அலகு ஓட்ட மின்னியலானது 70 பாடவேளைகளைக் கொண்டது.
- மின்னோட்டத்தின் அடிப்படை எண்ணக்கருக்கள் (10 பாடவேளைகள்)
- மின்னேற்றங்கள், மின்னோட்டம் \[I = \frac {Q}{t} \]
- உலோகக் கடத்தியொன்றினுள் ஓட்டம் கடத்தப்படுவதன் பொறிமுறை
- மின்னோட்டம், நகர்வுவேகம் என்பவற்றிற்கிடையிலான தொடர்பிற்கான கோவை
- ஓட்டப் பரப்படர்த்தி
- அழுத்த வேறுபாடு
- தடை, தடைத்திறன் \[R = \frac {\rho l}{A} \]
- வெப்பநிலையுடன் தடை மாறும் விதம்
- தடையின் வெப்பநிலைக் குணகம்
- மீகடத்துத்திறன்
- மீகடத்திகளின் நடத்தை
- மீகடத்திப் பொருட்கள்
- மீகடத்திகளின் இயல்புகள்
- மீகடத்திகளின் பயன்கள்
- தடைகளின் சேர்மானம்
- தொடர் இணைப்பு
- சமாந்தர இணைப்பு
- எளிய வலை வேலைகளின் சமவலுத் தடை
- அழுத்தப் பிரிகைச்சுற்று
- ஓமின் விதி
- ஓமின் விதி செல்லுபடியாகும் நிலைமைகள்
- V எதிர் I வரைபு
- ஓமின் விதிக்கு அமையும் கடத்திகள் (ஓமியக் கடத்திகள்)
- ஓமின் விதிக்கு அமையாத கடத்திகள்
- சக்தியும் வலுவும் (06 பாடவேளைகள்)
- ஏற்றம் பாய்வதற்கான விரயமாகும் சக்தி பற்றிய கோவை \[W = QV \] \[W = VIt \]
- சக்தி விரயமாகும் வீதத்திற்க்கான கோவை (வலுவிற்கான கோவை) \[P = VI \]
- பின்வரும் சமன்பாடுகளை பெறல் \[P = I^2 R \] \[P = \frac {V^2}{R} \] \[W = I^2 R t \] \[W = \frac {V^2 t}{R} \]
- பின்வரும் சமன்பாடுகளை ஏதாவது மின் உபகரணங்களுக்காக பயன்படுத்தல் \[P = VI \] \[W = VIt \]
- பின்வரும் சமன்பாடுகளை வெப்பத்தை மாத்திரம் தோற்றுவிக்கும் கூறுகளுக்காகப் பயன்படுத்துதல் (யூலின் வெப்ப விளைவு) \[P = I^2 R \] \[P = \frac {V^2}{R} \] \[W = I^2 R t \] \[W = \frac {V^2 t}{R} \]
- மின் இயக்க விசை (10 பாடவேளைகள்)
- எளிய மின்கலத்தின் தகடுகளுக்கிடையே மின் அழுத்தம் தோன்றும் முறை
- நியம மின்னோட்ட திசை
- பல்வேறு மின் இயக்க விசை முதல்களில் சக்திப் பரிமாற்றம்
- மின் இயக்க விசையின் வரைவிலக்கணம்
- அகத்தடையை அறிமுகப்படுத்தல்
- மின்னியக்கவிசை முதல் ஒன்றைக்கொண்ட சுற்றிற்கான சக்திக் காப்பு விதியை பயன்படுத்தல்
- மூடிய சுற்றில் கலத்தின் முனைகளுக்கான அழுத்த வேறுபாட்டிற்கான கோவை \[V = E - Ir \]
- கலமொன்றின் மின்னியக்க விசையையும் அகத்தடையையும் தீர்மானித்தல் (வரைபு முறை மூலம்)
- மின் இயக்க விசை முதல்களின் சேர்மானம்
- தொடராக இணைத்தல்
- ஒத்த முதல்களை சமாந்தரமாக இணைத்தல்
- தடையி ஒன்றின் தடைக்கும் அதில் விரயமாகும் வலுவுக்கும் இடையிலான வரைபு வகைக்குறிப்பு
- மின்இயக்கவிசை முதல்களிலிருந்து உச்ச வலுவைப் பெற்றுக்கொள்வதன் நிபந்தனை (நிறுவல் அவசியமன்று)
- மின்சுற்றுக்கள் (06 பாடவேளைகள்)
- கிர்க்கோப்பின் விதி
- முதலாம் விதி (ஏற்றக் காப்பு)
- இரண்டாம் விதி (சக்திக் காப்பு)
- மின் அளவிட்டுக் கருவிகள் (10 பாடவேளைகள்)
- அம்பியர்மானி, வோல்ற்றுமானி, பன்மானி
- அம்பியர்மானி
- ஒழுங்குபடுத்தல்
- இலட்சிய அம்பியர்மானியின் இயல்புகள்
- அம்பியர்மானியின் வீச்சை மாற்றுதல்
- உவோற்றுமானி
- ஒழுங்குபடுத்தல்
