பௌதீக கணியங்களை எழுதும் போதும் அவற்றை சொல்லும் போதும் சரியான அலகுகளையும் சேர்த்து எழுதுதல் அல்லது சொல்லுதல் வேண்டும். அலகுகள் இல்லாமல் பருமனை மட்டும் எழுதினால் அல்லது கூறினால் அதனை சரியாக விளங்கிக் கொள்ள முடியாதிருக்கும்.
உதாரணமாக, ஒரு பொருளின் நீளத்தை "50" என கூறினால், அது சென்டிமீட்டரிலா, மில்லிமீட்டரிலா அல்லது மீட்டரிலா கூறப்படுகிறது என்பதை அறியமுடியாது. அது ஒருவேளை அங்குலம் அல்லது அடி போன்ற அளவுகளில் கூட கூறப்பட்டிருக்கலாம். இந்த குழப்பத்தைத் தவிர்ப்பதற்கு நாம் எப்போதும் சரியான அலகுகளை பயன்படுத்தல் வேண்டும். உதாரணமாக:
3 மீட்டர், 5 அடி, 19 அங்குலம். 2 கிலோமீட்டர்.
மேலுள்ள உதாரணங்கள் அலகுகளுடன் தெளிவாக உள்ளதை அவதானிக்கலாம். ஏனைய கணியங்களும் (அலகு இருக்கும் கணியங்கள்) இதேபோல் அலகுகளுடன் பாவிக்கப்படல் வேண்டும்.
உலகில் பல்வேறுபட்ட அலகு முறைமைகள் காணப்படுகின்றன. அவை பிரதேசவாரியாக வேறுபடுகின்றன. இன்றும் எமது நாட்டில் சிலர் பழைய அலகு முறைமையையே பயன்படுத்துகின்றனர். உதாரணமாக நீளத்தைக் குறிப்பதற்கு, அங்குலம், அடி, மைல் போன்ற அலகுகளையும், பரப்பளவைக் குறிப்பதற்கு, சதுர அடி, பரப்பு, ஏக்கர் போன்ற அலகுகளையும் பயன்படுத்துகின்றனர்.
வேற்று நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு எமது அளவுத்திட்டங்கள் பரீட்சயம் இல்லாதிருந்தால், அவற்றை விளங்கிக் கொள்வது கடினமாக இருக்கும். அவர்கள், தங்களது அளவுத்திட்டத்தில் கூறுவதை எங்களாலும் விளங்கிக்கொள்ள முடியாது. எனவே, உலகில் பொதுவான பாவனைக்காக சர்வதேச அலகுமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. சர்வதேச அலகு முறைமையை பாவிக்கும் போது, அனைவராலும் இலகுவாக விளங்கிக்கொள்ள முடியும். உதாரணங்கள்: மீட்டர், கிலோமீட்டர், கிலோகிராம், செக்கன், அம்பியர், நியூட்டன் ...
சர்வதேச முறைப்படி அலகுகளின் குறியீடுகளை எழுதும் போது கவனிக்கவேண்டியவை.
- பொதுவாக அலகுகள் ஆங்கில சிறிய எழுத்துக்களால் எழுதப்படும்.
உதாரணம்: \(\textrm{m}\) (மீட்டர்), \(\textrm{s}\) (செக்கன்), \(\textrm{kg}\) (கிலோகிராம்) - இரு எழுத்துக்களைக் கொண்ட அலகுகளை எழுதும்போது, இரு எழுத்துக்களும் அருகருகாக எழுதப்படல் வேண்டும்.
உதாரணம்: \(\textrm{kg}\) (கிலோகிராம்) - ஒரு அலகின் முதல் எழுத்து, ஒரு நபரின் பெயரைக் குறிக்குமாயின், அது ஆங்கில பெரிய எழுத்தாக எழுதப்படும்.
உதாரணம்: \(\textrm{N}\) (நியூட்டன்), \(\textrm{A}\) (அம்பியர்), \(\textrm{Wb}\) (உவேபர்), \(\textrm{Cd}\) (கண்டேலா) - அலகுகளை சேர்த்து எழுதும்போது, அலகுகளுக்கு இடையில் இடைவெளி இருத்தல் அவசியம். அல்லது அலகுகளுக்கு இடையில், பொறியியலில் பெருக்கல் குறியீடாக பயன்படுத்தப்படும் குற்று இடப்படலாம்.
உதாரணம்: \(\textrm{m s}^\textrm{-1}\), \(\textrm{m s}^\textrm{-2}\), \(\textrm{N m}\), \(\textrm{kg m}^\textrm{-3}\) அல்லது \(\textrm {m.s}^\textrm{-1}\), \(\textrm {m.s}^\textrm{-2}\), \(\textrm{N.m}\), \(\textrm{kg.m}^\textrm{-3}\) - முற்சேர்க்கைகள் அலகுகளுக்கு முன்னால் அவற்றுடன் சேர்த்து எழுதப்படல் வேண்டும். அலகுகளுக்கும் முற்சேர்க்கைகளுக்கும் இடையில் இடைவெளி இருத்தல் கூடாது.
உதாரணம்: \(\textrm{ms}\) (மில்லிசெக்கன்), \(\textrm{cm}\) (சென்டிமீட்டர்), \(\textrm{nm}\) (நனோமீட்டர்), \(\textrm{pF}\)(பிக்கோ பரட்) - அலகுகள் விசேட குறியீடுகளைக் கொண்டிருந்தால், அவற்றைப் பயன்படுத்துவது இலகுவானது.
