்டியைத் துணிதல்
    • திருசியமானி
      • திருசியமானியின் பிரதான செப்பஞ் செய்கை
      • அரியக் கோணத்தைத் துணிதல்
      • இழிவு விலகல் கோணத்தைத் துணிதல்
    • மெல்லிய வில்லைகளினூடு முறிவு 
      • வில்லையில் தோன்றும் உண்மையான / மாயமான விம்பங்கள் 
      • தெக்காட்டின் குறி வழக்கைக் கொண்ட வில்லைச் சூத்திரம் 
      • நேர்கோட்டு உருப்பெருக்கம்
      • குவிவு, குழிவு வில்லைகள் குவியத்தூரம் துணிதல் 
      • வில்லையின் வலு (+ converging , - diverging)
      • தொடுகையிலுள்ள மெல்லிய வில்லைகளின் சேர்மானம்
  10. மனிதக் கண் (04 பாடவேளைகள்)
    • கண்ணில் விம்ப உருவாக்கம் 
    • பார்வைக்கோணம் 
    • பார்வைக் குறைபாடுகளும் அவற்றைத் திருத்தலும்
      • குறும்பார்வை (Myopia)
      • நீள்பார்வை (Hypermetrobia)
      • வெள்ளெழுத்து (Presbyopia)
  11. ஒளியியற் கருவிகள் (06 பாடவேளைகள்)
    • எளிய நுணுக்குக்காட்டி
      • இயல்பான செப்பஞ்செய்கை
      • பெரிதாக்கும் வலு (கோண உருப்பெருக்கம்)
    • கூட்டு நுணுக்குக்காட்டி
      • இயல்பான செப்பஞ்செய்கை
      • பெரிதாக்கும் வலு (கோண உருப்பெருக்கம்)
    • வானியல் தொலைகாட்டி
      • இயல்பான செப்பஞ்செய்கை
      • பெரிதாக்கும் வலு (கோண உருப்பெருக்கம்)
      • அண்மைப்புள்ளியில் விம்பம் 
    • நுணுக்குக்காட்டிகளிலும் தொலைகாட்டிகளிலும் இயல்பான செப்பஞ்செய்கை நடைபெறாத சந்தர்ப்பங்கள் (கதிர் வரிப்படம் மட்டும்)

ஏனைய அலகுகளின் பாடத்திட்டத்தை பார்க்க இங்கே அழுத்துங்கள்.