- இலட்சிய உவோற்றுமானியின் இயல்புகள்
- உவோற்றுமானியின் வீச்சை மாற்றுதல்
- ஓம்மானி
- ஒழுங்குபடுத்தல்
- பல்மானி (Multi - meter)
- உவீற்ஸ்ரன் பாலம்
- சமநிலைச் சந்தர்ப்பத்தில் தடைகளுக்கிடையிலான தொடர்பு
- மீற்றர் பாலம்
- மீற்றர் பாலத்தை பயன்படுத்தும்போது கவனிக்கவேண்டிய காரணிகள்
- தடைகளை ஒப்பிடல்
- தடைகளின் வெப்பநிலைக் குணகத்தைக் காணுதல்
- அழுத்தமானி
- அழுத்தமானியின் தத்துவம்
- அழுத்தமானியை அளவுகோடிடல்
- அழுத்தமானியை பயன்படுத்தும்போது கவனத்திற் கொள்ள வேண்டிய காரணிகள்
- அழுத்தமானியின் பயன்பாடு
- மின் இயக்க விசைகளை ஒப்பிடல்
- தடைகளை ஒப்பிடல்
- கலம் ஒன்றின் அகத்தடையை அளவிடல்
- மிகச்சிறிய மின் இயக்க விசையை அளவிடல்
- அழுத்தமானியின் பயன்பாட்டின் அனுகூலங்களும் பிரதிகூலங்களும்
- மின்காந்தத் தூண்டல் (20 பாடவேளைகள்)
- காந்தப்பாயம்
- பாய இணைப்பு
- மின்காந்தத் தூண்டல் விதிகள்
- பரடேயின் விதி
- லென்சின் விதி (Lenz's law)
- மின்காந்தத் தூண்டலைச் செய்துகாட்டல்
- காந்தப்புலமொன்றில் இயங்கும் நேரான கடத்தியொன்றில் தூண்டப்படும் மின்னியக்க விசை
- தூண்டல் மின் இயக்க விசைக்கான விளக்கமும் கோவையும்
- பிளமிங்கின் வலக்கை விதி
- காந்தப்புலமொன்றில் சுழலும் கோலில் தூண்டப்படும் மின்னியக்க விசை
- காந்தப்புலமொன்றில் சுழலும் தட்டில் தூண்டப்படும் மின்னியக்க விசை
- காந்தப்புலமொன்றில் சுழலும் செவ்வகச் சுருளில் தூண்டப்படும் மின்னியக்க விசை, உயர் பெறுமானத்திற்கான கோவை
- ஆடலோட்ட மின்பிறப்பாக்கி
- ஒழுங்கமைப்பு
- நேரத்துடன் மின்னியக்க விசை மாறலைக் காட்டும் வரைபு
- ஆடலோட்ட மின்னோட்டதினதும், அழுத்தத்தினதும் அறிமுகம்
- மின்னோட்டதினதும், அழுத்தத்தினதும் r.m.s. பெறுமானமும் உச்ச பெறுமானமும்
- தடைச் சுற்றுகளில் இடைவலுவாற்றில் தருதல்
- சுழியலோட்டமும் அதன் உபயோகமும்
- மோட்டார் ஒன்றின் பின் மின் இயக்க விசை
- மோட்டார் ஒன்றின் பின் மின் இயக்க விசையை செய்து காட்டல்
- ஆமேச்சரின் ஊடான மின்னோட்டத்தில் பின் மின்னியக்க விசையின் விளைவு
- ஆரம்ப ஓட்டத்தைக் கட்டுப்படுத்தல் (Starter Switch) / தொடக்க ஆளி
- மாற்றிகள்
- அமைப்பு
- முதல் சுற்றிலும் துணைச்சுற்றிலும் உள்ள சுற்றுக்களுக்கும் அழுத்த வித்தியாசத்திற்கும் இடையிலான தொடர்பு
- படிகுறை, படிகூட்டி மாற்றி
- மாற்றியின் பெய்ப்பு மற்றும் பயப்பு வலு
- VI பெருக்கமானது மாற்றியின் பெய்ப்பு / பயப்பு வலுவாகும்
- மாற்றியில் சக்தி விரயம்
- யூல் வெப்ப விரயம்
- சுரியல் ஓட்ட விரயம்
- சக்தி விரயத்தைக் குறைப்பதற்கான முறை
- மாற்றிகளின் பயன்பாடு
- மின்சக்தி ஊடுகடத்தல்
- ஆடலோட்ட மின்னோட்டத்தின் மூலகங்கள்
- ஆடலோட்ட முதலில் இருந்து சைன் வளையி (Sinusoid) அலைவடிவத்தில் அழுத்த வேறுபாடு, மின்னோட்டத்தைப் பெறல்
- உச்சப்பெறுமானம், இடைவர்க்கமூலப் பெறுமானம்
- மின்சுற்றுக்களின் தடையில் சராசரி வலு வாற்றில் (Watts)
ஏனைய அலகுகளின் பாடத்திட்டத்தை பார்க்க இங்கே அழுத்துங்கள்.
No comments:
Post a Comment