உதாரணம்: \(\textrm{N}\), \(\textrm{Pa}\), \(\textrm{Wb}\) - ஒரு கனியத்தின் பருமனுடன் சேர்த்து அக்கணியத்தின் அலகை எழுதும்பொழுது, பருமனிற்கும் அலகிற்கும் இடையில் ஒரு சிறிய இடைவெளி இருத்தல் வேண்டும்.
உதாரணம்: \(\textrm{5 m}\)
மேலும் சில உதாரணங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
முற்சேர்க்கைகள்
பௌதீக கணியங்களின் அளவீடுகளின் பருமன்கள், மிகச் சிறிய அளவில் இருந்து மிகப் பெரிய அளவு வரை வேறுபடலாம்.
நீளம் எனும் பௌதீக கணியத்தை எடுத்துக்கொள்வோம். அணுவின் ஆரை எனும் மிக மிகச் சிறிய அளவில் இருந்து, பால்வீதியில் உடுத் தொகுதிகளுக்கு இடையிலான தூரம் எனும் மிகப் பெரிய அளவு வரை பரந்த வீச்சினுள் காணப்படும்.
அதேபோல் திணிவு எனும் பௌதீக கணியத்தை எடுத்துக்கொள்வோம். இலத்திரனின் திணிவு மிகச் சிறியது. நட்சத்திரத்தின் திணிவு மிகப் பெரியது. திணிவும் பரந்த வீச்சினுள் அளக்கப்படலாம்.
மிகச் சிறிய மற்றும் மிகப் பெரிய பருமன்களை இலக்கங்களாக எழுதுவது கடினமாகும். எனவே முற்சேர்க்கைகளைக் கொண்டு இவற்றை எழுதுவது இலகுவாக இருக்கும்.
பொதுவாக முற்சேர்க்கைகள் 10 இன் மடங்குகளாக அல்லது உபமடங்குகளாக இருக்கும். எனினும், குறிப்பிட்ட பருமன்களைக் கொண்ட மாறிலிகளும் முற்சேர்க்கைகளாக பயன்படுத்தப்படுகின்றன.
கணியங்களின் பெறுமானங்களுடன் அவற்றின் அலகையும் சேர்த்து எழுதுவதைக் காட்டும் சில உதாரணங்கள்:
\(\textrm{12 km}\) ; \(\textrm{20 cm}\) ; \(\textrm{60 Hz}\) ; \(\textrm{4 m s}^\textrm{-2}\) ; \(\textrm{9 N}\) ; \(\textrm{12}\times\textrm{10}^\textrm{7}\textrm{ m} \) ; \(\textrm{3 }\mu\textrm{m}\)
பயிற்சி வினாக்கள்
அலகு 1 இன் ஏனைய பகுதிகளுக்கான குறிப்புகளை படிப்பதற்கு, இங்கே அழுத்தவும்.
- e : இலத்திரன் : 1.6023 x 10-19
Eg: 1 eV = 1.6023 x 10-19 V (eV => இலத்திரன் வோல்ட்)
உபமடங்குகள் | ||
---|---|---|
உபமடங்கு | முற்சேர்க்கை | குறியீடு |
\(\textrm{10}^\textrm{-1}\) | டெசி (desi) | \(\textrm{d}\) |
\(\textrm{10}^\textrm{-2}\) | சென்ரி (centi) | \(\textrm{c}\) |
\(\textrm{10}^\textrm{-3}\) | மில்லி (milli) | \(\textrm{m}\) |
\(\textrm{10}^\textrm{-6}\) | மைக்ரோ (micro) | \(\mu\) |
\(\textrm{10}^\textrm{-9}\) | நனோ (nano) | \(\textrm{n}\) |
\(\textrm{10}^\textrm{-12}\) | பிக்கோ (pico) | \(\textrm{p}\) |
\(\textrm{10}^\textrm{-15}\) | பெம்ரோ (femto) | \(\textrm{f}\) |
\(\textrm{10}^\textrm{-18}\) | அற்ரோ (atto) | \(\textrm{a}\) |
மடங்குகள் | ||
---|---|---|
மடங்கு | முற்சேர்க்கை | குறியீடு |
\(\textrm{10}^\textrm{12}\) | ரெறா (tera) | \(\textrm{T}\) |
\(\textrm{10}^\textrm{9}\) | ஜிகா (giga) | \(\textrm{G}\) |
\(\textrm{10}^\textrm{6}\) | மெகா (mega) | \(\textrm{M}\) |
\(\textrm{10}^\textrm{3}\) | கிலோ (kilo) | \(\textrm{k}\) |
கணியங்களின் பெறுமானங்களுடன் அவற்றின் அலகையும் சேர்த்து எழுதுவதைக் காட்டும் சில உதாரணங்கள்:
\(\textrm{12 km}\) ; \(\textrm{20 cm}\) ; \(\textrm{60 Hz}\) ; \(\textrm{4 m s}^\textrm{-2}\) ; \(\textrm{9 N}\) ; \(\textrm{12}\times\textrm{10}^\textrm{7}\textrm{ m} \) ; \(\textrm{3 }\mu\textrm{m}\)
பயிற்சி வினாக்கள்
அலகு 1 இன் ஏனைய பகுதிகளுக்கான குறிப்புகளை படிப்பதற்கு, இங்கே அழுத்தவும்.
No comments:
Post a Comment