    அலகு 2 : பொறியியல்

    அலகு பொறியியல் 110 பாடவேளைகளைக் கொண்டது.
    1.  இயக்கத்தியல் (Kinematics) (15 பாடவேளைகள்)
      • தொடர்பியக்கம்
        • சமாந்தரப்பாதைகளில் ஒரே திசையில் இயங்குதல்
        • சமாந்தரப்பாதைகளில் எதிர்த் திசையில் இயங்குதல்
      • மாறா ஆர்முடுகலின் கீழ் நேர்கோட்டியக்கம்
        •  இயக்கம் தொடர்பான வரைபுகளின் பயன்பாடு
          • s - t வரைபுகள் 
          • v - t வரைபுகள்
      • இயக்க சமன்பாடுகளின் பயன்பாடு
        • கிடைத்தளத்தில் இயக்கம்
        • புவியீர்ப்பின் கீழ் நிலைக்குத்தான இயக்கம்
        • புவியீர்ப்பின் கீழ் உராய்வு அற்ற சாய்தளத்தில் இயக்கம்
        • எறியம்
    2. விசைகளின் விளையுள், விசைத்திருப்பம் (15 பாடவேளைகள்)
      • விசைகளின் விளையுள்
        • இரு விசைகளின் விளையுள்
          • விசை இணைகர விதி
        • ஒருதள விசைத்தொகுதியின் விளையுள் விசை
          • விசைத் துணிப்பு முறை
          • விசைப் பல்கோணி முறை
      • விசைத்திருப்பம் (முறுக்கம்)
        • ஒரு புள்ளி பற்றி விசையொன்றின் திருப்பம்
        • விசை இணைத்திருப்பம்
      • சமாந்தர விசைகளின் விளையுள் விசையும் தாக்கக் கோடும் (ஒரே திசையிலுள்ள சமாந்தர விசைகள்)
      • பொருள் ஒன்றின் புவியீர்ப்புமையம் (சமாந்தர விசைகளின் விளையுளைப் பயன்படுத்தல்)
        • ஒழுங்கான பொருள்களின் புவியீர்ப்பு மையம்
        • ஒழுங்கான வடிவமுடைய கூட்டுப் பொருள்களின் புவியீர்ப்பு மையம்
      • திணிவு மையம்
      • விசை இணைகர விதியைப் பயன்படுத்தி பொருளொன்றின் நிறையைத் துணிதல்
    3. விசையும் இயக்கமும் (20 பாடவேளைகள்)
      • திணிவு
        • சடத்துவத்திணிவு
        • ஈர்ப்புத்திணிவு
      • சடத்துவ, சடத்துவமற்ற சட்டம்
        • சடத்துவ, (கற்பனை / போலி விசைகள் - அறிமுகம் மட்டும்) சடத்துவமற்ற விசைகள்
      • இயக்கம் தொடர்பான நியூற்றனின் முதலாம் விதி
      • உந்தம்
      • இயக்கம் தொடர்பான நியூற்றனின் இரண்டாம் விதி
        • F=ma   ஐப் பெறுதல்
        • நியூற்றன் என்பதை வரைவிலக்கணப்படுத்தல்
      • கணத்தாக்கங்களும் கணத்தாக்க விசைகளும்
      • நேர்கோட்டு உந்தக்காப்புத் தத்துவம்
        • மீளியல் மோதுகையும் மீளியல் அற்ற மோதுகையும்
      • இயக்கம் தொடர்பான நியூற்றனின் மூன்றாம் விதி
        • சுய செப்பஞ் செய்யும் விசைகள் 
          • இழுவை
          • உதைப்பு / நெருக்கல்
          • உராய்வு விசைகள் 
            • நிலையியல் உராய்வு
            • எல்லை உராய்வு 
            • இயக்கவியல் உராய்வு (Dynamic)
      • சுயாதீன பொருளில் விசை வரிப்படங்கள்
      • நியூற்றனின் விதிகளின் பிரயோகங்கள்
    4. சமநிலை (10 பாடவேளைகள்)
      • சமநிலைக்கான நிபந்தனைகள்
      • விசைத்திருப்பங்களின் தத்துவம் 
      • இரு விசைகளின் கீழ் சமநிலை 
      • ஒருதள விசைகளின் சமநிலை
        • மூன்று சமாந்தரமற்ற விசைகள்
        • மூன்று சமாந்தர விசைகள் 
        • விசை முக்கோணித் தேற்றம்
        • விசைப் பல்கோணி
        • திருப்புத்திறன் தத்துவம்
      • சமநிலை நிலைகள் 
        • உறுதி 
