அலகு 3 - அலைவுகளும் அலைகளும்

அலகு அலைவுகளும் அலைகளும் 100 பாடவேளைகளைக் கொண்டது.
  1. அலைவு (15 பாடவேளைகள்)
    • எளிய இசை இயக்கம் (S.H.M)
    • எளிய இசை இயக்கம் தொடர்பான பௌதிகக் கணியங்கள்
      • வீச்சம்
      • மீடிறன்
      • ஆவர்த்தன காலம்
      • சக்தி
    • எளிய இசை இயக்கத்தின் வரைவிலக்கணம் 
    • எளிய இசை இயக்கத்துக்குரிய நடத்தைச் சமன்பாடு \[a = -{\omega^2}x\]
    • வட்ட இயக்கத்தின் எறியமாக எளிமை இசை இயக்கத்தை விளக்கல்
      • அதிர்வின் அவத்தை
      • அவத்தை வித்தியாசம்
      • இடப்பெயர்ச்சிக்கான சமன்பாடு (அலைவு t = 0 இல், x = 0 இல் ஆரம்பிக்கும்போது மட்டும்) \[y = a \textrm{ } sin{(\omega}t)\]
    • எளிய இசை இயக்கத்திற்கு ஒத்த இடப்பெயர்ச்சி - நேர வரைபு
    • எளிய ஊசலின் சிறிய அலைவு
      • அலைவுகாலம் \[T = 2{\pi} \sqrt{\frac {l}{g}}\]
    • எளிய ஊசலை உபயோகித்து புவியீர்ப்பு ஆர்முடுகளைத் துணிதல்
    • இலேசான சுரி வில்லில் தொங்கவிடப்பட்ட திணிவின் அலைவுகள்
      • அலைவுக்காலம் \[T = 2{\pi} \sqrt{\frac{m}{k}}\]
    • இலேசான சுரி வில் ஒன்றில் வில் மாறிலியைத் துணிதல் 
    • சுயாதீன அதிர்வு
    • தணித்த அதிர்வு
    • வலிந்த அதிர்வு
    • பரிவு
    • பாற்றனின் ஊசலின் மூலம் வாய்ப்புப் பார்த்தல்
  2. விருத்தியலைகள் (08 பாடவேளைகள்)
    • பொறிமுறை அலைகள்
      • சிலிங்கி / கதோட்டுக்கதிர் அலைவுகாட்டியை உபயோகித்து அலை இயக்கத்தை வாய்ப்புப் பார்த்தல்
      • குறுக்கலைகள்
      • நெட்டாங்கு அலைகள்
    • அலைகளை வரைபில் காட்டுதல்
    • ஒரே அவத்தையிலும் வெவ்வேறு அவத்தைகளிலும் காணப்படும் புள்ளிகள்
    • அலையுடன் தொடர்புடைய பௌதிகக் கணியங்கள்
      • அலையின் கதி - v
      • அலை நீளம் - λ
      • மீடிறன் - ƒ
      • வீச்சம் - A
    • மீடிறன், அலைநீளம், கதி என்பவற்றிற்கிடையிலான தொடர்பு \[v = f \lambda \]
  3. அலைகளின் இயல்புகள் (15 பாடவேளைகள்)
    • சிலிங்கி / குற்றலைதாங்கியின் மூலம் அலைகளின் இயல்புகளை வாய்ப்புப் பார்த்தல்
    • தெறிப்பு
      • விறைத்த தெறிப்பு
      • மென் தெறிப்பு
    • முறிவு
    • வெவ்வேறு ஊடகங்களில் அலைநீளம், அலை வேகம்
    • கோணல் (பண்பு ரீதியாக)
    • முனைவாக்கம் (பண்பு ரீதியாக)
    • அலை மீப்பொருத்தலின் தத்துவம் (வரைபு ரீதியாக)
      • தலையீடு
      • நிலையான அலைகள்
      • அடிப்புகள்
        •  அடிப்பு மீடிறனும் அதனை பயன்படுத்தலும்  (நிறுவல் அவசியமில்லை) \[f_b = \vert f_1 - f_2 \vert \]
    • நிலையான அலையினையும் விருத்தி அலையினையும் ஒப்பிடுதல்
  4. இழைகளிலும், கோல்களிலும் அலைகள் (12 பாடவேளைகள்)
