பெளதீகவியலில் அடிப்படையான பௌதீக கணியங்கள் 7 இருக்கின்றன. அவையாவன: நீளம், திணிவு, நேரம், வெப்பநிலை, மின்னோட்டத்தின் அளவு, ஒளிச்செறிவு மற்றும் பதார்த்தத்தின் அளவு. இவற்றுடன் தளக்கோணம் மற்றும் திண்மக்கோணம் என்பன மிகைநிரப்பு கணியங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
அடிப்படைப் பௌதீக கணியங்களினதும் மிகைநிரப்பு கணியங்களினதும் அலகுகளும் அவற்றின் குறியீடுகளும் பின்வரும் அட்டவணையில் தரப்பட்டுள்ளன.
மேலுள்ள அட்டவணையில் தரப்பட்டுள்ள அலகுகள் அனைத்தும் சர்வதேச அலகு முறைமைக்கு ஏற்ப எழுதப்பட்டுள்ளன.
அடிப்படைக்கணியங்கள் தவிர்ந்த ஏனைய கணியங்கள் அனைத்தும் பெறுதிக் கணியங்கள் எனப்படும். அதாவது, அடிப்படைக் கணியங்களின் சேர்கையால் பெறப்படுபவை பெறுதிக் கணியங்கள் ஆகும். பெறுதிக் கணியங்களுக்கு சில உதாரணங்கள்:
பரப்பு, கனவளவு, அடர்த்தி, கதி, வேகம், ஆர்முடுகல், அமர்முடுகல், விசை, வலு, வேலை, சக்தி, மற்றும் பல...
சில பெறுதிக் கணியங்கள் விசேட பெயர்களையும் விசேட குறியீடுகளையும் கொண்டுள்ளன. அவை பின்வரும் அட்டவணையில் தரப்பட்டுள்ளன.
பெரும்பாலான பௌதீக கணியங்கள் அலகுகளைக் கொண்டிருந்தாலும் சில பௌதீக கணியங்கள் அலகுகளற்றவை. பொதுவாக பின்னங்கள் மற்றும் சதவீதங்கள் அலகுகள் அற்றவை. அலகுகள் அற்ற கணியங்களுக்கு சில உதாரணங்கள்:
பின்னவழு, சதவீதவழு, சாரடர்த்தி, சாரீரப்பதன், முறிவுச்சுட்டி ...
குறிப்பு: அலகுகளைக் கொண்ட, அலகுகளைக் கொண்டிராத எல்லா பௌதீக கணியங்களும் எண் பெறுமாணத்தைக் கொண்டவையாகும்.
அலகு 1 இன் ஏனைய பகுதிகளுக்கான குறிப்புகளை படிப்பதற்கு, இங்கே அழுத்தவும்.
அடிப்படைப் பௌதீக கணியங்களினதும் மிகைநிரப்பு கணியங்களினதும் அலகுகளும் அவற்றின் குறியீடுகளும் பின்வரும் அட்டவணையில் தரப்பட்டுள்ளன.
அடிப்படைக் கணியங்கள் | அலகு | குறியீடு |
---|---|---|
திணிவு | கிலோகிராம் | \(\textrm{kg}\) |
நீளம் | மீற்றர் | \(\textrm{m}\) |
நேரம் | செக்கன் | \(\textrm{s}\) |
மின்னோட்டம் | அம்பியர் | \(\textrm{A}\) |
வெப்பவியக்கவியல் வெப்பநிலை | கெல்வின் | \(\textrm{K}\) |
ஒளிர்வுச் செறிவு | கண்டெலா | \(\textrm{cd}\) |
பதார்த்தத்தின் அளவு | மூல் | \(\textrm{mol}\) |
தளக் கோணம் | ஆரையன் | \(\textrm{rad}\) |
திண்மக் கோணம் | திண்மவாரையன் | \(\textrm{sr}\) |
மேலுள்ள அட்டவணையில் தரப்பட்டுள்ள அலகுகள் அனைத்தும் சர்வதேச அலகு முறைமைக்கு ஏற்ப எழுதப்பட்டுள்ளன.