        • உறுதியில் 
        • நடுநிலை
        • விசைத்திருப்பத் தத்துவத்தைப் பயன்படுத்தி பொருளொன்றின் நிறையைத் துணிதல்
      • வேலை, சக்தி, வலு (15 பாடவேளைகள்)
        • வேலை
          • நேர்கோட்டு இயக்கத்தில் செய்யப்படும் வேலை
          • சுழற்சி இயக்கத்தின்போது செய்யப்படும் வேலை
        • பொறிமுறைச்சக்தி 
          • இயக்கப்பாட்டுச் சக்தி 
            • பெயர்வு இயக்கப்பாட்டுச் சக்தி 
          • அழுத்தசக்தி
            • ஈர்ப்பு அழுத்தசக்தி
            • மீளியல் அழுத்தசக்தி
        • வலுவும் திறனும் 
        • சக்திக்காப்புத் தத்துவம்
        • பொறிமுறைச் சக்தி காப்புத் தத்துவம்
        • வேலை - சக்தி தத்துவம் 
      • சுழற்சி இயக்கம், சீரான வட்ட இயக்கம் (15 பாடவேளைகள்)
        • சுழற்சி இயக்கம்
          • கோண இடப்பெயர்ச்சி
          • கோண வேகம்
          • சுழற்சி அதிர்வெண் (Frequency of rotation)
          • கோண ஆர்முடுகல்
          • சீரான கோண ஆர்முடுகலின் கீழ் சுழற்சி இயக்கச் சமன்பாடுகள் 
          • சடத்துவத்திருப்பம்
            • மெல்லிய சீரான கோல் 
            • மெல்லிய சீரான வளையம் 
            • சீரான வட்டத் தட்டும் உருளையும் 
            • சீரான கோளம் 
          • கோண உந்தம்
          • முறுக்கம்
          • முறுக்கம், சடத்துவத்திருப்பம், கோண ஆர்முடுகல் என்பவற்றுக்கிடையிலான தொடர்பு
          • கோண உந்தக் காப்புத் தத்துவம்
          • சுழற்சி இயக்கத்தில் செய்யப்பட்ட வேலை 
          • சுழற்சி இயக்கசக்தி 
          • நேர்கோட்டு இயக்கத்துக்கும் சுழற்சி இயக்கத்துக்கும் இடையிலான ஒப்புமைகள்
        • கிடைத் தளத்தில் சீரான  கோணவேகத்துடன் வட்ட இயக்கம்
          • மீடிறன்
          • தொடலிக் கதி
          • ஆவர்த்தன காலம்
          • மைய நாட்ட ஆர்முடுகல்
          • மைய நாட்ட விசை
      • நீர்நிலையியல் (12 பாடவேளைகள்)
        • நீர்நிலையியல் அமுக்கம்
        • வளிமண்டல அமுக்கம் 
        • திரவங்களின் தொடர்படர்த்தியை காணல் 
          • U - குழாயைப் பயன்படுத்தல் 
          • ஏயரின் ஆய்கருவியைப் பயன்படுத்தல் 
        • அமுக்கம் ஊடுகடத்தப்படல்
          • பஸ்காலின் தத்துவமும் பயன்பாடும்
        • மேலுதைப்பு
          • ஆக்கிமிடிசின் தத்துவம்
            • பரிசோதனை வாயிலாகவும் கொள்கை ரீதியிலும் சரிபார்த்தல்
        • மிதத்தல்
          • மிதத்தலுக்கான நிபந்தனைகள் 
          • மிதத்தல் விதி
          • நீரமானி 
          • நிறையேற்றப்பட்ட சோதனைக் குழாயை (அல்லது நீரமானியை) பயன்படுத்தி திரவங்களின் அடர்த்தியை ஒப்பிடல்
      • பாயி இயக்கவியல் (08 பாடவேளைகள்)
        • அருவிக்கோட்டு பாய்ச்சலும் கொந்தளிப்பு பாய்ச்சலும்
        • உறுதியான, அருவிக்கோட்டுப் பாய்ச்சலுக்கான தொடர்ச்சிக்குரிய சமன்பாடு
        • பேணுயீயின் தத்துவம் (Bernoulli) (பேணுயீயின் சமன்பாட்டின் நிறுவல் எதிர்பார்க்கப்படவில்லை)
        • பேணுயீயின் தத்துவத்தின் பயன்பாடு
        • பேணுயீயின் தத்துவத்தின் மூலம் விளக்கமளிக்கக் கூடிய சந்தர்ப்பங்கள்