    • ஈர்க்கப்பட்ட இழையில் நிலையான அலைகள்
      • குறுக்கலைகளின் கதி \[v = \sqrt{T \over m}\]
      • ஈர்க்கப்பட்ட இழையில் அதிர்வு வகைகள் 
        • அடிப்படைச்சுரம் \[f_\circ = \frac{1}{2l} \sqrt{T \over m}\]
        • மேற்றொனி, இசைச்சுரம்
      •  சுரமானி
        • இழையின் இழுவையை மாற்றுவதன் மூலம் இசைக்கவையின் மீடிறணைத் துணிதல்
        • அதிர்வு நீளத்திற்கும் மீடிறனிற்கும் இடையிலான தொடர்பை வாய்ப்புப் பார்த்தல் 
    • கோலில் நெட்டாங்கு அலைகள்
      • நெட்டாங்கு அலைகளின் கதி \[v = \sqrt {\frac {E}{\rho}}\]
      • அடிப்படையில் அதிரல்
        • நுனியொன்றைப் பிடித்து அதிரச் செய்தல்
        • மத்தியில் பிடித்து அதிரச் செய்தல்
    • புவியதிர்வு அலைகள் (நடுக்க அலைகள்), ரிச்டர் அளவீடு, சுனாமி (பண்பு ரீதியாக)
  5. வளியில் அலைகள் (10 பாடவேளைகள்)
    • வளியில் ஒலி அலையின் கதி \[v = \sqrt {\frac {\gamma P}{\rho}}\] \[v = \sqrt {\frac {\gamma RT}{M}}\]
    •  வளியில் ஒலி அலைகளின் கதி தங்கியுள்ள காரணிகள்
    • வளி நிரல்களில் அதிர்வுகளின் வகைகள்
      • மூடிய குழாய்
      • திறந்த குழாய்
    • மூடிய குழாயைப் பயன்படுத்தல் மூலம் வளியில் ஒலியின் வேகத்தைத் துணிதல்
      • ஓர் இசைக்கவையின் மூலம்
      • இசைக்கவைத் தொகுதி மூலம் (வரைபு மூலம்)
  6. டொப்ரின் விளைவு (05 பாடவேளைகள்)
    • தோற்ற மீடினிற்கான சமன்பாட்டைக் கூறுதல்
      • நோக்குநர் மாத்திரம் இயங்கும்போது
      • ஒலி முதல் மாத்திரம் இயங்கும்போது
      • நோக்குநரும் ஒலி முதலும் ஒரே நேர்கோட்டில் இயங்கும்போது
      • டொப்ளர் விளைவு தொடர்பான தோற்றப்பாடுகளை விளக்கலும் பிரயோகித்தாலும்
      • ஒலி விசை அதிர்வொலி (Sonic boom) (பண்பறி ரீதியாக; சமன்பாடுகள் அவசியமன்று)
  7. ஒலியின் இயல்புகள் (05 பாடவேளைகள்)
    • ஒலியின் சிறப்பியல்புகள்
      • சுருதி
      • உரப்பு
      • பண்பு
    • ஒலிச்செறிவும் ஒலிச்செறிவு மட்டமும் (டெசிபெல்)
    • மனிதக் காதுக்கான ஒலிச்செறிவு - அதிர்வெண் வரைபு
      • கேள்தகு எல்லை
        • கேள்தகு நுழைவாய் (Threshold of hearing)
        • நோ நுழைவாய் (Threshold of pain)
    • கழியொலியும் மீயொலியும் (பண்பு ரீதியாக)
  8. மின்காந்த அலைகள் (05 பாடவேளைகள்)
    • மின்காந்தத் திருசியம்
    • மின்காந்த அலைகளின் இயல்புகள்
    • மின்காந்த அலைகளின் உபயோகங்கள்
    • லேசர் கற்றைகள் (Laser beams)
      • கோட்பாடு 
      • இயல்புகள்
      • உபயோகங்கள்
  9. கேத்திர கணித ஒளியியல் (15 பாடவேளைகள்)
    • முறிவு
      • முறிவு விதிகள்