அடிப்படைக்கணியங்கள் தவிர்ந்த ஏனைய கணியங்கள் அனைத்தும் பெறுதிக் கணியங்கள் எனப்படும். அதாவது, அடிப்படைக் கணியங்களின் சேர்கையால் பெறப்படுபவை பெறுதிக் கணியங்கள் ஆகும். பெறுதிக் கணியங்களுக்கு சில உதாரணங்கள்:
பரப்பு, கனவளவு, அடர்த்தி, கதி, வேகம், ஆர்முடுகல், அமர்முடுகல், விசை, வலு, வேலை, சக்தி, மற்றும் பல...
சில பெறுதிக் கணியங்கள் விசேட பெயர்களையும் விசேட குறியீடுகளையும் கொண்டுள்ளன. அவை பின்வரும் அட்டவணையில் தரப்பட்டுள்ளன.
பெற்ற கணியங்கள் | அலகு | குறியீடு |
---|---|---|
விசை | நியூட்டன் | \(\textrm{N} = \textrm{kg m}\textrm{ s}^\textrm{-2}\) |
அமுக்கம் | பஸ்கால் | \(\textrm{Pa} = \textrm{kg m}^\textrm{-1}\textrm{ s}^\textrm{-2}\) |
சக்தி, வேலை | யூல் | \(\textrm{J} = \textrm{kg m}^\textrm{2}\textrm{ s}^\textrm{-2}\) |
வலு | உவாற்று | \(\textrm{W} = \textrm{kg m}^\textrm{2}\textrm{ s}^\textrm{-3}\) |
மீடிறன் | ஹேட்ஸ் | \(\textrm{Hz} = \textrm{ s}^\textrm{-1}\) |
மின்னேற்றம் | கூலோம் | \(\textrm{C} = \textrm{A s}\) |
மின்னியக்க விசை | உவோற்று | \(\textrm{V} = \textrm{kg m}^\textrm{2}\textrm{ s}^\textrm{-3}\textrm{ A}^\textrm{-1}\) |
மின்தடை | ஓம் | \(\textrm{U} = \textrm{kg m}^\textrm{2}\textrm{ s}^\textrm{-3}\textrm{ A}^\textrm{-2}\) |
மின்கடத்து திறன் | சைமன்ஸ் | \(\textrm{S} = \textrm{kg}^\textrm{-1} \textrm{ m}^\textrm{-2}\textrm{ s}^\textrm{3}\textrm{ A}^\textrm{2}\) |
ஊடுபுகவிடுந் திறன் | ஹென்றி | \(\textrm{H} = \textrm{kg m}^\textrm{2}\textrm{ s}^\textrm{-2}\textrm{ A}^\textrm{-2}\) |
கொள்ளளவம் | பரட் | \(\textrm{F} = \textrm{kg}^\textrm{-1}\textrm{ m}^\textrm{-2}\textrm{ s}^\textrm{4}\textrm{ A}^\textrm{2} \) |
காந்தப்பாயம் | உவேபர் | \(\textrm{Wb} = \textrm{kg m}^\textrm{2}\textrm{ s}^ \textrm{-2}\textrm{ A}^\textrm{-1} \) |
காந்தப்பாய அடர்த்தி | டெஸ்லா | \(\textrm{T} = \textrm{kg s}^\textrm{-2}\textrm{ A}^\textrm{-1}\) |
பெரும்பாலான பௌதீக கணியங்கள் அலகுகளைக் கொண்டிருந்தாலும் சில பௌதீக கணியங்கள் அலகுகளற்றவை. பொதுவாக பின்னங்கள் மற்றும் சதவீதங்கள் அலகுகள் அற்றவை. அலகுகள் அற்ற கணியங்களுக்கு சில உதாரணங்கள்:
பின்னவழு, சதவீதவழு, சாரடர்த்தி, சாரீரப்பதன், முறிவுச்சுட்டி ...
குறிப்பு: அலகுகளைக் கொண்ட, அலகுகளைக் கொண்டிராத எல்லா பௌதீக கணியங்களும் எண் பெறுமாணத்தைக் கொண்டவையாகும்.
அலகு 1 இன் ஏனைய பகுதிகளுக்கான குறிப்புகளை படிப்பதற்கு, இங்கே அழுத்தவும்.
No comments:
Post a Comment