          ஏனைய அலகுகளின் பாடத்திட்டத்தை பார்க்க இங்கே அழுத்துங்கள்.

          அலகு 1 : அளவீடு

          அலகு அளவீடு ஆனது 30 பாடவேளைகளை கொண்டது.
          1. பௌதிகவியல் - அறிமுகம் (02 பாடவேளைகள்)
            •  அன்றாட வாழ்க்கையுடன் பௌதிகவியல் தொடர்புறும் விதம்
            • நவீன சமூகத்தை விருத்தி செய்வதில் பௌதிகவியலின் பங்களிப்பு
            • விஞ்ஞான முறையின் அடிப்படை எண்ணக்கரு
          2. பௌதிகக் கணியங்களும் அலகுகளும் (04 பாடவேளைகள்)
            • அடிப்படையான பௌதிகக் கணியங்கள்
            • சர்வதேச அலகு முறை (SI அலகுகள்)
              • அடிப்படை அலகுகள்
              • மிகை நிரப்பு அலகுகள்
            • பெறுதிப் பௌதிகக் கணியங்களும் பெறுதி அலகுகளும்
            • அலகுகள் அற்ற பௌதிகக் கணியங்கள்
            • அலகுகளின் மடங்குகளும் உபமடங்குகளும் 
          3. பரிமாணங்கள் (04 பாடவேளைகள்)
            • பொறியியலில் பயன்படுத்தப்படும் அடிப்படையான மூன்று பௌதிகக் கணியங்களின் பரிமாணங்கள்
              • திணிவு
              • நீளம்
              • நேரம்
            • பெறுதி பௌதிகக் கணியங்களின் பரிமாணங்கள்  
            •  பரிமாணங்களின் பயன்பாடுகள்
              • பௌதிக சமன்பாடொன்றின் மெய்மையைச் சோதித்தல்
              • தெரியாத பௌதிகக் கணியங்களின் அலகையும் பரிமாணத்தையும் தேடல்
              • சமன்பாடுகளைப் பெறல் 
          4.  அளவீட்டு உபகரணங்கள் (12 பாடவேளைகள்)
            • கோட்பாடு, இழிவெண்ணிக்கையும் வீச்சும் 
            • அளவீட்டின் வழுக்கள் 
              • முறைமை வழு 
              • எழுமாற்று வழு 
              • பின்னவழு மற்றும் சதவீத வழு 
            • ஆய்வுகூட அளவீட்டு உபகரணங்கள் 
              • மீற்றர் அளக்கும் கோல்
              • வேணியர் இடுக்கி
              • நுண்மானித் திருகுக் கணிச்சி
              • கோளமாணி
              • நகரும் நுணுக்குக்காட்டி
              • முக்கோல் தராசு / நாற்கோல் தராசு / விஞ்ஞான இலத்திரனியல் தராசு
              • நிறுத்தல் மணிக்கூடு / நிறுத்தற் கடிகாரம் / இலக்கக் நிறுத்தல் கடிகாரம்
              • இலக்க பன்மானி  
          5. எண்ணிக் கணியங்களும் காவிக் கணியங்களும் (08 பாடவேளைகள்)
            • எண்ணிக் கணியங்கள்
            • காவிக் கணியங்கள்
              • காவியொன்றின் கேத்திரகணித வடிவம்
              • விளையுள் காவி 
                • ஒரே நேர்கோட்டில் அல்லது சமாந்தரக் கோடுகளில் உள்ள இரு காவிகள் 
                • சாய்வான இரு காவிகள் 
                  • காவி இணைகர முறை 
                  • காவி முக்கோணி முறை 
                • காவித் தொகுதி 
                  • காவிப் பல்கோணி முறை 
              • காவித்துணிப்பு  

          ஏனைய அலகுகளின் பாடத்திட்டத்தை பார்க்க இங்கே அழுத்துங்கள்.

                  பயிற்சி வினாக்கள்

                  பௌதிகவியலின் முழு பாடப் பரப்பையும் உள்ளடக்கக்கூடியதாக பயிற்சி வினாக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இப்பயிற்சி வினாக்கள் க.பொ.த. உயர்தரம் பௌதிகவியலின் அழகு ரீதியாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
                  1. அளவீடு
                  2. பொறியியல்
                  3. அலைவுகளும் அலைகளும்
                  4. வெப்பப் பௌதிகவியல்
                  5. ஈர்ப்புப்புலம்
                  6. நிலைமின்புலம்
                  7. ஓட்டமின்னியல்
                  8. மின்காந்தத் தோற்றப்பாடுகள்
                  9. இலத்திரனியல்
                  10. சடத்தின் பொறியியல் இயல்புகள்
                  11. சடமும் கதிர்ப்பும்
                  12. விஞ்ஞான அறிவின் வெளிப்பாடு
                  குறிப்பு : பயிற்சி வினாக்கள் மாணவர்களின் அறிவுத்திறனை கூட்ட உதவும். எவ்வளவுக்கு எவ்வளவு பயிற்சி வினாக்களுக்கு விடையளித்து பழகுகிறீர்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு இலகுவாக பரீட்சையில் விடையளிக்கக் கூடியதாக இருக்கும்.

                  கடந்தகால பரீட்சை வினாக்கள்

                  கடந்த காலத்தில் க.பொ.த. உயர்தரத்தில் நடைபெற்ற பௌதிகவியல் பரீட்சை வினாக்களும், அவற்றின் விடைகளும், அவ்விடைகளுக்குரிய விளக்கங்களும் இப்பகுதியில் உள்ளடக்கப்பட்டுள்ளன. உயர்தரப் பரீட்சை வினாக்கள் பல்தேர்வு வினாக்கள், அமைப்புக் கட்டுரை வினாக்கள், கட்டுரை வினாக்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன.

                  பல்தேர்வு வினாக்கள் : 

                  2014 | 2013 | 2012 | 2011 | 2010 | 2009 | 2008 | 2007 | 2006 | 2005 | 2004 | 2003 | 2001 | 2000


                  அமைப்புக் கட்டுரை வினாக்கள் :

                  2014 | 2013 | 2012 | 2011 | 2010 | 2009 | 2008 | 2007 | 2006 | 2005 | 2004 | 2003 | 2001 | 2000


                  கட்டுரை வினாக்கள் :

                  2014 | 2013 | 2012 | 2011 | 2010 | 2009 | 2008 | 2007 | 2006 | 2005 | 2004 | 2003 | 2001 | 2000

                  ஆய்வுகூட பரிசோதனைகள்

                  க.பொ.த. உயர்தரம் பௌதிகவியலில் பல ஆய்வுகூட பரிசோதனைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இப்பரிசோதனைகள், பாடசாலை ஆய்வுகூடங்களில் செய்யப்படல் வேண்டும். பரிசோதனைகளை மாணவர்கள் செய்வதற்கு ஆசிரியர்கள் உதவுவார்கள்.

                  பொதுவாக உயர்தர பரீட்சையில் பௌதிகவியல் பாடத்தின் பகுதி II இன் 'A' பகுதியில் இருக்கும் அமைப்புக் கட்டுரை வினாக்கள் ஆய்வுகூட பரிசோதனைகளை தழுவி இருக்கும். இந்த வகையில், ஆய்வுகூட பரிசோதனைகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

                  ஆய்வுகூட பரிசோதனைகள் :
                  1. அளவிடும் கருவிகளை கையாளப் பழகுதல்.

                  விளக்கங்களும் குறிப்புகளும்

                  க.பொ.த. உயர்தரம் பௌதிகவியலில் உள்ளடக்கப்பட்டிருக்கும் தலைப்புக்கள் மற்றும் உபதலைப்புகள், பாடவிதானங்கள், செயன்முறைகள் என்பன பற்றிய விளக்கங்களையும் அவற்றிற்குரிய குறிப்புகளையும் இங்கே பெற்றுக்கொள்ளலாம். இந்த விளக்கங்களும் குறிப்புகளும், உங்களின் சுய கற்றலுக்கு உறுதுணையாக இருக்கும்.

                  விளக்கங்களும் குறிப்புகளும் அலகு ரீதியாக பிரிக்கப்பட்டுள்ளன.
                  1. அளவீடு
                  2. பொறியியல்
                  3. அலைவுகளும் அலைகளும்
                  4. வெப்பப் பௌதிகவியல்
                  5. ஈர்ப்புப்புலம்
                  6. நிலைமின்புலம்
                  7. ஓட்டமின்னியல்
                  8. மின்காந்தத் தோற்றப்பாடுகள்
                  9. இலத்திரனியல்
                  10. சடத்தின் பொறியியல் இயல்புகள்
                  11. சடமும் கதிர்ப்பும்
                  12. விஞ்ஞான அறிவின் வெளிப்பாடு

                  பௌதிகவியல் பாடத்திட்டம்

                  க.பொ.த. உயர்தரத்தில் பௌதிகவியலும் ஒரு பாடமாகும். க.பொ.த. உயர்தரமானது தரம் 12 மற்றும் தரம் 13 ஐ உள்ளடக்கியுள்ளது. அத்துடன் தரம் 9 தொடக்கம் தரம் 11 (சா/த) வரையுள்ள விஞ்ஞான பாடத்தில் பௌதீகவியலின் அடிப்படை விடயங்கள் பல உள்ளடக்கப்பட்டுள்ளன.

                  இங்கே பதிவேற்றப்பட்டுள்ள பாடங்கள், 2017ம் ஆண்டு தொடக்கம் நடைமுறையிலுள்ள புதிய பாடத்திட்டத்திற்கு அமைவானவை. எனினும் பழைய பாடத்திட்டங்களில் இருந்து நீக்கப்பட்ட சில விடயங்களும் இங்கே இணைக்கப்பட்டுள்ளன.