      • முறிவுச் சுட்டி
        • தனி முறிவுச் சுட்டி 
        • தொடர்பு முறிவுச் சுட்டி 
      • முறிவுச் சுட்டிகளுக்கிடையிலான தொடர்பு
      • உண்மை ஆழத்திற்கும் தோற்ற ஆழத்திற்கும் இடையிலான தொடர்பு 
      • தோற்ற இடப்பெயர்ச்சி \[d = t \, \left (1 - \frac {1}{n} \right ) \]
      • நகரும் நுணுக்குக்காட்டியைப் பயன்படுத்தி கண்ணாடியின் முறிவுச்சுட்டியைத் துணிதல்
      • அவதிக்கோணம்
      • அவதிக்கோணத்திற்கும் தொடர்பு முறிவுச்சுட்டிக்கும் இடையிலான தொடர்பு \[n = \frac {1}{\sin {c}}\]
      • முழு அகத் தெறிப்பு
    • அரியத்தில் ஒளிமுறிவு
      • அரியத்தினூடான விலகலை பரிசோதனை மூலம் துணிதல்
        • விலகல்
        • d - i  வரைபு 
        • இழிவு விலகல்
        • அரியக்கோணம், முறிவுச்சுட்டி, இழிவு விலகல் கோணம் என்பவற்றிற்கு இடையிலான தொடர்பு \[n = \frac {sin \left [\frac {(A+D)}{2}\right ]} {sin \left (\frac {A}{2} \right )} \]
      • அவதிக்கோண முறையில் அரியம் ஆக்கப்பட்ட பதார்த்தத்தின் முறிவுச்சுட்டியைத் துணிதல்
    • திருசியமானி
      • திருசியமானியின் பிரதான செப்பஞ் செய்கை
      • அரியக் கோணத்தைத் துணிதல்
      • இழிவு விலகல் கோணத்தைத் துணிதல்
    • மெல்லிய வில்லைகளினூடு முறிவு 
      • வில்லையில் தோன்றும் உண்மையான / மாயமான விம்பங்கள் 
      • தெக்காட்டின் குறி வழக்கைக் கொண்ட வில்லைச் சூத்திரம் 
      • நேர்கோட்டு உருப்பெருக்கம்
      • குவிவு, குழிவு வில்லைகள் குவியத்தூரம் துணிதல் 
      • வில்லையின் வலு (+ converging , - diverging)
      • தொடுகையிலுள்ள மெல்லிய வில்லைகளின் சேர்மானம்
  10. மனிதக் கண் (04 பாடவேளைகள்)
    • கண்ணில் விம்ப உருவாக்கம் 
    • பார்வைக்கோணம் 
    • பார்வைக் குறைபாடுகளும் அவற்றைத் திருத்தலும்
      • குறும்பார்வை (Myopia)
      • நீள்பார்வை (Hypermetrobia)
      • வெள்ளெழுத்து (Presbyopia)
  11. ஒளியியற் கருவிகள் (06 பாடவேளைகள்)
    • எளிய நுணுக்குக்காட்டி
      • இயல்பான செப்பஞ்செய்கை
      • பெரிதாக்கும் வலு (கோண உருப்பெருக்கம்)
    • கூட்டு நுணுக்குக்காட்டி
      • இயல்பான செப்பஞ்செய்கை
      • பெரிதாக்கும் வலு (கோண உருப்பெருக்கம்)
    • வானியல் தொலைகாட்டி
      • இயல்பான செப்பஞ்செய்கை
      • பெரிதாக்கும் வலு (கோண உருப்பெருக்கம்)
      • அண்மைப்புள்ளியில் விம்பம் 
    • நுணுக்குக்காட்டிகளிலும் தொலைகாட்டிகளிலும் இயல்பான செப்பஞ்செய்கை நடைபெறாத சந்தர்ப்பங்கள் (கதிர் வரிப்படம் மட்டும்)

ஏனைய அலகுகளின் பாடத்திட்டத்தை பார்க்க இங்கே அழுத்துங்கள்.

    4 comments: