அலகு 10 : சடத்தின் பொறியியல் இயல்புகள்

அலகு சடத்தின் பொறியியலானது 40 பாடவேளைகளைக் கொண்டது.
  1. திண்மங்களின் மீள்தன்மை (10 பாடவேளைகள்)
    • இழுவையும் நீட்சியும்
    • சுமை - நீட்சி வரைபு
    • ஹூக்கின் விதி
    • இழுவைத் தகைப்பு
    • இழுவை விகாரம்
    • யங்கின் மட்டு
    • உலோகக் கம்பியின் யங்கின் மட்டைத் துணிதல்
    • தகைப்பு - விகார வரைபு
    • இழுவைக்குள்ளாக்கப்பட்ட இழையில் சேமிக்கப்பட்டுள்ள சக்தி
  2. பிசுக்குமை (15 பாடவேளைகள்)
    • பிசுக்குமை விசை
      • பிசுக்குமை விசையை பாதிக்கும் காரணிகள்
        • வேகப்படித்திறன்
        • இழுவைத்தகைப்பு (F/A)
    • பிசுக்குமைக் குணகம் \[ F = A \eta \, (v_1 - v_2) / d  \]
    • பாயிப் பாய்ச்சலிற்கான புவசேயின் பிசுக்குமைச் சூத்திரம்
      • செல்லுபடியாகும் நிபந்தனைகள்
      • பரிமாணப் பகுப்பைப் பயன்படுத்தி சூத்திரம் சரியானதெனக் காட்டல்
      • பிசுக்குமைக் குணகத்தைத் துணிவதற்கு புவசேயின் சூத்திரத்தைப் பயன்படுத்தல்
    • பிசுக்குமை ஊடகத்தின் ஊடான பொருள்களின் இயக்கம்
      • பொருள் மீது தாக்கும் விசைகள்
      • வேக - நேர வரைபை பாவித்து முடிவு வேகம்
      • ஸ்ரோக்கின் விதி
        • செல்லுபடியாகும் நிபந்தனைகள்
        • பரிமாணப் பகுப்பினூடாக சூத்திரத்தை சரி பார்த்தல்
      • முடிவு வேகத்திற்கான சமன்பாடொன்றைப் பெறல்
        • மேல்நோக்கி இயங்கும் பொருள் ஒன்றிற்கான
        • கீழ்நோக்கி இயங்கும் பொருள் ஒன்றிற்கான
    • முடிவு வேகத்திற்கான சமன்பாட்டின் மூலம் பிசுக்குமைக் குணகத்தை ஒப்பிடல்
    • வெப்பநிலையுடன் பிசுக்குமை மாறும் விதம்
    • பிசுக்குமையின் பயன்பாடு
  3. மேற்பரப்பு இழுவை (15 பாடவேளைகள்)
    • திரவமொன்றின் சுயாதீன மேற்பரப்பின் இயல்புகளை விளக்கிக்காட்டல்
    • திரவமொன்றின் சுயாதீன மேற்பரப்பின் நடத்தையை மூலக்கூறுகளுக்கிடையிலான விசை மூலம் விளக்கல்
    • மேற்பரப்பு இழுவையின் வரைவிலக்கணம் 
    • தொடுகைக் கோணம்
    • திரவ பிறையுரு இயல்புக்கும் தொடுகைக் கோணத்திற்கும் இடையிலான தொடர்பு
    • சுயாதீன மேற்பரப்புச் சக்தி
    • திரவப்படலமொன்றில் சமவெப்புளியாக (Isothermal) மேற்பரப்பை அதிகரிக்கும்போது செய்யப்படும் வேலைக்கான கோவை
    • மேற்பரப்பு சக்திக்கும், மேற்பரப்பு இழுவைக்குமான தொடர்பு
    • கோளப்பிறையின் ஊடாக அமுக்க வேறுபாடுக்கான கோவை
    • மயிர்த்துளை எழுகை
      • மயிர்த்துளை எழுகைக் கோவையொன்றை பெறல்
    • பரப்பு இழுவையைத் துணிதல்
      • நுணுக்குக்காட்டி வழுக்கி முறையைப் பயன்படுத்தல்
      • கம்பிச்சட்டகமொன்றில் சவர்க்காரப் படலம் ஒன்றை ஆக்கி துணியும் முறை
      • மயிர்த்துளை எழுகை முறையைப் பயன்படுத்தல்
      • யேகரின் முறையைப் பயன்படுத்தல்
ஏனைய அலகுகளின் பாடத்திட்டத்தை பார்க்க இங்கே அழுத்துங்கள்.

No comments:

Post a Comment