                  பௌதிகவியல் உள்ளடக்கியிருக்கும் பாடங்கள் :
                  1. அளவீடு
                  2. பொறியியல்
                  3. அலைவுகளும் அலைகளும்
                  4. வெப்பப் பௌதிகவியல்
                  5. ஈர்ப்புப்புலம்
                  6. நிலைமின்புலம்
                  7. காந்தப்புலம்
                  8. ஓட்டமின்னியல்
                  9. இலத்திரனியல்
                  10. சடத்தின் பொறியியல் இயல்புகள்
                  11. சடமும் கதிர்ப்பும்
                  இப்பாடங்களை உள்ளடாக்கியதாகவே க.பொ.த. உயர்தரம் பௌதிகவியல் பொதுப் பரீட்சை வினாக்கள் அமைந்திருக்கும்.

                  விஞ்ஞான அறிவின் வெளிப்பாடு - இந்த பாடமானது புதிய பாடத்திட்டத்தில் நீக்கப்பட்டுள்ளது.

                  Welcome to G.C.E. A/L Physics blog website.


                  This site is created to help advanced level students who study the subject physics in their G.C.E. Advanced Level stream. Here, you can study by yourself. The contents on this site are based on the recommended syllabus and thus, we hope that you can acquire enough knowledge to sit for the G.C.E. A/L Physics exam.

                  However, reading the content is not enough to get high marks at the exam. You may use the Past Papers section and the Model Questions to improve yourself. We also have set up a Facebook page, "A/L Physics in English and Tamil Languages." to help students. If you are not clear about the content, please post a comment on the same page or post a comment on the Facebook page.

                  You also may post new questions on our Facebook page and get the answers from the admin or from other members. What we expect is interact with other students and share your knowledge.


                  க.பொ.த. உ/த. பௌதிகவியல் இணையதளத்திற்கு வரவேற்கிறோம்.


                  இந்த இணையத்தளமானது, பௌதிகவியலை ஒரு பாடமாக கொண்ட ஜி.சி.இ. உயர்தர மாணவர்களுக்கு உதவும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு, நீங்கள் யாருடைய உதவியும் இன்றி, சுயமாகவே கற்றுக்கொள்ளலாம். க.பொ.த. உயர்தரம் பௌதிகவியல் பாடத்திட்டத்திற்கு அமைவாகவே இங்கே பதிவுகள் இடப்பட்டுள்ளன என்பதால், இந்த இணையத்தளத்தில் இருந்து நீங்கள் க.பொ.த. உ/த. பௌதிகவியல் பரீட்சைக்கு தோற்றுவதற்கு தேவையான அறிவை பெற்றுக்கொள்ளலாம் என நம்புகின்றோம்.

                  குறிப்புகளையும் விளக்கங்களையும் வாசிப்பதால் மட்டும் போதிய அறிவை பெற்றுவிட முடியாது. எனவே, பயிற்சி வினாக்கள் மற்றும் கடந்தகால பரீட்சை வினாக்கள் பகுதிகளையும் பயன்படுத்தி உங்கள் அறிவை வளர்த்துக்கொள்ளுங்கள். மாணவர்களுக்கு உதவும் முகமாக, பேஷ்புக் இணையத்தளத்திலும் ஒரு பக்கத்தை A/L Physics in English and Tamil Languages. எனும் பெயரில் உருவாக்கி இருக்கிறோம். ஏதேனும் ஒரு விடயத்தைப் பற்றி உங்களுக்கு மேலதிக விளக்கங்கள் தேவைப்படின் அந்த பக்கத்திலேயோ அல்லது பேஷ்புக் பக்கத்திலோ உங்கள் கருத்துகளை பதியுங்கள்.

                  எமது பேஷ்புக் பக்கத்தில் நீங்கள் புதிய வினாக்களை பதிந்து, அவற்றிற்குரிய பதில்களை ஆசிரியரிடம் இருந்தோ அல்லது சக மாணவர்களிடம் இருந்தோ பெற்றுக்கொள்ளலாம். உங்கள் அறிவை ஏனைய மாணவர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு.